முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 18, 2023) கோவிலில் சந்தனம் கொடுக்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 18, 2023) கோவிலில் சந்தனம் கொடுக்கவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | பிப்ரவரி 18-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் உங்கள் கனவுகள் நிறைவேறும். நீங்கள் ஒரு போராளியை போல வெற்றி பெறுவீர்கள். வணிக நடவடிக்கைகளில் உங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம். உங்கள் புத்தாக்க பேச்சு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். வாதம் வருகின்ற இடத்தில் சில நிமிடம் அமைதி காக்கவும். பிரச்சினைகளை கடந்து செல்லவும். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் போன்றோருக்கு புகழ் மேலோங்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - பீச்

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3

  தானம் - குழந்தைகளுக்கு ஆரஞ்சு பேனா வழங்கவும்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் பேச்சுகளில் ராஜீய நடவடிக்கை இருக்க வேண்டும். கடந்த கால கசப்பான நினைவுகளை புறம்தள்ளவும். உங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிட உகந்த நாளாகும். ஆலோசனை நிறுவனங்களுக்கு சிறப்பான வளர்ச்சி காணப்படும். இன்றைய தினம் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யலாம். காதல் உறவுகள் மலரும்.

  அதிர்ஷ்ட நிறம் - பிங்க் மற்றும் வான் நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 2

  தானம் - பிச்சைக்காரர்களுக்கு சர்க்கரை தானம் செய்யவும்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  செவ்வாய் கிரகத்தினுடைய சக்தியால் உங்களின் புத்தாக்க சிந்தனைகள் மேம்படும் மற்றும் புதிய தேர்வுகளுக்கு தயார் ஆகலாம். நீங்கள் பொது வாழ்க்கையில் இருப்பவர் என்றால் உங்கள் புகழ் இன்று அதிகரிக்கும். நீங்கள் பணத்தை அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது. ஆடைகள் அல்லது அலங்கார பொருட்களை வாங்குவதற்கு சிறப்பான நாளாகும். இன்றைய தினம் மஞ்சள் நிற உணவு சாப்பிடவும்.

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு

  அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

  தானம் - கோவிலில் சந்தனம் கொடுக்கவும்.

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் விலங்குகளுக்கு சேவை செய்யவும். பெரியவர்களுக்கு உகந்த மரியாதை கொடுப்பதுடன், அவர்களது ஆசிர்வாதத்தை பெறவும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமானதாக அமையும். வணிக ஒப்பந்தங்கள் தாமதமின்றி நிறைவேறும். நிதி சார்ந்து மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்கும். உலோகம் மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் - பிச்சைக்காரர்களுக்கு ஆடை தானமாக கொடுக்கவும்.

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பெரிய சதவீதத்துடன் கூடிய லாபத்தை இன்று பெறுவீர்கள். உங்களின் சோம்பல் தனத்தை முறித்து, ஆறாம் அறிவை இன்று உபயோகிக்கவும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைப்பதன் மூலமாக நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழில் சார்ந்தவர்களுக்கு இன்று லாபம் கிடைக்கும். உங்கள் பார்ட்னர் வெளிப்படுத்தும் அன்பு மற்றும் மரியாதையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் பிரவுண்

  அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 5

  தானம் - வளர்ப்பு பிராணிகளுக்கு ஜூஸ் வைக்கவும்.

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கலைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இன்று சிறப்பான நாளாகும். உங்கள் பார்ட்னரின் மென்மையான அணுகுமுறை உங்கள் உறவை பலப்படுத்துவதாக அமையும். காதல் உறவால் வீட்டில் மகிழ்ச்சி திரும்பும். உணவு, நகை, ஆடை விற்பனை போன்ற தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய தினம் வாழ்க்கையில் வளம் மற்றும் நிறைவான எண்ணம் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - வயலெட்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - பெண் பணியாளருக்கு வளையல் வழங்கவும்.

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் தாயின் ஆசிர்வாதங்களை பெற்று, வெற்றியை நோக்கி பயணிக்கவும். இன்றைய தினம் உங்கள் பார்ட்னர்கள் மற்றும் சக பணியாளர்கள் மீது நம்பிக்கை கொள்ளலாம். உங்கள் அறிவுக்கு ஏற்றபடி அனைத்து தளங்களில் இருந்தும் வரக் கூடிய சவால்களை ஏற்கவும். உங்கள் தாயார், சகோதரி அல்லது மனைவியிடம் இருந்து வரும் பரிந்துரைகளை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளவும்.

  அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9

  தானம் - ஆசிரமத்தில் கோதுமை தானம் செய்யவும்.

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கோபத்தை மறந்து, உங்கள் மனம் சொல்வதை கேட்கவும். அரசு அதிகாரிகள், விற்பனை பிரதிநிதிகள், கட்டுமான நிறுவனதாரர்கள், ஊடக பணியாளர்கள் போன்றோருக்கு இன்று வளர்ச்சி காத்திருக்கிறது. சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமானதாக அமையும். எனினும் சட்ட வழக்குகளுக்கு இப்போதைக்கு தீர்வு கிடைக்காது. தனிநபர்கள், பார்ட்னருடன் வாதம் வருகிறபோது அமைதியாக இருக்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - தேவை உள்ளவர்களுக்கு உணவளிக்கவும்.

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் சவால் மிகுந்த முடிவுகளை எடுக்க வேண்டாம். எதிர்கால லாபம் மற்றும் புகழ் ஆகிய இரண்டுமே ஒன்றோடு, ஒன்று சேர்ந்து வரும். இன்றைய தினம் அதிர்ஷ்டம், பணவரவு, சொகுசு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். காதலில் இருப்பவர்கள் இன்று தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 8

  தானம் - சிவப்பு நிற பருப்பு தானம் செய்யவும்.

  பிப்ரவரி 18 அன்று பிறந்த பிரபலங்கள் : சஜீத் நாடியாவாலா, ராமகிருஷ்ணா, சுமீத் சாஹல், மானு பகேர் நிம்மி, முகமது ஜாஹுர் காய்யம்,

  First published:

  Tags: Numerology, Tamil News