ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (25 டிசம்பர் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (25 டிசம்பர் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 25-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  நிதி ரீதியிலான முடிவுகளை இன்றைக்கு ஒத்திவைக்க வேண்டும். அனைத்து முடிவுகளும் சாதகமானதாக தான் இருக்கும் என்றாலும், உங்கள் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களை அது காயம் அடையச் செய்யும். உங்கள் பணித் திறனை மேம்படுத்தக் கூடிய ஒருவரை நீங்கள் சந்திக்க உள்ளீர்கள். தோல் உற்பத்தி பொருட்களை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - பெய்ஜ்

  அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3

  தானம் - ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யவும்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  ஒரு பவுலில் தண்ணீர் நிரப்பின் வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கவும். குடும்ப பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்கவும். உங்கள் ஆழ்மனம் சொல்வதை கேட்டு நடக்கவும். அதுதான் சிறப்பாக அமையும். இன்றைய தினம் ரொமாண்டிக் உணர்வுகள் நிரம்பியதாக இருக்கும். பெரிய நிறுவனங்களுடன் கை கோர்ப்பதற்கான நேரம் இது.

  அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

  தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவும்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  அரசியல் தலைவர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு சிறப்பான நாள் இதுவாகும். மீடியா துறையில் உள்ள பேச்சாளர்களுக்கு சிறப்பு மிகுந்த தருணம் இது. நிதி சார்ந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஹோட்டல் அதிபர்கள், எழுத்தாளர்களுக்கு பணி சார்ந்த வளர்ச்சி கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

  அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

  தானம் - தேவை உள்ளவர்களுக்கு சிவப்பு அரிசி தானம் செய்யவும்.

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அனைத்து முடிவுகளும் சாதகமானதாக அமையும். தற்போதைய திட்டங்களை மறு பரிசீலனை செய்யவும். தானியங்களை தானம் செய்தால் பல அற்புதங்கள் நிகழும். இன்று ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். தடகள வீரர்களின் பெற்றோர் பெருமை அடைவீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் - கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு உப்பு கலந்த உணவு கொடுக்கவும்.

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் உயர் அதிகாரி மற்றும் சக ஊழியர்கள் தற்போது உங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள். விற்பனை தொடர்பான இலக்குகள் அனைத்தையும் நிறைவு செய்வீர்கள். அதிர்ஷ்டத்தின் மூலமாக இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பண லாபம் கிடைக்க இருப்பதால் முதலீடுகள் குறித்து பரிசீலனை செய்யலாம்.

  அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

  அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 5

  தானம் - ஏழைகளுக்கு தயிர் வழங்கவும்.

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பரஸ்பர நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்படலாம். ஆகவே, உறவுகளிடம் கவனமாக இருக்கவும். உங்களை சுற்றியுள்ள நபர்கள் உங்கள் நேர்மையை தவறாக உபயோகிக்கக் கூடும். இன்றைய தினம் காதல் உணர்வுகள் உங்கள் மனதில் நிரம்பியிருக்கும். வீட்டுப் பொறுப்புகளை அளவுக்கு அதிகமாக சுமக்க வேண்டாம்.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - ஏழைகளுக்கு வீட்டு உபயோக பொருட்களை தானம் செய்யவும்.

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களுக்கு லாபம் கிடைத்தாலும், நஷ்டம் அடைந்தாலும் மூத்தவர்களின் ஆலோசனையை பின்பற்றி நடக்கவும். தலைமைத்துவ பண்பு மற்றும் ஆய்வுத் திறன் ஆகியவை தான் உங்களுக்கான பலம் ஆகும். பணம் சார்ந்த முடிவுகளில் உங்கள் அறிவு மற்றும் புத்திகூர்மையை செயல்படுத்துவீர்கள். பணியாளர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.

  அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் பச்சை

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 7

  தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெய் தானமாக கொடுக்கவும்.

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  சொத்துக்களில் அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். உங்கள் மூர்க்க குணத்தை விட்டுவிட்டு, கிடைக்கின்ற வாய்ப்பை ஏற்றுக் கொள்ளவும். பணியாளர்கள் மத்தியில் கனிவாக பேசவும். வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக அமையும். இன்று குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - ஆசிரமத்திற்கு ஆடைகள் மற்றும் பாத்திரங்கள் வழங்கவும்.

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  அதிகாரம், பணம், அங்கீகாரம், சொகுசு, புகழ் போன்றவற்றை அடைவதற்கு சிறப்பான நாள் இதுவாகும். குடும்பத் தொடர்புகள் மூலமாக வணிகம் அல்லது வேலைவாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான தருணம் இது. இன்றைய தினத்தின் தொடக்கத்தில் நீங்கள் கட்டாயம் மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

  தானம் - ஏழைகளுக்கு தானியங்களை தானமாக கொடுக்கவும்.

  டிசம்பர் 25 அன்று பிறந்த பிரபலங்கள் : ஏசு, அடல் பிஹாரி வாஜ்பாய், ஜய் பனுஷாலி, இஸ்மாயில் மெர்சண்ட், ராஜு ஸ்ரீவத்ஸவா, ராம் தேவ் பாபா

  First published:

  Tags: Numerology, Tamil News