ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 ஜனவரி 2023) ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 ஜனவரி 2023) ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜனவரி 16-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  எதார்த்தம் என்னவென்று சிந்தித்து முடிவு செய்பவர் நீங்கள். ஆக, உங்கள் பணி சார்ந்த முடிவுகளை தக்க தருணத்தில் எடுப்பீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவுகளின் சட்ட ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் அலுவலக பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீங்கள் உதவ வேண்டும். தோல் உற்பத்தி பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - பெய்ஜ்

  அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3

  தானம் - பிச்சைக்காரர்களுக்கு ஆரஞ்சு பழம் வழங்கவும்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உறவுகள் மத்தியில் கவனமாக இருக்கவும். இல்லை என்றால் வருத்தம் கொள்ள நேரிடும். இன்றைய தினம் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை ஒத்தி வைத்துவிட்டு, பணி சார்ந்த வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தவும். எதிர்கால திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அரசியல் தலைவர்கள் ஆவணங்களை கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம் மற்றும் மஞ்சள்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

  தானம் - கோவிலில் தயிர் தானம் செய்யவும்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் உங்கள் 6ஆம் அறிவு வேலை செய்ய வேண்டும். ஆன்மீகம் மற்றும் தியானத்தின் மூலமாக வளர்ச்சிக்கான பாதையை கண்டறிய வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், வழக்கறிஞர்கள் போன்றோருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். இசைக் கலைஞர்கள், டிசைனர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் போன்றோருக்கு வளர்ச்சி கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

  அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

  தானம் - பசுவுக்கு பசும்புல் வைக்கவும்.

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கார்ப்பரேட் நிறுவன பணியாளர்கள் சில சமரசங்களை செய்து கொண்டால் பலன் உள்ளதாக அமையும். பச்சை நிற காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியாக அமையும். கட்டுமானம், இயந்திரம், உலோகம் தொடர்புடைய வணிகம் செய்வோர் இன்று ஆவணங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - ஏழைகளுக்கு எலுமிச்சைப் பழம் வழங்கவும்.

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் உயர் அதிகாரி மற்றும் சக பணியாளர்களிடம் உன்கள் யோசனைகள் மற்றும் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும். இன்று ரொமான்ஸ் செய்வதற்கு சிறப்பான நாளாகும். சொத்து அல்லது பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளை செய்யலாம். இன்று உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். பச்சை நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை தரும்.

  அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

  அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 5

  தானம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற மாவு வழங்கவும்.

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் ரொமான்ஸ் மற்றும் வாக்குறுதி ஆகியவை உங்கள் மனதில் நிரம்பியிருக்கும். ஆனால், நம்பிக்கை துரோகம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். வணிக வளர்ச்சி சிறப்பானதாக இருந்தாலும், தனிப்பட்ட விவகாரங்கள் சிக்கலுக்குரியதாக மாறும். இன்றைய தினம் விவாதங்களை தவிர்க்கவும். அதிகமான பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யவும்.

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் மூத்தவர்களிடம் ஆசி பெறவும். பணம் சார்ந்த விஷயங்களில் உங்கள் புத்திகூர்மையை செயல்படுத்துவீர்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய பிரச்சினைகளை தவிர்க்கவும். காதல் உறவுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். கொடுக்கும் மரியாதைக்கு பலனாக மரியாதை பெறுவீர்கள். ஆவணங்கள் குறித்து எச்சரிக்கையுடன் ஆராயவும்.

  அதிர்ஷ்ட நிறம் - பிரவுண்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 7

  தானம் - ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யவும்.

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இன்றைய தினம் பிஸியாக இருப்பீர்கள். குறுகிய கால இலக்குகளை நிறைவு செய்வீர்கள். ஆனால், நீண்ட கால இலக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உங்கள் உடல் நலன் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும். வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக அமையும்.

  அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வைக்கவும்.

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் வலது கையில் சிவப்பு நிற கயிறு அணியவும். மீடியா, விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் போன்ற துறைகளில் இருப்பவர்கள் புதிய உச்சம் பெறுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். இன்றைய தினம் பல சாதனைகளை செய்வீர்கள். வணிகத்தை மேம்படுத்துவதற்கு குடும்ப தொடர்புகளை பயன்படுத்திக் கொள்ளவும்.

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

  தானம் - பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணி தானம் செய்யவும்.

  ஜனவரி 16 அன்று பிறந்த பிரபலங்கள் : சித்தார்த் மல்ஹோத்ரா, விஜய் சேதுபதி, கபிர் பேடி, ஒ.பி.நாயர் காமினி கௌஷல், குரு ஹர் ராய்

  First published:

  Tags: Numerology, Tamil News