ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (07 டிசம்பர் 2022) ஆசிரமங்களில் அரிசி தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (07 டிசம்பர் 2022) ஆசிரமங்களில் அரிசி தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 7-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் போட்டிகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்றால் உங்கள் கல்வி அறிவை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ஒப்பந்தங்களில் கையொப்பமிட, ஸ்பான்சர் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இன்று சிறந்த நாள். உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் கேட்கும் உதவிகளை மறுக்காமல் செய்து கொடுங்கள். இன்று சிறப்பான பலன்களை பெறுவதற்கு தோல் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

  அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

  நன்கொடைகள்: கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று உங்களுக்கு ஒரு சிக்கல் நிறைந்த நாளாக இருக்கலாம், குறிப்பாக காதல் உறவுகளில். இன்று ஆவணங்களை கையாளும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் உங்களை பிரச்சனையில் சிக்க வைக்க சில முயற்சி செய்யலாம். இன்று உங்களுக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அதை புறக்கணித்து விட்டு, உங்கள் வாழ்வில் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க தொழில் பாதையில் கவனம் செலுத்துங்கள். பிறரிடம் உங்கள் எதிர்காலத் திட்டங்களை ஷேர் செய்யாதீர்கள். அரசியல்வாதிகள் இன்று ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

  அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ மற்றும் மஞ்சள்

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

  நன்கொடைகள்: ஆசிரமங்களில் அரிசி தானம் செய்யுங்கள்

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  ஆன்மீகம் மற்றும் தியானம் மூலம் மனம் மற்றும் சிந்தனையை தெளிவாக வைத்து கொள்வது உங்களை வளர்ச்சிக்கான பாதையில் இட்டு செல்லும். பொது பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் மூலம் நாள் சாதகமாக இருக்கும். நாடகக் கலைஞர்கள் தங்கள் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.

  இசையமைப்பாளர்கள், டிசைனர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இன்று தங்களது தொழில் வளர்ச்சிக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிடலாம்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

  நன்கொடைகள்: குழந்தைகளுக்கு மஞ்சள் நிற பூக்களை தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  துளசி இலையை சாப்பிடுவதன் மூலம் இன்று உங்களது நாளை நேர்மறையாக தொடங்குங்கள். இன்று உங்கள் உடல் மற்றும் மனம் என இரண்டையும் கவனித்துக் கொள்ளுங்கள். பணவரவில் இன்று தாமதம் ஏற்படும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் ப்ரோக்கரேஜ் போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் பச்சை மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது உங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு எலுமிச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் சிறப்பான பலன்களை பெற பணியிடத்தில் ஆந்தையின் படத்தை வைத்திருங்கள். பணியிடத்தில் உங்கள் சீனியர் கூறும் வார்த்தைகள் உங்கள் பணி அல்லது மனதை பாதிக்கலாம். மற்றவர்களின் தவறுகளை புறக்கணித்து முன்னேறும் நாள். சொத்து அல்லது பங்கு முதலீடுகள் செய்வதால் பணப் பலன்களை பெறலாம். விளையாட்டு வீரர் மற்றும் ட்ராவலர்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். உங்கள் காதலை முன்மொழிய இன்று சிறந்த நாள்.

  அதிர்ஷ்ட நிறம்: டீல்

  அதிர்ஷ்ட நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு வெள்ளை மாவை தானம் செய்யுங்கள்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பிரச்சனைகளுக்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்வது அவசியம். சிலர் உங்களை ஏமாற்ற கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். உங்களது தனிப்பட்ட பிரச்சினைகள் இன்று அதிகரிக்க கூடும் எனவே வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். இன்று அதிக பொறுப்புகளை உங்கள் வசம் எடுத்து கொள்ளாதீர்கள். ஹோட்டல் வியாபாரிகள், பயணிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், மருத்துவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்.

  அதிர்ஷ்ட நிறம் - பீச்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - வயதில் மூத்த பெண்ணுக்கு வளையல்களை தானம் செய்யுங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று வழக்கறிஞர்கள், மென்பொருள் பொறியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆடிட்டர்களுக்கு சிறந்த நாள். வேலைகளில் கட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் அதிக மன அழுத்தம் ஏற்படும். உங்கள் தலைமை பண்பு மற்றும் பகுப்பாய்வு திறன் ஆகியவை தான் உங்கள் ஆளுமையின் சொத்துக்கள். உங்களது அன்பான உறவுகளில் இன்று உங்களுக்கு மரியாதை கூடும். நீதிமன்றங்கள், திரையரங்குகள், தொழில்நுட்பம், அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை உள்ளிட்ட துணிகளால் பணிபுரிபவர்களுக்கு இன்று சிறந்த நாள்.

  அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் பச்சை

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

  அதிர்ஷ்ட எண் - 7

  தானம் - ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  தினசரி பணிகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதில் இன்று மும்முரமாக செயல்படுவீர்கள். இன்று உங்களது ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள வேண்டிய நாள். குடும்பத்துடன் இன்று அதிக நேரத்தை செலவிடுவது அவசியம். இன்று லாங் டிரைவ்களை தவிர்த்து கொள்ளுங்கள். காதல் உறவுகளை வலுப்படுத்த இன்று சிறந்த நேரம் அமையும்.

  அதிர்ஷ்ட நிறம் - சீ ப்ளூ மற்றும் பிரவுன்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - கால்நடைகளுக்கு பழுப்பு நிற தானியங்களை தானம் செய்யுங்கள்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் வேலை மற்றும் ஆளுமையின் ஒரு பகுதியாக புகழ் இருக்கும். என்றாலும் இன்று பொதுவில் தோன்றுவதை கட்டுப்படுத்தி அதற்கு பதில் உங்களது நேரத்தை மிச்சப்படுத்துங்கள். மீடியா, விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் மற்றும் கவர்ச்சி துறையில் இருப்பவர்கள் இன்று புதிய உச்சத்தை காண்பார்கள். இன்றைய நாளை சிறப்பாக்க சிவப்பு நிறத்தை அதிகம் பயன்படுத்துங்கள்.

  அதிர்ஷ்ட நிறம் - பீஜ்

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

  அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

  தானம் - பிச்சைக்காரர்களுக்கு ஆரஞ்சு பழங்களை தானம் செய்யுங்கள்

  டிசம்பர் 7-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: அலி அஸ்கர், பிரமுக் சுவாமி மகராஜ், சுனில் காந்த் முஞ்சால், கீதா ஐயங்கார், பூஜா ஷர்மா, ஸ்ரீதர்

  First published:

  Tags: Numerology, Tamil News