ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 டிசம்பர் 2022) கோவிலில் பால் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 டிசம்பர் 2022) கோவிலில் பால் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 16-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பிராக்டிகலாக சிந்தித்து இன்று பார்ட்னர்ஷிப்பை தவிர்க்கவும். நெருக்கமானவர்களுடனான உங்களது பரஸ்பர நம்பிக்கை இன்று பலவீனமடைய கூடும். சட்டரீதியான அல்லது உத்தியோகபூர்வ பிரச்சனைகளை தீர்க்க உதவ கூடியவரின் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று தங்களை தேடி வரும் புதிய திட்டங்களை ஏற்க வேண்டாம். இன்று சூரிய பகவானை வணங்குவது நல்ல பலன்களை தரும்.

  அதிர்ஷ்ட நிறம்: பீஜ்

  அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

  அதிர்ஷ்ட எண்: 3

  நன்கொடைகள்: ஆசிரமங்களில் எண்ணெய் தானம் செய்யுங்கள்

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கடந்த கால உறவுகள் அல்லது அதன் நினைவுகள் உங்களை இன்று தொந்தரவு செய்யலாம், ஆனால் அதை கண்டுகொள்ளாதீர்கள். வாழ்வில் செழிப்பாக இருக்க நீங்கள் சில குடும்ப பொறுப்புகளை ஏற்று கொள்ள வேண்டும். காதல் உணர்வுகளை நிரந்தர உறவாக மாற்ற சிறந்த நாள். வணிக ரீதியான விஷயங்கள் சில தாமதங்களுடன் நிறைவேறும். அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மருத்துவர்கள், நகை வியாபாரிகள் ஆவணத்தில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: டீல் மற்றும் பீச்

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

  நன்கொடைகள்: கோவில் அல்லது தேவைப்படுபவர்களுக்கு வெள்ளி நாணயம் தானம் செய்யுங்கள்

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். இன்று உங்களுக்கு பொறுமை மற்றும் பாசிட்டிவ் எண்ணம் தேவை. இசையமைப்பாளர்கள், டிசைனர்கள்,செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்டோரின் தனிப்பட்ட வாழ்க்கை இன்று சிறப்பாக இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

  நன்கொடைகள்: தேவைப்படுபவர்களுக்கு பச்சை மஞ்சளை தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  புதிய வாய்ப்புகள் வந்தால் அதை நன்கு யோசித்து ஏற்று கொள்ளவும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். ஆன்மீகம் உணர்வு இன்று உங்கள் நாளை அமைதியாக வைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: ஆதரவற்றோர் இல்லத்தில் ஆடைகளை தானம் செய்யுங்கள்

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பார்ட்னரிடம் இன்று நீங்கள் உஷாராக இல்லாவிட்டால் துரோகத்தை சந்திக்க நேரிடும். நாளின் பிற்பகுதியில் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிடைப்பற்கான வாய்ப்புகளை மன அழுத்தம் மற்றும் குழப்பம் குறைத்து விடும். இன்று சொத்து முதலீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். விளையாட்டு வீரர்கள் மற்றும் ட்ராவலர்கள் சிறந்த நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். பார்ட்னர்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

  அதிர்ஷ்ட நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  நன்கொடைகள்: நண்பருக்கு துளசி செடியை நன்கொடையாக கொடுங்கள்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களை தவிர வேறெதுவும் உங்களுக்கு மனஅமைதியை தர முடியாது. எனவே உங்களது பொறுப்புகள் கூடினாலும் அதை மனஅழுத்தம் இன்றி நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.கடனாக கொடுத்த பணம் இன்று உங்களுக்கு திரும்ப கிடைக்கும். நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், மருத்துவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நாள்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பீச்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு எஃகு பாத்திரம் தானமாக கொடுங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் வார்தைகளை வெளியில் விடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் மூலம் இன்று உங்களுக்கு சில தொந்தரவுகள் இருக்கலாம். பணியிடத்தில் மேலதிகாரி அல்லது சீனியர்களிடம் ஜாக்கிரதையாக பேசவும். இன்றைய தினம் ஆடிட் தேவை என்பதால் ஆவணங்களை நம்ப வேண்டாம். நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் வரை வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 7

  நன்கொடைகள்: கோவிலில் பால் தானம் செய்யுங்கள்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று இலக்குகளை அடைய நீங்கள் கடும் முயற்சிகளை எடுக்க வேண்டும். உங்களுக்கு வழிகாட்டியாக உங்களுடன் பணிபுரியும் சீனியர் இருப்பார். வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும். குடும்பத்துடன் நேரம் செலவிடுவது இன்று அவசியம். நீண்ட தூர பயணத்தை இன்று தவிர்க்கவும். ஆன்மீகம் மற்றும் காதல் உறவுகளில் இன்று நம்பிக்கை அதிகரிக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை சாப்பிட கொடுங்கள்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கட்டிடக்கலை, இன்டீரியர் டிசைன் டீச்சிங், சட்டம், ஆலோசனை மற்றும் நிதித்துறையை சேர்ந்தவர்கள் இன்று புதிய உச்சம் காண்பார்கள். வணிகம் அல்லது வேலையில் அதிகாரம் பெற, பழைய நண்பர்களை சந்தித்து மகிழ இன்று நல்ல நாள். . குடும்பத்தினருடன் உங்கள் காதல் உறவை பற்றி வெளிப்படுத்த ஏற்ற நாள். இன்று கோபத்தை கட்டுப்படுத்தினால் நினைத்தது நிறைவேறும் வாய்ப்புகள் அதிகம்.

  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

  நன்கொடைகள்: பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானம் செய்யுங்கள்

  டிசம்பர் 16-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஜோதி அம்கே, எச்டி குமாரசாமி, ஹர்ஷ்தீப் கவுர், அதுரத்தி சுப்பா ராவ், ஹர்ஷ்வர்தன் ரானே, ஸ்ரீராம் பாட்டீல்

  First published:

  Tags: Numerology, Tamil News