ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 ஜனவரி 2023) ஏழைகளுக்கு துணி தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 ஜனவரி 2023) ஏழைகளுக்கு துணி தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | ஜனவரி 23-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் செய்யும் வேலையின் மூலம் பெயர் மற்றும் புகழை நிலைநாட்டவும் , பதவியை வகிக்கவும் நீங்கள் நம்பிக்கையுடனும் சுதந்திரமாகவும் செயல்படுவீர்கள். தனிமை குறித்த பயம் இன்று குறையும். தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஒரு குழுவின் தலைவராக இருகும்பட்சத்தில் தங்களின் கீழ் செயல்படும் குழு உங்களுக்காக முழு அர்பணிப்புடன் செயல்படுவர். நண்பர்களின் ஆதரவை பெறும் நாள். கலைத்துறை, நடிப்பு, சோலார் எனர்ஜி, அழகுசாதனப் பொருட்கள், விவசாயம் மற்றும் சொத்து சம்மந்தமான துறைகளை சார்ந்தவர்கள் முன்னிலை பெறும் நாள்.

உகந்த நிறம் : பச்சை மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் : ஞாயிறு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுடன் பழகும் சக நண்பர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெண்கள் தங்கள் உறவுகளை சீரமைக்க கடினமாக உழைக்க இந்த நாளை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் தங்கள் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, அதிர்ஷ்டம், மூலம் மகிழ்ச்சியாக இருப்பர். அவர்களின் கல்வித்திறனைக் கண்டு பெற்றோர்கள் பெருமைபடுவர். முக்கியமான சந்திப்புகள் அல்லது நேர்காணல்களில் வெள்ளை அல்லது அக்வா நிற ஆடைகள் அணிந்து செல்வது அதிக அதிர்ஷ்டத்தை தரும். ஊடக நண்பர்கள், அரசியல்வாதிகள், வடிவமைப்பாளர், மருத்துவர்கள் மற்றும் நடிகர்கள் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள்.

உகந்த நிறம்: இளம் நீலம்

அதிர்ஷ்டமான நாள் : திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உறவுகளுடன் மனதைத் திறந்து பேசும்போது அந்த உறவில் விரிசல் ஏற்படாது. படைப்பாற்றல் மிக்க கலைஞர்களுக்கு முதலீடு மற்றும் வருமானத்திற்கு சிறந்த நேரம். விளையாட்டு வீரர், பங்கு தரகர்கள், விமான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், கல்வியாளர்கள், உணவக உரிமையாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பதவி உயர்வு, மற்றும் பிரபலமாகும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் புரிபவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை மதிய உணவுக்குப் பிறகு சந்திப்பது நல்லது.

உகந்த நிறம்: பழுப்பு

அதிர்ஷ்டமான நாள் : வியாழன்

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 1

நன்கொடைகள் : ஆசிரமங்களில் நாட்டு சர்க்கரையை தானம் செய்வது நல்லது

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை தொடர்ந்தால், அந்த திட்டங்களைச் செயல்படுத்தக்கூடிய ஒரு சுமூகமான நாள். இளைஞர்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நட்பை அல்லது உறவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். சேல்ஸ் துறையில் உள்ளவர்கள் மார்க்கெட்டிங் உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் நல்ல அதிர்ஷ்டம் கிட்டும். அசைவம், மதுவை தவிர்க்கவும். விலங்குகளுக்கு உணவு அளிக்கவேண்டும்.

உகந்த நிறம்: நீல பச்சை

அதிர்ஷ்டமான நாள் : செவ்வாய்

அதிர்ஷ்ட எண் : 9

நன்கொடைகள்: ஏழைகளுக்கு துணி தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள், மனதளவில் தைரியமானவர்கள். ஆனால் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதால் நிதானமாக செயல்பட வேண்டும். உறவுகளை அனுபவிக்கவும், ஷாப்பிங் செய்யவும், பங்குகளை வாங்கவும், போட்டிகளில் விளையாடவும் அதை எதிர்கொள்ளவும் ஒரு சிறந்த நாள். இன்று ஒரு சிறிய பயணம் செல்வீர்கள். ஒரு ஸ்பெஷலான நபரை சந்திப்பீர்கள். இன்று நீங்கள் விரும்புவதை வாங்குங்கள், அது பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, எல்லாமே சிறப்பாக இருக்கும். வேலைகளில் இருப்போர் பதவி உயர்வு பெறும் நாள்.

உகந்த நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் : புதன்

அதிர்ஷ்ட எண் : 5

நன்கொடைகள்: பசுமையான செடிகளை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகளை சந்தித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் நாள். புதிய வீடு, வேலை, புதிய உறவுகள், ஆடம்பரம், பயணம், விருந்து மற்றும் இன்று நீங்கள் அனுபவிக்காத அனைத்தையும் அடையும் ஒரு நாள். ஒரு சாதனையாளராக உங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள், வீடுகள், விளையாட்டு வீரர்கள், தரகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஓட்டல் வியாபாரிகள் மற்றும் மாணவர்கள் களத்தில் தங்கள் இலக்குகளை எட்டி வெற்றியை காண்பீர்கள். இல்லத்தரசிகள் மற்றும் ஆசிரியர்கள் உங்கள் குடும்பத்தினரால் மரியாதை மற்றும் பாசத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்த திருமண திட்டங்கள் இன்று நிறைவேறும்.

உகந்த நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் : வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 2

நன்கொடைகள்: குழந்தைகளுக்கு நீல பென்சில் அல்லது பேனாவை தானமாக வழங்குங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஆவணங்கள் மற்றும் சட்ட வழக்குகளில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பெண்கள் நடத்தும் வியாபாரத்தில் இன்று அதிர்ஷ்டம் தரலாம். இன்றைய நாள் தொடங்குவதற்கு முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று மஞ்சள் பருப்பை தானம் செய்ய மறக்காதீர்கள். சிறு வணிகத்தில் அதிகம் லாபம் பெறும் நாள். வழக்கறிஞர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தவிர்த்து அலுவலகத்திற்கு செல்வது நல்லது.

உகந்த நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் : திங்கள்

அதிர்ஷ்ட எண் : 7

நன்கொடைகள்: தாமிர உலோகம் பாத்திரத்தை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். காதலில் இருப்போருக்கு மகிழ்ச்சியாக இருக்க ஒரு சிறப்பு தருணம். மருத்துவர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், நாடக கலைஞர்கள், மருந்தாளுனர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பண பலன்களைப் பெறுவார்கள். இயந்திரங்கள் வாங்குவதற்கும், உலோகம் வாங்குவதற்கும் சிறந்த நாள்.

உகந்த நிறம்: நீலம்

அதிர்ஷ்டமான நாள் : வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் : 6

நன்கொடைகள் : அனாதை இல்லத்திற்கு கடுகு எண்ணெய் தானம் செய்வது நல்லது

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தொண்டு செய்வது என்பது உங்கள் வீட்டிலிருந்து தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன்னதாக உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை முதலில் தீர்க்க முயற்சிக்கவும். நடிகர்கள், பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், ஊடகங்கள் என மக்கள் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு, பெயர், புகழ், அதிர்ஷ்டம் மற்றும் சொத்து ஆகியவை பெற ஒரு சிறந்த நாளாக அமைகிறது. இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த உறவுகளை கவர சாதகமான நாள். புதிய நண்பர்களை உருவாக்குதல், ஆடிஷனில் கலந்துகொள்வது, நிகழ்வில் கலந்துகொள்வது, பார்ட்டி நடத்துதல், நகைக்கடை, ஆலோசனை வழங்குதல் அல்லது விளையாட்டு விளையாடுதல் போன்றவற்றை அனுபவிக்க ஒரு அற்புதமான நாள்.

உகந்த நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்டமான நாள் : செவ்வாய்

அதிர்ஷ்ட எண் : 9 மற்றும் 6

நன்கொடைகள்: பெண் குழந்தைக்கு சிவப்பு கைக்குட்டையை தானம் செய்யுங்கள்

ஜனவரி 23 அன்று பிறந்த பிரபலங்கள் : பால் தாக்கரே, சுபாஷ் சந்திர போஸ், நாரா லோகேஷ், ரேகா தர்த்வாஜ், நிரோஷா, ரமேஷ் சிப்பி

First published:

Tags: Numerology, Tamil News