#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உற்பத்தி துறையில் இருப்பவர்கள், வெளிநாட்டில் கல்வி பயிலுபவர்கள், சூரிய மின் உற்பத்தி துறையில் இருப்பவர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருக்கும் திருமணம் ஆகாத தம்பதியர்களுக்கு ஒப்புதல் கிடைக்கும். உங்கள் அறிவுத்திறன் உயர்வாக இருக்கும் மற்றும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - பீச் மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1
தானம் - ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யவும்.
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
தம்பதியர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்களுக்கு மனநிறைவு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தையும், பணத்தையும் செலவிடுங்கள். குறுகிய பயணத்திற்கு திட்டமிடலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - ஏழைகளுக்கு பால் தானம் செய்யவும்.
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
வீட்டின் நடுவே வைத்துள்ள எலெக்ட்ரிக் பொருளை அப்புறப்படுத்த வேண்டும். காலைப் பொழுதில் துளசியை மெல்ல வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் உண்டு. அரசு ஒப்பந்தப் பணிகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆலோசனையாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள், கல்வியாளர்கள் போன்றோருக்கு தற்போது சிறப்பான நேரம் அமைந்துள்ளது.
அதிர்ஷ்ட நிறம் - வயலெட்
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கவும்.
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
மருத்துவர்கள் மற்றும் விவசாயிகள் ஆவணங்களை கையாளும்போது கவனமுடன் இருக்கவும். பண பரிவர்த்தனைகள் செய்வதற்கும், வேலை தேடுவதற்கும் உகந்த நேரமாகும். திருமண ஏற்பாடுகள் பரிசீலனை செய்யப்படும். விவாதங்களின்போது கனிவான பேச்சை வெளிப்படுத்தவும். சொத்து முதலீடுகள் மூலமாக அதிக லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் க்ரே
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5 மற்றும் 6
தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் பாத்திரங்களை தானமாக கொடுக்கவும்.
#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களின் ஆதிக்க மனப்பான்மை காரணமாக பிரச்சினைகள் உண்டாகலாம். விநாயகருக்கு பூஜை செய்து, அவருடைய ஆசிகளை பெறவும். செய்தியாளர்கள், பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள், பயண ஆர்வலர்கள் போன்றோர் மூத்தவர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். நீண்ட பயணங்களை தவிர்க்கவும். உங்களுக்கான அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - விலங்குகளுக்கு தண்ணீர் வைக்கவும்.
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
சிங்கிளாக இருப்பவர்கள் புதிய பந்தத்தில் இணைவதற்கான நேரம் இது. உங்கள் பார்ட்னர், நண்பர், பெற்றோர், குழந்தைகள் அல்லது உறவினர்களுடன் பயணம் செய்வதற்கு திட்டமிடலாம். ஐடி அல்லது அழகுக்கலை தொழில் சார்ந்தவர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கிடைக்கும். உங்களுக்கான வாய்ப்புகள் கதவை தட்டும். திருமண ஏற்பாடுகள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது.
அதிர்ஷ்ட நிறம் - பிங்க் மற்றும் ஸ்குவா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு பால் தானம் செய்யவும்.
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உறவுகளில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவும். குடும்ப வாழ்க்கை மேம்படும். சிவன் மற்றும் கேது பகவான்களின் ஆசிர்வாதங்களை நீங்கள் பெற வேண்டியிருக்கும். புதிய வாய்ப்புகளை ஏற்கும் முன்பாக அதில் உள்ள சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்யவும். உங்கள் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றி நடக்கவும். தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஏழைகளுக்கு ஸ்டீல் பாத்திரங்களை தானம் செய்யவும்.
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களுக்கான வீட்டுப் பொறுப்புகள் அதிகரிப்பதால் தொடர்ந்து பிஸியாக இருப்பீர்கள். விலங்குகளுக்கு உணவளிக்கவும். அரசு நிறுவனங்களுடன் நீங்கள் வைத்திருக்கும் தொடர்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். விவசாயம், உற்பத்தி போன்ற துறைகளில் லாபம் கிடைக்கக் கூடிய சூழல் நிலவுகிறது. மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வயலெட்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவையுள்ளவர்களுக்கு ஆடை தானமாக வழங்கவும்.
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் வெற்றிக் கதையை நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது குழப்பங்களை ஏற்படுத்தக் கூடும். தம்பதியர்கள் தொடர்ந்து புன்னகைத்தபடி இருக்கலாம். உங்கள் நற்பெயரை கெடுக்கக் கூடிய மது வகைகளை தவிர்க்க வேண்டும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - பெண்களுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News