ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (10 நவம்பர் 2022) கோவிலில் தேங்காய் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (10 நவம்பர் 2022) கோவிலில் தேங்காய் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 10-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு அனைத்துப் பணிகளையும் செய்து முடிக்க உங்கள் நம்பிக்கை உதவிகரமாக இருக்கும். சொகுசாக பயணம் செய்து, உங்கள் இலக்கை உரிய நேரத்தில் அடைவீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும் மற்றும் பண வரவு உண்டு. வெற்றி கிடைக்க வேண்டுமெனில் சூரியக் கடவுளின் ஆசிகளைப் பெறவும். பெண்கள் சமையல் திறன் மூலமாக மற்றவரின் மனதை வென்று காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மாலையில் பால் குளியல் எடுத்துக் கொள்ளவும். நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றியை தக்க வைப்பீர்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் உறவுகளுடன் நேரம் செலவழிக்க வேண்டிய தருணம் இது. முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, நிதி சார்ந்த விஷயங்களில் பெரும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். இறக்குமதி, ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காலைப் பொழுதில் துளசி தண்ணீர் குடிக்கவும். மாணவர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் வெற்றி கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆனால், உங்கள் வழிகாட்டிக்கு நன்றி சொல்லுங்கள். கனிவான மற்றும் அன்பான வார்த்தைகள் மூலமாக உங்கள் பார்ட்னரின் மனதை ஈர்க்கலாம். திருமண ஏற்பாடுகள் குறித்து பரிசீலனை செய்யவும். பெண்கள் மஞ்சள் நிற உணவு சமைத்து பரிமாறவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - கோவிலில் சந்தனக்கட்டை தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல இதுவே சரியான தருணம் ஆகும். குழப்பங்களை தவிர்க்க முறையான திட்டமிடல் அவசியம். பாதுகாப்பு துறை, சொத்து முகவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் டெலிகாம் வணிகம் சார்ந்தவர்களுக்கு பலன்கள் கிடைக்கும். பெரும்பாலான நேரத்தை திட்டமிடுதல் அவசியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுண்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பசுந்தானியம் தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வாழ்க்கை துணை மீது ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கவும். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். சக பணியாளர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும். யாரிடமும் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், அசைவ உணவு சாப்பிடுவதையும் தவிர்க்கவும். சொத்து சார்ந்த முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தடகளப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - கோவிலில் தேங்காய் தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டில் இருந்து பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். திருமண ஏற்பாடுகள் கூடி வரும். உங்களுக்கான வாய்ப்பை பெற வேண்டும் என்றால் புத்தாக்க சிந்தனை அவசியம். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணருவீர்கள் மற்றும் நல்ல வாழ்க்கை துணை அமைந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லவும். சினிமா மற்றும் அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் பீச்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளை நிற நாணயம் தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் ஏற்ற, இறக்கம் சார்ந்ததாக இருக்கும். உங்கள் புத்திகூர்மையை பயன்படுத்தி வணிகம் சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறவும். மருத்துவ பரிசோதனைகளை மாலையில் கடைப்பிடிக்கவும். இன்று மூத்தவர்களுக்கு சேவை செய்யவும் மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எதிர் பாலினத்தவரின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவும். வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்டுக் கொண்டால் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு பாத்திரங்களை தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அடர்ந்த நிறத்திலான ஆடைகளை அணிய வேண்டாம். எந்த ஒரு சூழ்நிலையையும் அனுசரித்து வேலை செய்தால் இறுதியில் வெற்றி நிச்சயம். சுமூகமான தீர்வுகளுக்கு உங்கள் அறிவு மற்றும் பணம் ஆகியவற்றை பயன்படுத்தவும். சட்ட வழக்குகளுக்கு செல்வாக்கு மிகுந்த நபர்களின் மூலமாக தீர்வு கிடைக்கும். உங்கள் முடிவுகள் அனைத்தும் கனக்கச்சிதமாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு குடை வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று வாழை மரத்திற்கு சர்க்கரை தண்ணீர் ஊற்றவும். தம்பதியர்கள் எதிர்கால வாழ்வுக்கு திட்டமிடலாம். அரசு ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். மீடியா, இசை, கல்வித் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் அதிகரிக்கும். எதிர்கால அரசியல் தலைவர்களுக்கு இன்று புதிய பொறுப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றில் பங்கேற்கலாம். மருத்துவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு நிற பருப்பு தானம் செய்யவும்.

நவம்பர் 10 அன்று பிறந்த பிரபலங்கள் : ஆஷுதோஷ் ராணா, நீதா அம்பானி, சைமன் சிங், கேசரிநாத் திரிபாதி, கணேஷ் ஹெக்டே, ஆனந்த் ராஜ் ஆனந்த்

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News