ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (7 நவம்பர் 2022) கோவிலில் எண்ணெய் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (7 நவம்பர் 2022) கோவிலில் எண்ணெய் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 7-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நவம்பர் 07 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவில் சில பிரச்சினைகள் எழுகின்ற போதிலும், உங்களுக்கு சில கொண்டாட்டமான வாய்ப்புகள் அமையும். சொத்து தொடர்பான அனைத்து முடிவுகளும் சரியான தருணத்தில் மேற்கொள்ளப்படும். சட்ட வழக்குகள் அல்லது அலுவலக பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உங்கள் உதவியை நாடும் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உங்களுடைய ஆதரவை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 3

தானம் - ஆசிரமங்களில் சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மூன்றாம் நபர் உங்கள் வாழ்க்கையில் தலையிடுவதை தம்பதியர் தவிர்க்க வேண்டும். சிலர் உங்களை ஏமாற்ற நினைப்பதால் ஆவண விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. இன்று தனி வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளை புறம் தள்ளிவிட்டு, வேலை சார்ந்த முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தவும். இன்றைய நாளில் உங்கள் காதல் கனவுகள் நிறைவேறும். எதிர்கால திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - கோவிலில் எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் உங்கள் முன்னோர்களை வணங்கி பொழுதை தொடங்கவும். உங்கள் ஆறாம் அறிவு, ஆன்மீக பக்தி மற்றும் தியானம் ஆகியவற்றை பயன்படுத்தி வளர்ச்சியை நோக்கி பயணம் செய்ய வேண்டிய தருணம் இது. புதிய நபருடன் புதிய பந்தம் ஏற்பட இருக்கிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமானதாக இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - குழந்தைகளுக்கு மஞ்சள் நிற வளையங்களை பரிசளிக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் குழப்பங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். ஆனாலும், சில நபர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பண வரவுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், அதற்காக எதையும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம். உடல் நலன் மற்றும் மன நலனை காக்க பச்சை காய்கறிகள் சிட்ரஸ் பழங்கள் ஆகியவற்றை சாப்பிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு எலுமிச்சை பழம் தானமாக கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீடு அல்லது பணியிடத்தில் கிழக்கு நோக்கிய பகுதியில் நகரும் பொருள் ஒன்றை பொருத்தவும். உங்கள் பேச்சை கண்டு உங்கள் பாஸ் ஈர்க்கப்படுவார். உங்கள் திறனுக்கு ஏற்ற பாராட்டு மற்றும் அங்கீகாரம் இன்று கிடைக்கும். சொத்து அல்லது பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாக இன்று பணவரவு உண்டாகும். இன்று உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற மாவு தானமாக வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் மனதில் ரொமான்ஸ் உணர்வுகள் நிறைந்திருக்கும். ஆனால், துரோகம் மற்றும் நம்பிக்கையின்மை குறித்து கவனமாக இருக்கவும். பணி சார்ந்த வளர்ச்சி அழகானதாக இருந்தாலும், தனி வாழ்க்கை சிக்கலுக்கு உரியதாக இருக்கிறது. ஆகவே எந்த ஒரு வாதத்தையும் தவிர்க்க வேண்டும் அளவுக்கு அதிகமான பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வீட்டுப் பணியாளருக்கு அழகு சாதன பொருள் கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், பயணம் செய்வதையும் தவிர்க்கவும். பணம் சார்ந்த விஷயங்களில் உங்கள் அறிவு மற்றும் புத்திகூர்மையை செயல்படுத்துவீர்கள். காதல் உறவுகளில் நம்பிக்கை மேலோங்க இருக்கிறது. இன்று ஆவணங்கள் எதன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம். வணிகத்தில் பார்ட்னர்ஷிப் ஆரோக்கியமானதாக இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் அக்வா

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் எள்ளு விதைகள் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று வீட்டில் இருந்து பணி செய்யலாம். சொத்து தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க முயற்சி எடுப்பீர்கள். குறுகிய கால இலக்கு வெற்றியடையும்/ நீண்ட கால இலக்குகளை மறுபரிசீலனை செய்யவும். வணிகம் தொடர்பான பணப்பரிவினைகள் வெற்றிகரமானதாக இருக்கும். காதல் உறவுகள் பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - விலங்குகளுக்கு உப்பு கலந்த உணவு கொடுக்கவும்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புத்தாக்க சிந்தனை தான் உங்களிடம் இருக்கும் தனித்த திறனாகும். இதற்கு ஊக்கமும், பாராட்டுகளும் கிடைக்கும். மீடியா, விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய உச்சம் கிடைக்கும். இன்றைய நாள் முழுவதும் சாதனைகள் மற்றும் பண வரவுகள் நிறைந்திருக்கும். வணிகத்தை விரிவுபடுத்த குடும்ப தொடர்புகளை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு ஆப்பிள் தானம் செய்யவும்.

நவம்பர் 07 அன்று பிறந்த பிரபலங்கள் : கமலஹாசன், சி.வி.ராமன், கிரண் ராவ், அனுஷ்கா செட்டி, கிரண் நந்திதா தாஸ், தாதா பகவான்,

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News