முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 05, 2023) கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 05, 2023) கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | பிப்ரவரி 05-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 2-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் மனதை கேட்டு உங்களுக்கான ஆர்வத்தை பின்பற்ற வேண்டிய நாள். போட்டிகள் மற்றும் போட்டி தேர்வுகளில் பங்கேற்றால் வெற்றி பெறுவீர்கள். ரேஸ் அல்லது பங்கு சந்தையில் இருந்து விலகி இருங்கள். உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த, வேலையில் உயர் பதவியை பெற நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து பாராட்டுகள், வெகுமதிகள், ஆதரவை பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். நடிப்பு, கலைப்படைப்பு, அழகுசாதனப் பொருட்கள், விவசாய துறையில் உள்ளவர்கள் இன்று வெற்றி பெறுவார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: டீல்

  அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

  அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு வாழைபழங்களை தானம் செய்யுங்கள்

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அபாரமாக வேலை செய்யும் அதே நேரம் தனிப்பட்ட உறவுகளில் கவனமாக இருங்கள். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற இன்று சிறந்த நாள். குழந்தைகளின் செயல்திறனை கண்டு பெற்றோர்கள் மகிழ்வார்கள். காதல் ஜோடிகளின் உறவு இன்று பலப்படும். கூட்டம் மற்றும் பார்ட்டிகளில் இருந்து விலகி இருங்கள். ஊடக துறையினர், அரசியல்வாதிகள்,டிசைனர்கள், மருத்துவர்கள் மற்றும் நடிகர்கள் இன்று சிறப்பான வெற்றியை அனுபவிப்பார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

  நன்கொடைகள்: கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  ஒரு புதிய முயற்சியை தொடங்கும் எண்ணம் இன்று வெற்றிகரமாக முடியும். தனிப்பட்ட உறவுகளில் வலுவான வளர்ச்சியை காணலாம். குடும்பத்தினருடன் இன்று வெளியே சென்று நேரம் செலவிடுங்கள். படைப்பாற்றல் மிக்கவர்கள் முதலீடு மற்றும் வருமானத்திற்கு இன்று சிறந்த நேரத்தைக் கொண்டிருப்பார்கள். விளையாட்டு வீரர்கள், பங்கு தரகர்கள், விமான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையும்.

  அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

  நன்கொடைகள்: ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  ஏற்கனவே நிலுவையில் உள்ள அல்லது தாமதமான பழைய பணிகளை இன்று முடிப்பீர்கள். இளைஞர்கள் தங்கள் பார்ட்னரிடம் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள சிறந்த நாள். அவநம்பிக்கையான நட்பு அல்லது உறவுகளை தவிர்க்கவும். இன்று அசைவம் அல்லது மதுவை தவிர்க்கவும். காலையில் இருந்தே நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் அனைத்துமே உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: டீல்

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  ட்ராவல், ஷாப்பிங், பார்ட்டி அல்லது கொண்டாட்டத்தில் ஈடுபட இன்று நேரத்தை செலவிட்டு உற்சாகமாக அமையும். வாழ்க்கையில் மேம்பட்ட வளர்ச்சியை பெற அதிகபட்ச வாய்ப்புகளை இன்று முயற்சிக்க நினைவில் கொள்ளுங்கள். சுற்றுப்பயணம் செய்ய, ரிஸ்க் எடுக்க, சொத்து வாங்கவும், போட்டிகளில் பங்கேற்க சிறந்த நாள். நீங்கள் விரும்பும் பொருள் சிறியது அல்லது பெரியது எதுவாக இருந்தாலும் தயங்காமல் வாங்குங்கள். பதவி உயர்வு பெறும் வாய்ப்பு உண்டு.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

  அதிர்ஷ்ட நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  நன்கொடைகள்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை தானம் செய்யுங்கள்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  ஆடிஷன்கள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்றால் உங்கள் கவர்ச்சிகரமான ஆளுமையால் கவருவீர்கள். இன்று உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். உயர் படிப்பு, புதிய வீடு, வேலை, புதிய உறவுகள், பண ஆதாயம், பயணம், விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளில் உற்சாகத்தை அனுபவிப்பீர்கள். அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக அடைவீர்கள். அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், தரகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஓட்டல் வியாபாரிகள் மற்றும் மாணவர்கள் இலக்குகளை எட்டி வெற்றியை தக்க வைத்து கொள்வார்கள். எதிர்பார்த்த திருமண திட்டங்கள் இன்று நிறைவேறும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 2

  நன்கொடைகள்: குழந்தைகளுக்கு பென்சில் அல்லது பேனாவை கொடுங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பழைய நிலுவையில் உள்ள மூலங்களிலிருந்து இன்று உங்களுக்கு பணம் கிடைக்கும் நாள். பெண்கள் வளர்ச்சி காண்பார்கள். நம்பிக்கை மட்டுமே இன்று உங்களது நாளை சிறப்பாக்கும். வழக்கறிஞர்கள் மற்றும் மென்பொருள் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்கள் இன்று அதிகம் லாபம் பெறும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 7

  நன்கொடைகள்: ஆதரவற்ற மாணவர்களுக்கு எழுதுபொருட்களை வழங்கவும்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இலக்கை நோக்கி தொடர்ந்து கடினமாக உழைத்தால் வெற்றி அருகில் இருக்கும். உங்களின் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இன்று எந்த ஒரு சிரமத்திலிருந்தும் உங்களை வெளியே கொண்டுவர உதவும். காதல் உறவுகள் தம்பதிகளிடையே மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். மருத்துவர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், நாடக கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இன்று நிதி பலன்களை பெறுவார்கள். நிலம் வாங்குவதில் முதலீடு செய்ய சிறந்த நாள். பரபரப்பான நாளின் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கவனமாக இருங்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: ஆதரவற்றோர் இல்லத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  தங்கம் மற்றும் நிலம் போன்றவற்றில் முதலீடு செய்ய ஏற்ற நாள். நிகழ்வு மற்றும் பார்ட்டிகளில் பங்கேற்பது அல்லது விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதன் மூலம் உற்சாகமாக இருக்கலாம். நடிகர்கள், பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர் இன்று புகழ், ஆடம்பரம், வாய்ப்புகளை அனுபவிக்க சிறந்த நாள்.

  அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு காய்கறிகளை தானம் செய்யுங்கள்

  First published:

  Tags: Numerology, Tamil News