முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 டிசம்பர் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 டிசம்பர் 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 14-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதன் கிரகத்தின் அபரிமிதமான ஆற்றல் மற்றும் ஆசீர்வாதம் இன்று உங்களுக்கு இருக்கிறது. உங்களது கவர்ச்சியான ஆளுமை உங்களை பின்தொடர்பவர்களை தக்க வைக்கிறது. புதிய வணிக பிரிவை நிறுவும் அளவிற்கு அல்லது வேலையில் உயர் பதவியை வகிக்கும் அளவிற்கு நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இன்று நீங்கள் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அன்பு மற்றும் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் நாளை பாராட்டுக்கள் அல்லது வெகுமதிகள் இனிமையாக்கும். நகை வியாபாரிகள், பொறியாளர்கள், எலெக்ட்ரானிக்ஸ், உலோகம், அழகுசாதனப் பொருட்கள், துணி வியாபாரம் செய்பவர்கள் லாபமடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

நன்கொடைகள்: கோவிலில் எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவுகளில் நம்பிக்கை வளரும், பிணைப்பு அதிகரிக்கும். குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்கள் செயல்திறனில் தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சியை காண்பார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்காக இன்று அதிக நேரம் செலவிட வேண்டும். எதிர்காலத்தில் தேவையான உதவிகளை பெற பழைய நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள். வழக்கறிஞர்கள், பல் மருத்துவர்கள், சமையல் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் இன்று சிறப்பான வெற்றியை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு கிடைக்க போகும் அங்கீகாரம் அல்லது பதவி உயர்வு உங்கள் தொழில் வாழ்க்கையில் ஒரு புதிய வளர்ச்சியை உறுதியளிக்கிறது. நீங்கள் பேச வேண்டிய இடத்தில் அமைதியாக இருக்காமல் பேசுங்கள். உங்களது முயற்சிகளை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்வீர்கள். கல்வியாளர்கள், ஓட்டல் ஓனர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தேவையான பதவி உயர்வு மற்றும் விளம்பரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: : ஆசிரமங்களில் மஞ்சள் பருப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நெருக்கமானவர்களிடம் உங்கள் மனதை திறந்து வெளிப்படையாக உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய நாள். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த முன்னேற்றம் நீடித்ததாக இருக்கும். நாள் துவங்கும் போது குழப்பமாக, நோக்கமற்றதாகவும் தோன்றினாலும், நாளின் முடிவு உங்களுக்கு சாதகமாக மாறும். இளைஞர்கள் காதல் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நல்ல நாள். இன்று அசைவம் மற்றும் மதுவை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: ஏழைகளுக்கு சைவ உணவுகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று முக்கிய விஷயங்களில் அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும். எனவே திடீர் அதிர்ஷ்டம் மற்றும் தொழிலில் வளர்ச்சி என இரண்டையும் அனுபவிக்க முடியும். ஷாப்பிங் செய்ய, ரிஸ்க் எடுக்க, பங்குகளை வாங்க, போட்டிகளில் பங்கேற்க சிறந்த நாள். இன்று நீங்கள் விருப்பியதை செய்ய மற்றும் வாங்க ஏற்ற நாள். பங்கு அல்லது சொத்தில் இன்று நீங்கள் செய்யும் முதலீடு சிறப்பான பலன்களை பெற்று தரும். இன்று நீங்கள் உங்கள் வாழ்வின் சிறந்த வழிகாட்டியை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உணர்வுகளை திருமணத்திற்கு திசை திருப்ப இன்று ஒரு அற்புதமான நாள். தம்பதிகளிடையே இன்று வலுவான பிணைப்பு காணப்படும். நீங்கள் நினைத்த இலக்குகளை அடைவதன் மூலம் உங்களுக்கான தனிபட்ட அடையாளத்தை உருவாக்குவீர்கள். அரசியல்வாதிகள் களத்தில் வெற்றியை தக்க வைக்க முயற்சிக்க வேண்டும். இல்லத்தரசிகள் குடும்பத்தினரால் மிகவும் மதிக்கப்படுவார்கள். அரசு வேலை பார்ப்பவரகள் பதவி உயர்வை பெற கூடும். திருமண முயற்சிகள் கை கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 2

நன்கொடைகள்: வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வேண்டியதை செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பழைய அனுபவங்கள் மூலம் நீங்கள் பெற்ற முதிர்ச்சி உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் உதவியாக இருக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் அன்பும் பாசமும் உங்கள் இன்று மகிழ்ச்சியுடன் வைக்கும். இன்றைய நாள் தொடங்கும் போது உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற அவர்களை வணங்குங்கள். இன்று நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவது நல்ல பலன்களை பெற்று தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: காப்பர் பாத்திரங்களை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எல்லையற்ற உங்கள் ஆற்றல் & திறமை இன்று உங்களை ஒரு சிறந்த தலைவராக மாற்றும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பு இன்று சரியான நேரத்தில் சிக்கல்களை தீர்க்க உதவும். தம்பதிகளிடையே காதல் உறவுகள் சிறப்பாக இருக்கும். மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நிதி பலன்களைப் பெறுவார்கள். இயந்திரங்கள் வாங்கவும், சொத்துகளில் முதலீடு செய்ய சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: கால்நடைகளுக்கு குடிநீர் வைக்கவும்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் உடைமைகளை பத்திரமாக கவனித்து கொள்ள நினைவில் கொள்ளுங்கள். பங்குகளை தவிர வணிக முதலீடுகள் செய்ய இன்று சிறந்த நாள். மேலும் இந்த நாள் இளைஞர்கள் தங்கள் பார்ட்னர்களை கவர சாதகமாக இருக்கும். கிரியேட்டிவ் டிசைனர்கள் தங்கள் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது நிகழ்வில் கலந்து கொள்வது, பார்ட்டி, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட சுவாரசிய நிகழ்வுகளில் பங்கேற்று நாளை நன்றாக அனுபவிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

நன்கொடைகள்: ஒரு பெண் குழந்தைக்கு சிவப்பு நிற கர்சீப்பை கொடுக்கவும்

டிசம்பர் 14-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ராணா டகுபதி, ராஜ் கபூர், குல்தீப் யாதவ், விஜய் அம்ரித்ராஜ், ஷியாம் பெனகல், பி கே எஸ் ஐயங்கார், சஞ்சய் காந்தி, ஜூஹி பர்மர், சமீரா ரெட்டி

First published:

Tags: Numerology, Tamil News