ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 நவம்பர் 2022) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 நவம்பர் 2022) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 16-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் ஆளுமை தொடர்பாக உங்கள் பார்ட்னருடன் ஏதேனும் விவாதங்கள் ஏற்படலாம், ஆனால் உங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். அரசு ஒப்பந்தங்களில் கையெழுத்திட, விளக்கக்காட்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இன்று நல்ல நாள். உதவி கேட்டு வரும் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். வலுவான பின்னணி கொண்ட நபரின் உதவியின் மூலம் சட்ட அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களை தீர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் – 1 மற்றும் 7

தானம் – கால்நடைகள் மற்றும் ஏழைகளுக்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் கனவு உணர்வுகளை நிஜமாக்கும் நாள் இது. தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு வேலையில் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேரும் நேரம். பிறரிடம் உங்கள் எதிர்காலத் திட்டங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் – வான் நீலம் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் – 2 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு கோவிலில் எண்ணெய் தானம் செய்யவும்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வசீகரமும் ஆற்றலும் உங்களை சுற்றி இருப்பவர்களை ஈர்க்கும். தியானம் செய்வதன் மூலம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லுங்கள். பொது பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். புதிய உறவுகள் மலரும். இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இன்று தங்களது தொழில் வளர்ச்சிக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - குழந்தைகளுக்கு மஞ்சள் நிற பென்சிலை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிக பண வரவு இருப்பது எதிர்காலத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தும். பச்சை நிற உணவுகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்களில் உள்ளோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு எலுமிச்சைகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் குடும்பம் மற்றும் அலுவலகத்தில் அதிகாரத்தை செலுத்த முயற்சி செய்யாதீர்கள். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரி அல்லது சீனியர் இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலால் ஈர்க்கப்பட்டு உங்களை பாராட்டுவார்கள். உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம் மற்றும் வெகுமதி கிடைக்கும் நாள். சொத்து அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற நாள். இன்று அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிறத்தை உடலில் அணியுங்கள். வாழ்க்கையில் இன்று உங்களுக்கு விருப்பமான விஷயங்கள் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற உணவுகளை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதலிப்பவர்கள், தம்பதிகளுக்கு இன்று ஸ்பெஷலான நாளாக இருக்கும். விவாதங்களில் இருந்து விலகியே இருங்கள். இன்று உங்கள் தோளில் அதிக பொறுப்புகளை எடுக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் அனைத்தையும் மகிழ்ச்சியாக செய்ய முடியாது. வணிகம் மற்றும் வேலை வளர்ச்சி அழகாக இருந்தாலும் தனிப்பட்ட பிரச்சினைகள் இன்று மிகவும் சிக்கலாக இருக்கும். வாக்குவாதங்களில் இருந்து விலகி பேச்சில் கனிவு, நடத்தையில் நிதானம் காட்ட வேண்டும். ஹோட்டல் வியாபாரிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் – ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் ஆளுமை மற்றும் பகுப்பாய்வு திறன் தான் உங்களுடைய சொத்துக்கள். எனவே உங்கள் இமேஜிற்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் ஈடுபடுவதைத் எதிர்கொள்வதை தவிர்க்கவும். இன்றைய தினம் ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். உறவுகளில் நம்பிக்கை அதிகரிக்கும், நேர்மையாக இருப்பது அவசியம். வழக்கறிஞர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆடிட்டர்களுக்கு சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் – கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இன்றைய தினத்தை உற்சாகமாக செலவழிக்கலாம், ஷாப்பிங் செல்லலாம். காதல் உறவுகளை வலுப்படுத்தவும் இன்று சிறந்த நாள். வணிகத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும். குறுகிய கால இலக்கை அடைந்து விட்டோம் என்று மகிழ்ச்சியடையாமல் நீண்ட கால இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் – கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யவும்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பொது இடங்களில், மக்கள் கூடும் இடங்களில் செலவழிக்க ஏற்ற நாள். ஊடகம், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் துறையைச் சேர்ந்தவர்கள் புதிய உச்சம் காண்பார்கள். இன்று பண வரவு நிறைந்த நாள். வணிகம் அல்லது வேலையை மேம்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு ஒரு அழகான நாள் காத்திருக்கிறது என்பதால் உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். அதிர்ஷ்டம் அதிகரிக்க சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பெண்களுக்கு ஆரஞ்சு நிறத் துணிகளை தானம் செய்யுங்கள்

நவம்பர் 16-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஆதித்ய ராய் கபூர், புல்லேலா கோபிசந்த், ராமோஜி ராவ், தேஜஸ்வி சூர்யா, மீனாக்ஷி சேஷாத்ரி, மருத்துவர் ஸ்ரீராம் லகூ

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News