#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று நேரம் எதிர்மறையாக இருப்பது போல உணர்ந்தால் புதிய திட்டங்களை செயல்படுத்தாமல் நாளின் ஓட்டத்திலேயே செல்லுங்கள். புதிய வேலை வாய்ப்பு, வியாபாரத்தில் புதிய முதலீடு அல்லது புதிய வீடு உள்ளிட்ட விஷயங்களில் முடிவுகளை தள்ளிப் போட வேண்டிய நாள். உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைவில் கொள்ளுங்கள். மருத்துவ பயிற்சியாளர்களுக்கு இன்று ஒரு சிறப்பு வாய்ந்த நாள். விவசாயம் மற்றும் கல்வி தொழிலில் லாபம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: அக்வா
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: ஆசிரமத்தில் கோதுமையை தானம் செய்யுங்கள்
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களின் தன்னம்பிக்கை இன்று வெற்றிக்கும் காரணமாக இருக்கும். உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாக பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்பதால், விழிப்புடன் இருக்க நினைவில் கொள்ளுங்கள். ஏற்றுமதி இறக்குமதி துறையில் இருப்பவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தரகர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் இன்று வெற்றியை அனுபவிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களது படைப்பாற்றல் மிக்க சிந்தனை மற்றும் பேச்சு திறமை காரணமாக அனைவரையும் ஈர்ப்பீர்கள். எந்த சூழலிலும் வேலை செய்யும் அளவுக்கு நீங்கள் இன்று நெகிழ்வாக இருப்பீர்கள். எனவே வெற்றி வெகு தொலைவில் இல்லை. இன்று நீங்கள் பணம் மற்றும் பொருட்களை கவனமாக கையாள வேண்டும். கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் முதலீடு செய்ய இன்று ஏற்ற நாள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
நன்கொடைகள்: ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெயை தானம் செய்யுங்கள்
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் இன்று உச்சத்தை காண்பார்கள். உங்கள் பண விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க தகுந்த நாள். இன்று பச்சை இலை காய்கறிகளை தானம் செய்வது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க உதவும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட முடியாத அளவுக்கு பிசியாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் கிரே
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு காலணிகளை தானம் செய்யுங்கள்
#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்களுக்கு ஏற்படும் தடைகளை குறைப்பதில் அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும். மறைத்து வைத்திருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இன்று ஏற்ற நாள். புதிய இயந்திரங்கள் வாங்க, சொத்துக்களை விற்க, உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட மற்றும் பயணத்திற்கு செல்ல சிறந்த நாள். செய்தி அறிவிப்பாளர்கள், நடிகர்கள், கைவினை கலைஞர்கள், பொறியாளர்களுக்கு இன்று சிறந்த நாள்.
அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடைகள்: ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்களது ஆக்கபூர்வமான செயல் உங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவும். இன்று உங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நன்மைகளை அனுபவிப்பீர்கள். வடிவமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இன்று சிறப்பு பலன்களை பெறுவார்கள். உங்கள் மீது செலுத்தப்படும் குடும்ப பாசம் உங்களுக்கு ஆதரவையும், செழிப்பையும் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
நன்கொடைகள்: ஏழைகளுக்கு அன்னதானம் கொடுங்கள்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
வியாபாரிகளுக்கு தொழில் வளர்ச்சி, வெற்றி வீதம் அதிகரிக்கும். நீங்கள் நம்பிக்கை வைத்த நபர் மீது உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டாலும் நீங்கள் ஒரு பிராக்டிக்கல் நபராக இருப்பதால் விரைவில் அதிலிருந்து மீள்வீர்கள். இன்று வியாபாரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். எதிர் பாலினத்தவர் மூலம் உங்களுக்கான அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: ஆதரவற்றோர் இல்லத்தில் பால் தானம் செய்யுங்கள்
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களை சுற்றியுள்ள அனைவரும் உங்களை விசுவாசமாக பின்பற்றுபவர்கள் என்பதால் இன்று நீங்கள் தலைமைத்துவத்தை அனுபவிக்க வேண்டிய நாள் இது. பிஸியான நாளாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும். முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: ஏழைகளுக்கு குடை தானம் செய்யுங்கள்
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு புகழ், வேடிக்கை, ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். இன்று உங்களுக்கான நிதி ஆதாயம் மற்றும் சொத்து பதிவுகள் சுமூகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: சிவப்பு நிற கைக்குட்டையை தானம் செய்யுங்கள்
பிப்ரவரி 17-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: சிவகார்த்திகேயன், கே சந்திரசேகர் ராவ், அருணோதய் சிங், பிரபுல் படேல், ரவி டாண்டன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News