Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (24 டிசம்பர் 2022) கோவிலில் தயிர் தானமாக கொடுக்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (24 டிசம்பர் 2022) கோவிலில் தயிர் தானமாக கொடுக்கவும்.!

எண்கணித பலன்

எண்கணித பலன்

Numerology | டிசம்பர் 24-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்கள் மற்றும் பெண் கலைஞர்கள் இன்று சிறப்பான உயரங்களை தொடுவர். எதிர்கால வாய்ப்புக்கு தகுந்தாற்போல உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் அலுவலக பிரச்சினைகள் மற்றும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு அளிக்கக் கூடிய சமூகத் தொடர்புகள் உங்களுக்கு கிடைக்கும். டிசைனர்கள், விளையாட்டு வீரர்கள் புதிய வாய்ப்பை ஏற்கும் முன் யோசிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளின் தொடக்கத்தில், உங்கள் நெற்றியில் சந்தனம் பூசிக் கொள்ளவும். இல்லத்தரசிகள் வீட்டில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து விருந்தினர்களை உபசரிக்கவும். உங்கள் காதல் உணர்வுகளை தூண்டக் கூடிய ரொமாண்டிக் நாளாக இன்றைய நாள் அமையும். வணிக ரீதியிலான பொறுப்புகளை கொஞ்சம் தாமதத்துடன் நிறைவு செய்வீர்கள். பயணங்களை தவிர்க்கவும். மருத்துவர்கள், கல்வியாளர்கள் ஆவணங்களை கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - கோவிலில் தயிர் தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டுக்கு அருகே வாழை மரக்கன்று நட்டு, அதற்கு 9 நாட்களுக்கு சர்க்கரை தண்ணீர் அல்லது தயிர் ஊற்றி வரவும். உங்கள் புத்தாக்க சிந்தனை, கல்வி ரீதியான அறிவு மற்றும் மெய்மறக்கும் வார்த்தைகளால் பிறரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். யோகா பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோருக்கு பணி சார்ந்த வளர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - கோவிலில் மஞ்சள் நிற சாதம் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டிற்கு உள்ளே துளசிச் செடி வைக்கவும். புதிய ஆதாரங்கள் அல்லது புத்தாக்க சிந்தனைகள் மூலமாக பணம் ஈட்டுவதற்கான நாளாகும். இடைத்தரகர்கள், கட்டுமான தொழில், இயந்திரம், உலோகம், மருந்து விற்பனை உள்ளிட்ட தொழில்களில் தொடர்புடையவர்கள் இன்று ஆவணங்களை கையெழுத்திடுவதை தவிர்க்கவும். பண மேலாண்மை திறன்களின் மூலமாக நீங்கள் சிறப்பான லாபம் அடைவீர்கள். ஒரு தந்தையாக பெருமை கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் க்ரே

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் இரண்டு தேங்காய்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டிற்கு நடுவே எலெக்ட்ரிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. இன்றைய தினம் விநாயகருக்கு பூஜை செய்து அவரது ஆசிகளைப் பெறவும். காலைப் பொழுதில் புல் தரைகளில் வெறும் கால்களுடன் நடைபயிற்சி செய்யவும். பலமான சமூகத் தொடர்புகள் மூலமாக இன்றைய தினம் உங்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும். இன்றைய தினம் குழப்பங்களை தவிர்க்கவும். பெரும் முடிவுகளை எடுக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீன் மற்றும் வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - கோவிலில் துளசிச் செடி தானமாக வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் கிருஷ்ணர் மற்றும் ராதைக்கு லட்டு படையல் வைக்கவும். இன்றைய தினம் சௌகரியமான நேரத்தில் பணி செய்வீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை கடினம் மிகுந்ததாக மாறும். இன்றைய தினம் வீட்டில் இருந்து பணி செய்வது நல்லது. ஒரு குழு தலைவராக, ஒரு சமூகத்தின் தலைவராக பிறரின் அன்பை பெறும் அதிர்ஷ்டம் கொண்டவராக நீங்கள் இருப்பீர்கள். குழந்தைகளின் செயல்பாடு பெற்றோருக்கு பெருமையளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களில் ஸ்டீல் பாத்திரம் கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சிவனுக்கு பால் மற்றும் தயிர் அபிஷேகம் செய்யவும். பிறரிடம் சிரம் தாழ்ந்து, அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ள கற்றுக் கொள்ளவும். தற்சமயம், இரு கைகளையும் விரித்து பிறரது பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவும். சின்ன குழுவில் பணி செய்வதையே நீங்கள் விரும்பினாலும் கூட, இன்றைய தினம் சக பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருக்கும். தம்பதியர்களுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஆசிரமங்களில் புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுடைய மூர்க்கத்தனமான குணத்தை கைவிட வேண்டும் என்றால் அலுவலக மேஜையில் கிறிஸ்டல் குவார்ட்ஸ் வைக்கவும். தெருவில் நடமாடக் கூடிய விலங்குகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்கவும். புதிய வாய்ப்புகள் மற்றும் உறவுகளை ஏற்க தயாராக இருக்கவும். பணியிடத்தில் சீனியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். வர்த்தக ரீதியான பணப் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு குடிநீர் வைக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு கிடைக்க இருக்கின்ற நிலையில், நீங்கள் இப்போது ரிலாக்ஸ் ஆக உணருவீர்கள். கற்பித்தல், சட்டம், ஆலோசனை, நிதித்துறை தொடர்புடைய நபர்கள் இன்று புதிய உயரத்தை தொடுவீர்கள். பழைய நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களை அணுகுவதற்கு மிகச் சிறப்பான நாளாகும். இன்றைய தினம் சிவப்பு நிற ஆடைகளை அணியவும். உங்கள் திருமண ஆசையை வீட்டில் வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு தர்பூசணி வழங்கவும்.

டிசம்பர் 24 அன்று பிறந்த பிரபலங்கள் : அனில் கபூர், முகமது ராஃபி, பியூஷ் சாவ்லா, தாகுபதி சுரேஷ், நெப்ராஸ்கா சோப்ரா, கிருஷ்ண பிரசாத் பட்டாராய்,

First published:

Tags: Numerology, Tamil News