ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 டிசம்பர் 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 டிசம்பர் 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 29-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் உங்களது வாழ்விற்கான புதிய வழிகாட்டியை சந்திக்க கூடும். நேர்காணல்களில் கலந்து கொள்ள, ஷாப்பிங் செய்ய, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க நேரம் செலவிட வேண்டும். இன்று நீங்கள் அனைத்து ஆடம்பரங்களையும் அனுபவிப்பீர்கள். பிறருடன் ஆரோக்கிய உறவை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையை பெற இன்று சிறந்த நாள். சோலார் எனர்ஜி, எலக்ட்ரானிக்ஸ், கல்வி மற்றும் புத்தகங்கள் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

  அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

  அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

  அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

  நன்கொடைகள்: கோவிலில் இன்று கடுகு எண்ணெய் தானம் செய்யுங்கள்

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  காதலை வெளிப்படுத்த அல்லது திருமணம் போன்ற நிரந்தர உறவை ஏற்படுத்தி கொள்ள சிறந்த நாள். தனிப்பட்ட வாழ்க்கையில் நேரடி தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிக்கும். நெருக்கமானவர்களுடன் உணர்ச்சிப்பூர்வமான நேரம் செலவிட சிறந்த நாள். நண்பர்கள் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எனவே இன்று அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியை கொண்டாடுவீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: பீச்

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2

  நன்கொடைகள்: பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு உணவு தானம் செய்யுங்கள்

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். தேவையில்லாத விஷயங்களை விட்டுவிட்டு உண்மையை பேசுங்கள். உயர் படிப்பு, நடனம், சமையல், வடிவமைப்பு, நடிப்பு, கற்பித்தலில் இருப்பவர்கள் இன்று தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல நாள். நிதித்துறையைச் சேர்ந்தவர்கள், விஞ்ஞானி, அரசியல்வாதி, எழுத்தாளர்கள், ஓவியர்கள் இன்று அதிக பண பலன்களை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

  நன்கொடைகள்: கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய நாள் முழுவதும் எதிர்கால திட்டமிடல் மற்றும் அவற்றை செயல்படுத்தல் பற்றிய யோசனைகள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். வியாபாரிகள் இன்று பெரும்பாலான நேரத்தை ஆலோசனை மற்றும் மார்கெட்டிங்கில் செலவிட வேண்டும். இயந்திரங்களை மேம்படுத்துவதற்கு இன்று நல்ல நாள். தனிப்பட்ட உறவுகள் குழப்பமின்றி ஆரோக்கியமாக இருக்கும். நண்பர்களுடன் இன்று வெளியே செல்வது மகிழ்ச்சியான தருணங்களாக அமையும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று உணர்ச்சிகள் உங்கள் முடிவுகளை முந்த விடாதீர்கள். இன்று முதலீட்டுத் திட்டங்கள் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். நிலுவையில் இருந்த சொத்து சம்பந்தமான விஷயங்கள் இன்று முடிவுக்கு வரலாம். நீங்கள் பயணம் செய்ய அதிக விருப்பம் கொண்டவராக இருந்தால், வெளிநாட்டு டூர் ஒன்றை திட்டமிடலாம். இன்று சாப்பிடும் உணவு மற்றும் பானங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இன்று பழைய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: பச்சை

  அதிர்ஷ்ட நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  நன்கொடைகள்: ஆதரவற்றோருக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  எப்போதும் வலது கையில் வெள்ளி அல்லது உலோக ஆபரணங்களை அணியவும். இன்று அதிர்ஷ்டம், ஆடம்பரம், மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிப்பீர்கள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான முடிவுகளில் வெற்றி பெறுவீர்கள். அழகுசாதனப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள், வாகனங்கள், வீடு, இயந்திரங்கள், நகைகள் வாங்க சிறந்த நாள். மாலை நேரம் இனிமையாக செல்லும்.

  அதிர்ஷ்ட நிறம்: அக்வா

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: கால்நடைகள் அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பால் தானம் செய்யுங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் ஈடுபடும் அனைத்து விஷயங்களிலும் சிறந்த வெற்றியை பெறுவீர்கள்.நிதிக் கணக்குகள் மற்றும் நில விவகாரங்களில் பெரியவர்களின் ஆலோசனையை பின்பற்றுங்கள். இன்று உங்கள் முடிவுகளில் நம்பிக்கையுடன் இருங்கள். வணிக ஒப்பந்தங்கள் சரியான பலன்களை கொடுக்கும். வழக்கறிஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று மிக உயர்ந்த வெற்றி பெறுவார்கள். சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வது இன்றைய நாளை வெற்றிகரமாக முடிக்க உறுதுணையாக இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 7

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வணிக உறவுகளை வளர்க்க, காதல் துணையை ஈர்க்க உங்கள் நல்லெண்ணம்இன்று பயன்படும். உங்களின் தாராள மனப்பான்மை, உயர் நிலை அறிவு மூலம் மக்களை ஈர்ப்பீர்கள். வணிக ஒப்பந்தங்களை முடிக்க தகவல் தொடர்பு முக்கியம். மருத்துவர்கள், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், உலோக உற்பத்தியாளர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் இன்று புதிய முதலீடுகளில் ரிஸ்க் எடுக்கலாம். இன்றைய பயணத் திட்டங்களை ஒத்தி வைக்கலாம்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

  அதிர்ஷ்ட நாள்: சனி

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: தேவைப்படுபவர்களுக்கு பாதணிகளை தானம் செய்யவும்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று மனதளவில் விழிப்புடன் இருப்பீர்கள். டீமாக ஒரு வேலையை செய்யும் போது உங்கள் ஈகோ அல்லது கோபத்தை தூர வைக்கவும். இடம் மாறுபவர்கள், புதிய வேலை தேர்ந்தெடுப்பவர்கள், நிலம் வாங்குபவர்கள், உயர் பொறுப்பு ஏற்பவர்களுக்கு இன்று அழகான நாள். அரசியல், ஊடகம், நடிப்பு, விளையாட்டு, நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் வளர்ச்சி அடைவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நினைத்து பெருமிதம் கொள்வார்கள். வணிக பங்குதாரர் அல்லது குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை பேண முக்கியத்துவம் கொடுங்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

  டிசம்பர் 29-ல் பிறந்த பிரபலங்கள்: ட்விங்கிள் கன்னா, ராஜேஷ் கன்னா, புல்கித் சாம்ராட், யோகிதா பாலி, ராமானந்த் சாகர், ஹீரா ராஜ்கோபால்

  First published:

  Tags: Numerology, Tamil News