முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 09, 2023) கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 09, 2023) கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | பிப்ரவரி 09-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று உங்களின் ஆக்கப்பூர்வமான பேச்சு, மற்றவர்களிடம் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். தம்பதிகளிடையே இன்று உணர்வுப்பூர்வமான நெருக்கம் அதிகரிக்கும் எனினும் ஒன்றாக நேரத்தை செலவிடுவது கடினம். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், பெயின்டர்கள், சமையல் கலைஞர்கள் இன்று லாபத்தை அனுபவிப்பார்கள். உங்கள் தீர்ப்பு அனைவராலும் ஏற்று கொள்ளப்படும் என்பதால் உங்கள் கருத்துக்கள் மற்றும் தீர்மானங்களில் உறுதியாக இருங்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு மற்றும் செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

  நன்கொடைகள்: பிச்சைக்காரர்கள் அல்லது விலங்குகளுக்கு உப்பு நிறைந்த உணவை தானம் செய்யுங்கள்

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  தனிப்பட்ட உறவுகளில் இன்று நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடக்க முடிவு செய்யுங்கள், அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் முன் உங்கள் உள்ளுணர்வு சொல்வதை பரிசீலிக்கவும். நெருங்கிய காதல் உறவில் அன்பு இன்று அதிகரிக்கும். ஒரு சில குருட்டு நம்பிக்கையிலிருந்து இன்று நீங்கள் விலகி இருக்க வேண்டும். இன்று நீங்கள் அப்பாவியாக இருந்தால் பிறரால் எளிதில் காயப்படுத்தப்படுவீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: பிங்க் & ஸ்கை ப்ளூ

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2

  நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு இன்று எண்ணெய் தானம் செய்யுங்கள்

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வயதில் மூத்தவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்று மரியாதை கொடுக்க நினைவில் கொள்ளுங்கள். இன்று வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும். இன்று உங்களுக்கு பெயரும், புகழும் வந்து சேரும். கடவுளுக்கு தீபம் ஏற்றி வழிபடவும். குறிப்பாக இன்று அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் சாதகமான நாள். ஷாப்பிங் செய்ய, வீடு அல்லது வாகனம் வாங்க, உடைகள் அல்லது அலங்காரம் செய்ய சிறந்த நாள். டிசைனர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இன்று சிறப்பான சாதனைகளை செய்வார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

  நன்கொடைகள்: கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று கடின உழைப்பு தேவைப்படும் நாள். தீவிர முயற்சிகள் இந்த நாளை லாபகரமாக்கும். உங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி முடிப்பீர்கள். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் அல்லது நடிகர்கள், அறிவிப்பாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் இன்று சிறந்த பலன்களைப் பெற ஆடிஷன்களுக்கு விண்ணப்பிக்கலாம். உலோக உற்பத்தியாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், விநியோகஸ்தர்கள், உள்கட்டமைப்பு வணிகம், ஆடைகள் வணிகம் செய்பவர்கள் பெரிய லாபம் பெறுவார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: டீல் மற்றும் ஊதா

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று ட்ராவல், பங்குச் சந்தை, விளையாட்டு, சில்லறை வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வணிகம் ஆகியவற்றில் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் பண லாபம் அதிகமாக இருக்கும். அரசியல்வாதிகள், கட்டுமானதுறை, நடிப்பு, பங்குச் சந்தை, ஏற்றுமதியில் இருப்பவர்கள் இன்று அதிர்ஷ்டம் பெறுவார்கள். உங்கள் பார்ட்னர் உங்களுக்கு இன்று அதீத மரியாதை கொடுக்கும் சூழல் ஏற்படும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  நன்கொடைகள்: : ஏழைகளுக்கு பிரவுன் அரிசியை தானம் செய்யுங்கள்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  துளசி இலையை சாப்பிடுவதன் மூலம் உங்கள் நாளை சிறப்பாக தொடங்குங்கள். நாளின் முடிவு வாழ்வில் செழிப்பை தரும் ஒரு ஆடம்பரமாக அமையும். பார்ட்னருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். டிசைனர்கள், ஈவன்ட் மேனேஜர்ஸ் , தரகர்கள், சமையல்காரர்கள் இன்று தங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். காதல் உறவால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

  அதிர்ஷ்ட நிறம்: வயலட்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: வெள்ளை கைக்குட்டையை தானம் செய்யுங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து சிறப்பான ஆதரவையும் வழிகாட்டுதலையும் பெறுவீர்கள். வழக்கறிஞர்கள், சிஏ, பாதுகாப்பு அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இன்று சமூகத்தில் உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறுவார்கள். இன்று நீங்கள் திட்டமிட்ட அனைத்தும் சரியாக நடக்கும். உங்கள் பகுப்பாய்வு திறன் மீது நம்பிக்கை வைத்து எதிர்வரும் சவால்களை ஏற்கவும். வேலையில் எதிர் பாலின நபரின் பரிந்துரைகளை ஏற்கவும். வழக்கறிஞர்கள், தியேட்டர் கலைஞர்கள், சிஏ, சாப்ட்வேர் துறையினர் இன்று சிறப்பு அதிர்ஷ்டத்தை எதிர்கொள்வார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் அக்வா

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

  நன்கொடைகள்: தெரு விலங்குகளுக்கு உணவு வழங்குங்கள்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் இன்று கவனமுடன் இருக்கவும். சட்டப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பணம் தேவைப்படும். உற்பத்தியாளர்கள், ஐடி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தரகர்கள் மற்றும் நகை வியாபாரிகள், மருத்துவர்கள் மற்றும் பொது பேச்சாளர்கள் இன்று சாதனைகளை செய்வதன் மூலம் பெருமை அடைவார்கள். வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருப்பது அவசியம்.

  அதிர்ஷ்ட நிறம்: அடர் ஊதா

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: தேவைப்படுபவர்களுக்கு பாதணிகளை வழங்குங்கள்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் பார்ட்னரிடமிருந்து அதிக பலனை பெறுவீர்கள். உங்களுக்கு இன்று பெயரும் புகழும் நிறைந்த நாள். நீங்கள் பலருக்கும் உத்வேகமளிப்பவர்களாக இருப்பீர்கள். எனவே இன்று உந்காலது தலைமைத்துவத்தை வெளிப்படுத்துங்கள். காதலிப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அருமையான நாள். கவர்ச்சி தொழில் மற்றும் ஊடகங்களில் உள்ளவர்கள் இன்று புகழைப் பெறுவார்கள். பயிற்சியாளர்கள், பேக்கர்கள், ஹோட்டல்கள், பங்கு தரகர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்கள் இன்று சிறந்த பலன்களை அனுபவிப்பார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: பெண்ணுக்கு சிவப்பு நிற வளையல்களை தானம் செய்யுங்கள்

  பிப்ரவரி 9-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: அம்ரிதா சிங், ஹன்சூர் கிருஷ்ணமூர்த்தி, ராகுல் ராய், சமந்தா, நிகேஷ் அரோரா, பைமர்ஜன் நேகி

  First published:

  Tags: Numerology, Tamil News