ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (31 டிசம்பர் 2022) ஆசிரமங்களுக்கு கோதுமை தானம் அளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (31 டிசம்பர் 2022) ஆசிரமங்களுக்கு கோதுமை தானம் அளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | டிசம்பர் 31-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எண் 1: (1, 19 20 28 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

  இன்றைய நாளில் பொறுமையாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் பொதுக்கூட்டங்களுக்கு செல்வதையும் பார்ட்டிகளுக்கு செல்வதையும் தவிர்ப்பது நல்லது. அறிவாற்றல் மூலம் மற்றவரை கவர்வீர்கள். பேச்சில் கவனம் தேவை. ஓவியர்கள் நடன கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோருக்கு தொழிலில் சில தடங்கல்கள் உண்டாகலாம்.

  அதிர்ஷ்ட நிறம்: பியஜ்

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்க்கிழமை

  அதிஷ்ட எண்: 1 மற்றும் 3

  தானம்: ஏழைகளுக்கு ஆரஞ்சு பழம் தானமளிக்க வேண்டும்

  எண் 2: (2, 11, 20, 29 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

  உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. எதிர்காலத்திற்காக திட்டமிட வேண்டும். திங்கட்கிழமைகளில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வர வேண்டும். உங்கள் உயர்வை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப விழாக்களில் பங்கேற்க வேண்டி வரலாம். உங்கள் வாழ்க்கை துணைக்கு பரிசு பொருட்களை அளிப்பீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

  அதிர்ஷ்ட தினம்: திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண்: 2

  தானம்: பிச்சைக்காரர்களுக்கு தயிர் தானமளிக்க வேண்டும்.

  எண் 3: (3, 12, 22, 30 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

  வேலை மற்றும் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சிக்கு தாமதமானாலும், உங்களை வழிநடத்தக்கூடிய உயர் அதிகாரி ஒருவரின் ஒத்துழைப்பு மூலம் வெற்றியை ஈட்டுவீர்கள். ஆடைகள், நகைகள் புத்தகங்கள் வாங்குவதற்கும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் இன்று ஏற்ற நாள். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் ஹோட்டல் துறையில் உள்ளவர்கள், டிசைனர்கள், ஆங்கர்கள், பயிற்சியாளர்கள், ஆகிய அனைவரும் குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

  அதிர்ஷ்ட தினம்: வியாழக்கிழமை

  அதிஷ்ட எண்: 3

  தானம் - ஆசிரமங்களுக்கு கோதுமை தானம் அளிக்க வேண்டும்

  எண் 4: (4,13,22,32 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

  உங்கள் குழந்தைகளை நினைத்து இன்று பெருமை கொள்வீர்கள். டிரேடிங்கில் உள்ளவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக அமையும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் சிறிது தடங்கல்களுக்கு பிறகு கிடைக்கும். கட்டிட தொழிலாளர்கள், கட்டிட தொழில் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள், ஆடை சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சைவ உணவுகளை உட்கொள்ளுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஊதா

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிஷ்ட எண்: 4

  தானம்: ஏதேனும் நண்பருக்கு மணி பிளான்ட் தானம் செய்ய வேண்டும்.

  எண் 5: ( 5, 14, 23 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

  விநாயகருக்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். உங்களை மதிக்காதவர்களை பற்றி கவலைப்படாமல் மற்றவரிடம் அன்பை செலுத்துவது நல்லது. குடும்பத்தினரிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். நல்ல லாபம் கிடைக்கும் நாள். டிரேடிங்கில் இருப்பவர்களுக்கு முதலீடுகள் செய்ய ஏற்ற நாள். பங்குச்சந்தை விளையாட்டு துறை அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு அன்று நல்ல வாய்ப்பாக அமையும்.

  அதிர்ஷ்ட நிறம்: அக்குவா

  அதிர்ஷ்ட தினம்: புதன்கிழமை

  அதிஷ்ட எண்: 5

  தானம்: கோயிலுக்கு வெள்ளி காயின் தானமளிக்க வேண்டும்

  எண் 6: (6, 15, 24 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

  ஒரு குழுவை வழி நடத்துவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் இதன் மூலம் எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: வயலட்

  அதிர்ஷ்ட தினம்: வெள்ளிக்கிழமை

  அதிஷ்ட எண்: 9

  தானம்: விலங்குகளுக்கோ அல்லது ஆசிரமத்திற்கோ பால் தானமளிக்க வேண்டும்.

  எண் 7: (7,16,25 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

  வருடத்திற்கு ஒரு முறையாவது கேது பூஜை செய்ய வேண்டும். பெற்றோர்களின் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தாய் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கேட்பது நல்லது. நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனை ஒன்று சரியாகும். நகை தொழில் செய்பவர்கள், வக்கீல்கள், விமான ஓட்டிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: வயலட்

  அதிர்ஷ்ட தினம்: திங்கள் கிழமை

  அதிஷ்ட எண்: 7, 9

  தானம்: ஆசிரமத்திற்கு கோதுமை தானம் அளிக்க வேண்டும்.

  எண் 8: (8,17,26 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

  வார்த்தைகளில் கவனம் தேவை. பெரிய நிறுவனங்களுடன் ஆனால் உங்களது தொடர்பு தற்போது சரிவரவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அதிக நன்மைகளை கொடுக்கும். எனவே பொறுமையாக இருப்பது நல்லது. சொத்துக்கள் விஷயத்திலும் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும்.

  அதிர்ஷ்டமான நிறம்: பர்பிள்

  அதிர்ஷ்ட தினம்: வெள்ளிக்கிழமை

  அதிஷ்ட எண்: 6

  தானம்: தேவைப்படுபவர்களுக்கு குடை தானம் அளிக்க வேண்டும்.

  எண் 9: (9, 18, 27 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

  உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் சம்பந்தமான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பேசன் துறையில் ஊடக துறையிலும் உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு இன்று புகழ் உண்டாகும். மாணவர்கள், பயிற்சியாளர்கள், இசை கலைஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், நடிகர்கள், பொறியாளர்களாகியவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்.

  அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன்

  அதிர்ஷ்டமான தினம்: செவ்வாய்

  அதிர்ஷ்டமான எண்: 9

  தானம்: கோவிலுக்கு குங்குமம் தானம் அளிக்க வேண்டும்.

  டிசம்பர் 31 ஆம் ஆண்டு பிறந்த பிரபலங்கள்: பிரபு, பிரியா பவானி சங்கர், சோட்டா ஷகீல், பிரியங்கா சர்க்கார், ஹர்பஜன் மண், விஷ்ணு தேவநாத சரஸ்வதி.

  First published:

  Tags: Numerology, Tamil News