#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களின் ஆளுமைப்பண்பு அனைவரின் கவனத்தை ஈர்க்கும். உங்களது வேலையின் மூலம் நல்ல பெயரையும், புகழையும் பெறுவீர்கள். உங்களின் உழைப்பினால் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் சூழல் ஏற்படும். எந்த வேலையையும் நம்பிக்கையுடன் மற்றும் சுதந்திரமாக செய்யுங்கள். தனிப்பட்ட முறையில் எதையும் செய்ய வேண்டாம். மனைவியின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். உங்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து பாராட்டுகள், வெகுமதிகள் மற்றும் ஆதரவைப் பெறுவதால் இந்நாள் சிறப்பாக அமையும். நடிப்பு, கலைப்படைப்பு, அழகுசாதனப் பொருள்கள், விவசாயம் போன்ற தொழிலில் இருப்பவர்கள் முதலிடம் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் – பச்சை மற்றும் வெள்ளை
அதிர்ஷ்டமான நாள்- ஞாயிறு
அதிர்ஷ்ட எண் – 1 மற்றும் 5
பரிகாரம் – கோவிலுக்கு மஞ்சள் பழங்களைத் தானம் செய்யவும்.
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைக்கு உங்களின் கனவு நினைவாகும் நாளாக இன்று அமையும். பெண்கள் தங்களிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறக்கூடும். குழந்தைகள் தங்கள் செயல்திறனில் தன்னம்பிக்கை, அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியைப் பெறுவீர்கள். பெற்றோர்கள் குழந்தைகளின் திறமையால் பெருமையடைவார்கள். இன்று முக்கியமான சந்திப்புகள் அல்லது நேர்காணலின் போது பச்சை நிறத்தை அணிந்து சென்றால் வெற்றியைப் பெறுவீர்கள். நினைத்த காரியமும் நிறைவேறும். ஊடக நண்பர்கள, அரசியல் வாதிகள், டிசைனர்ஸ், மருத்துவர்கள் மற்றும் நடிகர்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான நிறம் -பச்சை
அதிர்ஷ்டமான நாள் – திங்கள்
அதிர்ஷ்ட எண் – 2 மற்றும் 6
பரிகாரம் – ஏழைகளுக்கு உப்பு தானம் செய்யுங்கள்.
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைக்கு நீங்கள் கவனத்தைச் சிதறவிடாமல் நல்ல இலக்கை நோக்கிப் பயணித்தால் வெற்றிக்கிடைக்கும். வீண் விவாதங்களால் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் அமைதியாக இருக்கவும். முதலீடு செய்யும் போது கவனமுடன் இருக்க வேண்டும். எந்த வேலையைச் செய்தாலும் நிதானம் தேவை. அரசியல் வாதிகள், கல்வியாளர்கள், ஓட்டல்காரர்கள், இசைக்கலைஞர்களுக்கு பதவி உயர்வு மற்றும் மதிப்பு உயரக்கூடும்.
அதிர்ஷ்டமான நிறம் – பழுப்பு
அதிர்ஷ்டமான நாள் – வியாழன்
அதிர்ஷ்ட எண் – 1 மற்றும் 3
பரிகாரம் – ஆசிரமங்களுக்கு அரிசி தானம் செய்யவும்.
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைக்கு தொழிலபதிபர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிடைக்கும் அதிர்ஷ்ட நாள். உங்களின் மார்க்கெட்டிங் திறமைகளைப் பயன்படுத்தி வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். பரபரப்பாக இருக்கும் நிலை ஏற்படும். வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் தாமதமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே முடியக்கூடும். இளைஞர்களிடம் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நட்பை அல்லது உறவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தயவு செய்து அசைவ உணவுகள் மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமானநிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள்- செவ்வாய்
அதிர்ஷ்ட எண் -9
பரிகாரம்- ஏழைக்கு உணவுப்பொருள்களைத் தானம் செய்யவும்.
#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்களது வாழ்க்கையில் ஏற்படும் திடீர் அதிர்ஷ்டம் உங்களது தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும். வாழ்க்கையில் பல ரிஸ்க்குகள் எடுக்கும் நாளாக அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் குறுகிய பயணம் மேற்கொள்ள நேரிடும். நீங்கள் விரும்பும் அனைத்து பொருள்களையும் வாங்கும் சூழல் ஏற்படும். வாழ்க்கையில் நல்ல காரியங்கள் நிறைவேறும். பெரியதோ? அல்லது சிறியதோ? பங்கு அல்லது சொத்து முதலீடு செய்யுங்கள். நிச்சயம் எதிர்காலத்தில் உங்களுக்கு கைக்கொடுக்கும். பதவி உயர்வு மற்றும் மதிப்பீட்டின் ஒப்புதலுக்கு செல்ல வேண்டிய நாள்.
அதிர்ஷ்டமான நிறம்- கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள்- புதன்
அதிர்ஷ்ட எண்- 5
பரிகாரம்: பசுமையான செடிகளை தானம் செய்யுங்கள்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைக்கு பதவி உயர்வு கிடைக்கும் நாளாக அமையும். உங்களின் திறமை மற்றும் முயற்சியால் மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அரசியல் வாதிகள் பல முயற்சிகளுக்குப் பிறகு களத்தில் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வார்கள். இல்லத்தரசிகள் உங்கள் குடும்பத்தினரால் மரியாதை மற்றும் பாசத்தைப் பெறக்கூடும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்டமான நிறம்- ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள்- வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்- 6 மற்றும் 2
பரிகாரம்: ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யுங்கள்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைக்கு எந்த வேலையையும் நீங்கள் தொடங்கினாலும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவது வாழ்க்கையில் வெற்றிக் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்குத் தகுந்த வேலை கிடைக்கும். உங்களைச் சுற்றியுள்ள நபர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் பாசமும் உங்களது கனவுகளை நிறைவேற்றும். இன்று எடுக்கும் எந்த முடிவுகளையும் நினைத்து கவலைக்கொள்ள வேண்டாம். கண்மூடித்தனமாக அதை நம்பி நீங்கள வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
அதிர்ஷ்டமான நிறம்- ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் – திங்கள்
அதிர்ஷ்ட எண்- 7
பரிகாரம்: தாமிர பாத்திரத்தைத் தானம் செய்யுங்கள்
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நம்பிக்கையையும், வெற்றியையும் மீட்டெடுக்க முயற்சி செய்வீர்கள். கால்நடைகளுக்குத் தொண்டு செய்ய இது அழகான நாளாக அமையும். தம்பதிகளுக்கிடையே காதல் உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிக பணப் பலன்களைப் பெறுவார்கள். இன்றைக்கு இயந்திரங்கள் வாங்கவும், சொத்துகளில் முதலீடு செய்யவும் சிறந்த நாளாக அமையும். யோகா செய்வதை வழக்கமாக மேற்கொள்ள வேண்டாம். இதனால் மன உறுதியைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் – வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் – 6
பரிகாரம் – ஏழைகளுக்குத் தானம் செய்யவும்.
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைக்கு நீங்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வது சிறந்த பலனைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். வணிக முதலீடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவார்கள். பார்டியில் கலந்துக் கொள்வது, நகைகளை வாங்குவது போன்றவற்றை மேற்கொள்வீர்கள். பங்கு முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும்.
அதிர்ஷ்டமான நிறம்- பழுப்பு
அதிர்ஷ்டமான நாள் -செவ்வாய்
அதிர்ஷ்ட எண்- 6 மற்றும் 9
பரிகாரம்: ஒரு பெண் குழந்தைக்கு முடிந்த உதவிகளைச் செய்யவும்.
டிசம்பர் 23 அன்று பிறந்த பிரபலங்கள்: ரவி துபே, சரண் சிங், மணீஷ் மகிஜா, அகமது ஷா பகதூர், தீபக் சௌராசியா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News