ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 ஜனவரி 2023) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 ஜனவரி 2023) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | ஜனவரி 17-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பெரும்பாலான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன என்றாலும், அவை அனைத்திற்கும் வெகு விரைவில் தீர்வு கிடைக்க இருக்கிறது. புதிய வீடு, புதிய நண்பர் அல்லது புதிய முதலீடு, புதிய வேலை போன்றவற்றுக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கும். சட்ட விவகாரங்களில் கவனம் தேவை.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - ஆசிரமத்தில் உணவு தானம் செய்யவும்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் அலுவலக மேஜையில் மூங்கில் செடியை வைக்கவும். திறந்த மனதுடன் செயல்பட வேண்டாம். உங்கள் அப்பாவித்தனம் மற்றும் உதவும் குணம் ஆகியவற்றை சிலர் தவறாக உபயோகிக்க கூடும். சில நேரங்களில் முடியாது என்பதை நீங்கள் உறுதியாக சொல்ல வேண்டியிருக்கலாம். உங்கள் புத்திகூர்மையை பயன்படுத்த வேண்டிய தருணம் இது.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 2

  தானம் - ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யவும்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வீட்டின் தென்புற சுவற்றில் சிவப்பு நிற விளக்கு மாட்டி வைக்கவும். அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்களின் உள்நோக்கங்களை புரிந்து கொண்டு செயல்படுங்கள். பணத்தை கையாளும் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படவும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்க இருக்கிறது.

  அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

  தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்.

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வணிகத்தில் திட்டமிடல் மற்றும் உத்திகளின் மூலமாக உங்களுக்கான வளர்ச்சி காத்திருக்கிறது. அரசு வேலையில் இருப்பவர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் இன்று தங்கள் இலக்கை நோக்கி செயல்பட வேண்டும். நேரம் சாதகமானதாக இருப்பதால் அரசு வேலையை விரும்பும் மாணவர்கள் அதற்கு இப்போது விண்ணப்பிக்கலாம். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் க்ரே

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - விலங்குகளுக்கு உப்பு கலந்த உணவு வைக்கவும்.

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  குறுக்கு வழிகளை தவிர்த்து, நேர்மையான முறையில் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். உங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு சிறப்பான நாளாகும். இயந்திரங்களை வாங்கவும், சொத்துக்களை விற்கவும் உகந்த நாள் இது. பயணங்களுக்கு திட்டமிடலாம். உங்கள் எதிரிகளின் சதி வலைகளை முறியடிக்க கற்றுக் கொள்ளவும்.

  அதிர்ஷ்ட நிறம் - டீல்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 5

  தானம் - ஆசிரமங்களில் உப்பு தானம் செய்யவும்.

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  விற்பனை, உணவு, மார்க்கெட்டிங், வர்த்தகம், நகை விற்பனை, வீட்டு அலங்காரம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். உங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ள தயாராக இருக்கவும். இன்றைய தினம் அனைத்து விதமான பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள். சொகுசான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

  தானம் - ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கேது பூஜை செய்யவும். பழைய சொத்துக்களை கொண்டு நிதி ரீதியிலான வளர்ச்சியை எட்டுவீர்கள். உறவுகளை கொண்டாடுவதற்கான நேரம் நெருங்கி வருகிறது. வணிகம் சார்ந்த விஷயங்களில் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். தடகள வீரர்கள் பிரச்சினைகளை தவிர்க்க போட்டியாளர்களிடம் இருந்து விலகி இருக்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 7

  தானம் - ஆசிரமங்களில் ஆடைகளை தானம் செய்யவும்.

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் கோபத்தை கட்டுப்படுத்தவும். அதிகமாக சிந்தித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் ரிலாக்ஸ் ஆக இருக்கவும். உங்களை சுற்றியுள்ள அனைவரும் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பதால் தலைமைத்துவ அனுபவத்தை நீங்கள் பெறலாம். உங்கள் உடல் நலன் குறித்து அக்கறை கொள்ளவும். பசுமையான தோட்டத்தில் நேரம் செலவிடவும்.

  அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - உப்பு கலந்த உணவுகளை ஏழைகளுக்கு வழங்கவும்.

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பெண்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இன்றைய தினம் குதூகலம் நிறைந்ததாக இருக்கும். அனைத்து ஆற்றல்களையும் ஒற்றை இலக்கு நோக்கி செயல்படுத்தவும். நிதி சார்ந்த திட்டமிடல்கள் மற்றும் சொத்து சார்ந்த பத்திரப் பதிவுகள் ஆகியவை இன்று தடங்கல் இன்றி நிறைவேறும். புகழ் மற்றும் அங்கீகாரம் உங்களை தேடி வரும்.

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் - கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்.

  ஜனவரி 17 அன்று பிறந்த பிரபலங்கள் : ஜாவேத் அக்தர், கிருஷ்ணதேவராயர், ஹனி இரானி, கமல் அரோஹி, எம்.ஜி.ராமச்சந்திரன், எல்.வி.பிரசாத்

  First published:

  Tags: Numerology, Tamil News