முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 26, 2023) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 26, 2023) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | பிப்ரவரி 26-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் குணாதிசயத்திற்கும், நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கும் ஒத்து வராது. ஆனால், வாழ்க்கையில் புதியதாக ஏதோ ஒன்று நடைபெற இருக்கிறது. புதிய நண்பர், புதிய முதலீடு, புதிய வணிகம், புதிய வேலை, புதிய வீடு என ஏதோ ஒன்று நடைபெற உள்ளது. சொத்து விவகாரங்களுக்கு சுமுக தீர்வு கிடைக்கும். பணியில் சோம்பேறித்தனம் கூடாது.

  அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு மற்றும் நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

  அதிர்ஷ்ட எண் – 9

  தானம் - ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யவும்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் சுய மரியாதையை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதுமே மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டாம். பிறருக்கு அடிபணிந்து செல்ல வேண்டாம். உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தருணம் இது. கடந்த கால கடின உழைப்பிற்கு இப்போது நற்பலன் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்களில் வெற்றி கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் – பிரவுன்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 2

  தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் வலது கை மணிக்கட்டு பகுதியில் எப்போதும் சிவப்பு நிற கயிறு அணிய வேண்டும். அனைத்து சூழ்நிலைகளையும் அனுசரித்து வேலை செய்யக் கூடியவர் என்பதால் வெற்றி வெகு தொலைவில் இல்லை. சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி பிறர் உங்களை ஏமாற்றக் கூடும் என்பதால் உங்கள் தொழில்களில் இன்று கவனமாக இருக்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் – நீலம் மற்றும் சிவப்பு

  அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

  தானம் – கோவிலில் சந்தனம் வழங்கவும்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவும். தனிப்பட்ட விவகாரங்களில் பிறரை நம்ப வேண்டாம். நிதி சார்ந்த லாபங்கள் அதிகரிக்கும் மற்றும் உங்கள் திறனுக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்களது புகார்களை காது கொடுத்து கேட்கவும். இன்று தானம் செய்வது அவசியம்.

  அதிர்ஷ்ட நிறம் – நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணி வழங்கவும்.

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களுக்கான நல்ல காலம் மேம்பட அலுவலக மேஜையில் கிறிஸ்டல் தாமரை வைக்கவும். உங்கள் உணர்வுகளை பார்ட்னரிடம் வெளிப்படுத்துவதற்கான நாள் இதுவாகும். அலுவல் ரீதியிலான ஆவணங்களில் கையெழுத்திட உகந்த நாளாகும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளில் சிக்க வேண்டாம்.

  அதிர்ஷ்ட நிறம் - டீல்

  அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 5

  தானம் - ஆசிரமங்களில் குழந்தைகளுக்கு பச்சை நிற பழங்கள் கொடுக்கவும்.

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று காலைப் பொழுதில் விஷ்ணு மற்றும் லெட்சுமி மந்திரங்களை உச்சரிக்கவும். இன்று வாழ்க்கையில் முழுமையான நிறைவு ஏற்படும். தற்போதைய வாய்ப்புகளை வைத்தே அனைத்து பலன்களும் கிடைக்கும். குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஆதரவு ஆகியவை உன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நடிகர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

  அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

  தானம் - ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று மதிய உணவில் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் கடினமான, மூர்க்கமான நாளாக இருக்கலாம். உங்கள் வளர்ச்சி நிலையில் தாமதம் நிலவும். ஆனால், இது தற்காலிகமானதுதான். உங்கள் திறனை நீங்கள் பரிசீலனை செய்யவும். நிதி சார்ந்த லாபங்கள் கிடைக்கும். போட்டியாளர்களுடன் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க இடைத்தரகர்களிடம் தடகள வீரர்கள் விலகி இருக்க வேண்டும். மூத்த குடும்ப உறுப்பினர்களின் வழிகாட்டுதலில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

  அதிர்ஷ்ட நிறம் – பச்சை மற்றும் மஞ்சள்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3

  தானம் - வெண்கல அல்லது செம்புப் பாத்திரம் தானம் செய்யவும்.

  #எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  சுதந்திரமாக வாழுவதையே விருப்பமாக கொண்டவர்கள் இன்று சவால் எதையும் மேற்கொள்ள வேண்டாம். இன்றைய தினம் உங்கள் பணிச்சுமை காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடும். உங்களை சுற்றியுள்ள நபர்கள் விசுவாசமாக இருப்பதால் தலைமை அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை கொள்ளவும்.

  அதிர்ஷ்ட நிறம் – ஊதா

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - ஏழைகளுக்கு கருப்பு நிறப் பொருட்களை தானம் செய்யவும்.

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பெண்கள் இன்றைக்கு நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் மற்றும் தடகள வீரர்களுக்கு அங்கீகாரம் மற்றும் பரிசு ஆகியவை கிடைக்கும். இன்றைய தினம் முழுமையான ஆற்றலை உணருவீர்கள். அதை செயல்படுத்தி வெற்றி காணவும். இன்றைய தினம் சொத்து ஆவணப் பதிவுகள் சுமூகமாக நடக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் – சிவப்பு நிற கைக்குட்டையை தானம் செய்யவும்.

  பிப்ரவரி 26 அன்று பிறந்த பிரபலங்கள் : மன்மோகன் கிருஷ்ணா, பண்டாரு தத்தாத்ரேயா, நியோல் டேவிட், பஜ்ரங் புனியா பண்டாரு

  First published:

  Tags: Numerology, Tamil News