ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (04 ஜனவரி 2023) கோவிலில் பால் அல்லது நீர் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (04 ஜனவரி 2023) கோவிலில் பால் அல்லது நீர் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜனவரி 04-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பார்ட்னர்ஷிப் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட சாதகமற்ற நாள். இயந்திரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்ற சொத்துக்களை வாங்குவது அதிக லாபத்தை உறுதி செய்யும். இன்று நீங்கள் நேர நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் முக்கிய விஷயங்களில் காலதாமதம் ஏற்பட்டு விடும். இன்று நீங்கள் பிறரிடம் பேசும் போது கனிவு மற்றும் மென்மையை கடைபிடிக்க வேண்டும். கைவினைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், புத்தகங்கள், மருந்துகள் மற்றும் நிதி உள்ளிட்ட பிசினஸில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்க செயல்திறன் மூலம் லாபம் ஈட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: க்ரீம் மற்றும் ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 1

நன்கொடைகள்: கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் நீண்ட நாள் உணர்வுகளை வெளிப்படுத்த சிறந்த நாள். முக்கியமான அல்லது ரகசியமான தகவலை உங்கள் உயரதிகாரிக்கு தெரிவிக்க விரும்பினால், பின்விளைவுகளுக்கு பயப்படாமல் செயல்படுங்கள். சில சட்ட சிக்கல்களை முறியடிக்க கடந்த கால உறவுகளை பயன்படுத்தி கொள்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதி, ரசாயனம், பில்டர்ஸ் மற்றும் அரசியல்வாதிகள் இன்று தங்கள் தொழிலில் புதிய உச்சம் காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ மற்றும் கிரே

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: கோவிலில் பால் அல்லது நீர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அரசு வேலை அல்லது ஒப்பந்தங்கள் சார்ந்த பணிகளை தொடங்கலாம். அரசியல்வாதிகள் தங்களது திறமை, அறிவு, செயல்திறனை வெளிப்படுத்த சாதகமான நாள். இன்று உங்கள் அறிவு மற்றும் பேச்சாற்றலால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். அரசியல்வாதிகள், இசைக்கலைஞர்கள், மின்னணு ஊடகங்கள், ஆட்டோமொபைல் தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர்கள் இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் சாதகமாக மாறும். இன்று செய்யும் முதலீடுகள் அதிக லாபம் தரும். காதலிப்பவர்கள் தங்கள் துணையிடம் உணர்வுகளை வெளிப்படையாக பரிமாறி கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பீஜ்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: பெண் ஒருவருக்கு குங்குமப்பூ கொடுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் எதில் செயல்பட்டாலும் சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு இன்று ஒரு பரபரப்பான நாள். மருத்துவம் மற்றும் விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு இன்று சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும். விவசாயம், உற்பத்தி, கைவினைப் பொருட்கள், பயிற்சி, விளையாட்டுப் பொருட்கள், வங்கி மற்றும் சோலார் எனர்ஜி துறையில் இருப்பவர்கள் இன்று தகவல் தொடர்பில் உறுதியாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ப்ளூ மற்றும் கிரே

அதிர்ஷ்ட நாள்: சனி

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: பிச்சைக்காரருக்கு வாழைப்பழம் கொடுக்கவும்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடினமாக உழைப்பதை விட இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நாள். உங்களின் ஆளுமை இன்று சுற்றியுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும். ஒரு நண்பர் அல்லது உறவினர் இன்று உதவி கேட்பார்கள். மறுக்காமல் செய்து கொடுங்கள். பேங்கர்ஸ் இன்று சிறப்பு அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். மாணவர்கள் தங்கள் கல்வியில் இன்று சாதனைகளை படைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: ஏழைகளுக்கு பச்சை இலை காய்கறிகளை தானமாக கொடுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பலரின் வெற்றி அல்லது வளர்ச்சிக்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள். குடும்பத்துடன் நேரம் செலவிட, புதிய வாய்ப்புகளை ஆராய சிறந்த நாள். புதிய உற்பத்தி அலகு அமைக்க நிலம் தேடுபவர்களுக்கு இன்று நல்ல சொத்து கிடைக்கும். நடிகர்கள் மற்றும் ஊடகத்துறையினர் இன்று வெற்றியை அனுபவிப்பார்கள். ஆடம்பரம் அனுபவிக்க, செழிப்பை அடைவதற்கும்,உற்சாக பயணம் செல்ல, வெகுஜன ஊடகங்களை எதிர்கொள்ள, வெற்றியைக் கொண்டாட இன்று சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு வெள்ளை இனிப்பு தானம் செய்யவும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சட்ட போராட்டம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களது உயர்ந்த ஞானத்தால் வெற்றி கிடைக்கும். விளையாட்டு, வணிக ஒப்பந்தங்கள், நேர்காணல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வீட்டு பெரியவர்களின் ஆசி அவசியம். இன்று கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்கவும். வெற்றி அல்லது இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நாள் முடிவில் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். அறிவாற்றலை வளர்த்துகொள்வதில் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள். மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். நன்கொடைகள் மற்றும் உடற்பயிற்சிகளில் நேரத்தை செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஒரு பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று புதிய நட்புகளை உருவாக்க, ஷாப்பிங் செல்ல, அரசு உத்தரவுகளை அணுக நல்ல நாள். நிலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் சுமூகமாக தீர்க்கப்படும். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களுக்கு இன்று அற்புதமான நாளாக அமையும். ஹீலர்ஸ், பொதுப் பேச்சாளர்கள், சமையல்காரர்கள், ஊடக துறையினர், நடிகர்கள், ஆடிட்டர்ஸ், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்று நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

நன்கொடைகள்: வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுக்கு சிவப்பு வளையல்களை கொடுங்கள்

ஜனவரி 4-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: டெய்சி இரானி, ஆதித்யா பஞ்சோலி, ஜீவா, நிருபா ராய், பிரதீப் குமார், குருதாஸ் மான்

First published:

Tags: Numerology, Tamil News