எண் 1: (1, 10, 19, 28 தேதியில் பிறந்தவர்களுக்கான என் கணித பலன்கள்)
உங்களுக்கான பார்ட்னரை தேடி அலைவதற்கு பதிலாக சுதந்திரமாக வேலை செய்து வாழ்வில் முன்னேற முயற்சி செய்வது நல்லது. சிகப்பு நிற உடை அணிவதன் மூலம் சூரிய பகவானின் ஆசி பெற முடியும். மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது நல்லது. குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. சொர்போழிவாற்றுவதற்கும் குழுவை வழி நடத்தவும் நேர்காணல்களுக்கு செல்லவும் இன்று வாய்ப்புகள் உண்டு. விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு இன்று பல வெற்றிகள் கிடைக்கும் சூரிய பகவானுக்கு நீர் காணிக்கை அளிப்பது நன்மை அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட தினம்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1
தானம்: ஏழைகளுக்கு மஞ்சள் பழங்களை தானம் அளிக்க வேண்டும்
எண் 2: (2, 11, 20, 29 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)
தம்பதிகளுக்கு இடையேயான சண்டைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எனவே முடிந்த அளவு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சந்திரனின் சுழற்சியை மனதில் வைத்து வாழ்க்கை முடிவுகளை எடுப்பது மிகவும் நல்லது. தொழிலில் கவனமாக செயல்படுவது அவசியம். சிவபெருமான் மற்றும் சந்திர பகவானின் ஆசி பெறுவது நல்லது. எலக்ட்ரானிக், மருத்துவம், ஏற்றுமதி இறக்குமதி, விவசாயம் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு இன்று லாபம் அதிகரிக்கும். தந்திரத்துடன் செயல்படுவதின் மூலம் தொழிலில் வெற்றிகளை பெற முடியும்.
அதிர்ஷ்டம் நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட தினம்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: பிச்சைக்காரர்களுக்கு வெள்ளை அரிசி தானம் அளிக்க வேண்டும்
எண் 3: (3, 12, 22, 30 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)
இன்றைய நாளில் துவக்கத்தில் துளசி செடியை உட்கொள்வது நன்மை தரும். தலைவர்களாக இருப்பவர்கள் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், வட்டி தொழில் செய்பவர்கள் ஆகியோர்களுக்கு வெற்றி அதிகரிக்கும். வளர்ச்சியும் அதிகரிக்கும் அதே சமயத்தில் வலுவான நிலையில் தக்க வைத்துக் கொள்வது அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு மிக பெரிய அளவில் வெற்றிகள் கிடைத்தாலும் அவை அனைத்திற்கும் காரணமான ஆசிரியரையோ அல்லது உங்கள் குருவையோ மனதில் வைத்து அவருக்கு நன்றி செலுத்த மறக்க கூடாது.
மாணவர்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். திருமண முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். பெண்கள் மஞ்சள் நிற உணவு பொருட்களை சமைத்து குடும்பத்தாருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இதனால் குரு பகவானின் ஆசிகள் கிடைக்கும். விளையாட்டில் உள்ளவர்களுக்கு தங்களது பழைய பயிற்சியாளரின் மூலம் வெற்றிகளை ஈட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட தினம்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
தானம்: கோவிலுக்கு சந்தன மரத்தை தானம் அளிக்க வேண்டும்.
எண் 4: (4, 13, 22, 31 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. பண பரிமாற்றங்களை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. பொருளாதார மேலாண்மையில் அதிக கவனம் தேவை. முதலீடுகள் செய்வதில் அதிகம் கவனம் தேவை. நம்பிக்கையான இடத்தில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். புதிய இடத்தில் முதலீடுகள் செய்வதை தற்காலிகமாக தள்ளி போடுவது நல்லது. கோப்புகளை நன்றாக ஆராய்ந்து அதன் பின் அதில் கையெழுத்திடுவது நல்லது. தனிப்பட்ட உறவுகளில் சில விரிசல்கள் ஏற்படலாம். தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதியாக்க முடியும். ரெஸ்டாரண்டுகள், பங்கு சந்தை, நகை வியாபாரம், உற்பத்தி, சில்லறை வர்த்தகம், ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட தினம்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: பச்சை திராட்சையை குழந்தைகளுக்கு தானம் அளிக்க வேண்டும்.
எண் 5: (5, 14, 23 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)
உங்களது மேலாளர் அல்லது முதலாளியை மகிழ்விக்கும் வகையில் உங்களுடைய செயல்பாடுகள் இன்று இருக்கும். உடன் பணி புரிபவர்கள், நண்பர்கள், உங்கள் பார்ட்னர்கள் மற்றும் குரு ஆகியோர் இன்று உங்களின் செயல்பாடுகளின் மூலம் மகிழ்வடைவார்கள். உங்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்வது நல்லது. திமிராக நடந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணம் செலவழிப்பதில் அதிக கவனம் தேவை. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேவையான அளவு பணத்தை அவ்வப்போது சேமித்து வைப்பது நல்லது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பழகுவதில் கவனம் தேவை. உணர்வுகளை கட்டுப்படுத்தி நடப்பது நல்லது. இல்லையெனில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. மது அருந்துவதையும் அசைவம் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டு. விளையாட்டு, அழகுத்துறை, கட்டுமானம், ஊடக துறைகளில் உள்ளவர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். அக்குவா நிற உடையை அணிவது இன்று அதிர்ஷ்டம் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அக்குவா
அதிர்ஷ்ட தினம்: புதன்கிழமை
அதிர்ஷ்ட எண்: 5
தானம்: மரக்கன்றுகளை குழந்தைகளுக்கு தானம் அளிக்க வேண்டும்.
எண் 6: (6,15,25 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)
லக்ஷ்மி தேவியை வழிபடுவதன் மூலம் அவர்களின் ஆசியை பெற்று வாழ்வை நன்றாக வழி நடத்த முடியும். பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் வகையில் குழந்தைகள் நடந்து கொள்வார்கள். தொழில் சம்பந்தப்பட்ட சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டி வரலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை இன்று கையெழுத்தாக கூடும். வெளிர் நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். ஒப்பந்தகளை பெறுவதற்கு சிறிது ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழல் உண்டானாலும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. குடும்பத்தாருடன் குறுகிய பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: அக்குவா அல்லது வெள்ளை
அதிஷ்ட தினம்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: கோவிலுக்கு சர்க்கரை தானம் அளிக்க வேண்டும்.
எண் 7: (7, 16, 24 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)
குழுவை வழிநடத்தும் தலைவர்கள், ஆசிரியர்கள், சிறப்பாக செயல்படுவார்கள். தங்களது அணியினரிடமிருந்து எதிர்பார்த்த செயல்திறனை வெளிக்கொண்டு வருவார்கள். குளிப்பதற்கு முன் நேரில் உப்பு கலந்து குளிப்பது நல்லது. புதிய வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக எதிர்பாலினத்தவர் மூலம் புதிய ஒப்பந்த வாய்ப்புகள் இன்று கிடைக்கும். அதனை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் இருந்து அறிவுரை பற்றி செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தபட்ட முடிவுகளை அவர்களிடம் கேட்டு எடுப்பது நல்லது. சிவன் கோவிலுக்கு சென்று பூஜையில் ஈடுபடுவது நன்மை கொடுக்கும்.
அதிஷ்ட எண்: மஞ்சள்
அதிர்ஷ்ட தினம்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
தானம்: கால்நடைகளுக்கு வாழைப்பழம் தானம் அளிக்க வேண்டும்
எண் 8: (8, 17, 25 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)
புதிய வேலைகளில் ஈடுபடுவதற்கு இன்று ஏற்ற நாள். பல வழிகளில் பணவரவு அதிகரிக்கும் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வந்த சட்ட ரீதியான சிக்கல்கள் இன்று சரியாகும் உங்களது சமூக தொடர்புகளின் மூலம் புதிய தொழில் ஒப்பந்தங்களை பெறுவீர்கள். உங்களது பார்ட்னர் உடன் நேரம் செலவிடுவது நல்லது. தொழில் ரீதியாக எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களது தனிப்பட்ட செயல்களுக்கு சிறிது நேரம் ஒதுக்குவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட தினம்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: கால்நடைகளுக்கு கீரை வகைகளை கவனம் அளிக்க வேண்டும்.
எண் 9: (9, 18, 27 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)
கட்டுமான தொழில் செய்பவர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். தம்பதிகளிடையே நம்பிக்கை அதிகரிக்கும் ஜோடியாக வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. இளம் அரசியல்வாதிகள், இளம் கலைஞர்கள் ஆகியவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இசைத்துறையில் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தையின் திறமை மூலம் இன்று பெருமை கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட தினம்: செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9.
தானம் : ஏழைகளுக்கு தர்பூசணி பழத்தை தானம் அளிக்க வேண்டும்.
பிப்ரவரி 28ஆம் தேதி பிறந்த நட்சத்திரங்கள்: திக் விஜய் சிங், ரவீந்திர ஜெய், ஹசல் கீச், பத்மப்ரியா ஜானகிராமன், வர்ஷா உஸ்கோன்கார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News