முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 11, 2023) ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 11, 2023) ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | பிப்ரவரி 11-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் மந்தமானதாக இருக்கும். சட்ட விவகாரங்கள், ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது, நேர்காணலுக்கு தயாராவது போன்ற நடவடிக்கைகள் சிக்கலானதாக அமையும். உங்களுக்கு கிடைக்கும் பணப்பலன் அல்லது இலக்குகளை நீங்கள் நிறைவு செய்வதை பார்த்து சக ஊழியர்கள் பொறாமை கொள்வார்கள். உங்கள் கைகளில் வெற்றி தவழ வேண்டும் என்றால் அலுவலகத்தில் சீனியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர் பாலினத்தவருடன் விவாதம் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் திட்டங்களுக்கு எதிரான பாதையில் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும். அலுவலகத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்கு ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தை தேவைப்படுகிறது. உங்கள் அன்புக்குரிய நபர்களுடன் உணர்வுப்பூர்வமான நேரத்தை செலவிட வேண்டிய தருணம் இது. நிறைவேறாது என நினைத்திருந்த கனவுகள் நிறைவேறும். பொறுமையாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு பால் வைக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

திருமண வரன் தேடி வரும். உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும். சொத்து தொடர்புடைய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். கடந்த கால கசப்புகளை மறந்து, உங்கள் மனதில் இருந்து பேசினால் இன்றைய தினம் சிறப்பாக அமையும். சமூகத்துடன் இணைந்து பழகவும், நண்பர்களை ஈர்க்கவும் சரியான தருணம் இது. நடனம், சமையல், கற்பித்தல் போன்றவற்றில் உங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 7

தானம் - கோவிலில் குங்குமம் கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி புதிய விஷயங்களில் முதலீடு செய்யவும். வணிக திட்டங்களை செயல்படுத்துவீர்கள். மார்க்கெட்டிங் செய்வதில் அதிக நேரம் செலவிடுவீர்கள். பயணம் செய்பவர்கள் அல்லது இயந்திரங்களை கையாளுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட பந்தம் என்பது குழப்பம் இன்றி தெளிவானதாக அமையும். மனம் தெளிவு பெற காவி நிற இனிப்புகள், சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - நண்பருக்கு துளசிச் செடி தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணம் அல்லது சுதந்திரத்தை அளவு கடந்து பயன்படுத்த வேண்டாம். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும்போது கட்டுப்பாடு தேவை. அது பிறர் மனதை காயப்படுத்தக் கூடும். அதிக அபாயம் கொண்ட முடிவுகளை எடுக்க வேண்டாம். முதலீடுகளை அச்சமின்றி மேற்கொள்ளலாம். நேர்காணலில் மகிழ்ச்சியாக பங்கேற்கலாம். சொத்து ரீதியான முடிவுகள் கச்சிதமாக அமையும். பயண ஆர்வலர்கள் வெளிநாட்டு பயணம் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்றவர்களுக்கு பச்சை நிற பழங்கள் வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் பெரும் திரள் கூட்டத்தில் பங்கேற்று புகழ் அடையலாம். உங்கள் ஆற்றல் எல்லையற்றதாக இருக்கிறது. அதை ஒற்றை திசை நோக்கி பயன்படுத்தவும். இன்றைய தினம் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். குழந்தைகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வாகனம், வீடு, இயந்திரம் அல்லது நகை வாங்குவதற்கு சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா மற்றும் பீச்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளை நிற இனிப்புகளை வழங்க வேண்டும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலக மேஜையில் மூங்கில் செடி வைத்தால் அதிர்ஷ்டம் கை கூடும். பழைய தொடர்புகளை மேம்படுத்துவதற்கான நாள் இதுவாகும். இன்றைய தினம் தோராயமாக எடுக்கின்ற முடிவுகள் வணிகத்தில் உங்களுக்கான பொறுப்புகளை குறைக்கும். இன்றைய தினம் பார்ட்னர் அல்லது வாடிக்கையாளர்களுடன் எந்தவித சமரசங்களையும் செய்து கொள்ளக் கூடாது. திருமண ஏற்பாடுகள் கை கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் திருமணத்திற்கான சரியான பொருத்தம் தேடி வருகிறீர்கள் என்றால், அது இன்றைக்கு அமையும். அரசுத் தொடர்புகள் மூலம் கிடைக்கின்ற பலம் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சட்ட வழக்குகளுக்கு பணம் கொடுப்பது அல்லது ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பரிவர்த்தனைகளில் பிஸியாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் அதிர்ஷ்டம் கிடைக்கும் சிவப்பு நிற பேனா பயன்படுத்தவும். புகழ்ச்சி பெறுவதில் தடை எதுவும் இருக்காது. உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு நடக்கவும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண பரஸ்பர நம்பிக்கை அவசியமானது. காதலில் இருக்கும் நபர்கள் அதை தங்கள் பார்ட்னரிடம் வெளிப்படுத்தலாம். அரசியல், மீடியா, கல்வி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மாபெரும் வளர்ச்சி ஏற்பட உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பெண் தோழிக்கு அழகு சாதன பொருட்களை பரிசாக கொடுக்கவும்.

பிப்ரவரி 11 அன்று பிறந்த பிரபலங்கள் :

டினா அம்பானி, ஷெர்லின் சோப்ரா, மிமி சக்ரவர்த்தி, லூயிஸ் பேங்க்ஸ், ரஜத் கபூர், கோபி சந்த் நாரங்

First published:

Tags: Numerology, Tamil News