ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (03 ஜனவரி 2023) ஆசிரமத்திற்கு உடைகளை தானம் அளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (03 ஜனவரி 2023) ஆசிரமத்திற்கு உடைகளை தானம் அளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜனவரி 03-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் 1: (1, 19 20 28 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

கலைத்துறை மற்றும் உருவாக்கத் துறையில் இருப்பவர்களுக்கு இன்று அதிர்ஷ்ட நாளாக அமையும். சொத்துக்களை வாங்குவதற்கு விற்பதற்கும் ஏற்ற நாள். கட்டிடக்கலை, விவசாயம், மருத்துவம், பைனான்ஸ் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு இன்று அதிர்ஷ்ட நாளாக அமையும். சூரிய பகவானை வழிபடுவதும் குரு மந்திரத்தை உச்சரிப்பதும் நன்மையை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் – 3

தானம் - மஞ்சள் கடுகு எண்ணெயை பிச்சைக்காரர்களுக்கு தானம் அளிக்க வேண்டும்.

எண் 2: (2, 11, 20, 29 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

வடக்கு பகுதியில் மூங்கிலை நட்டு வைத்து வளர்ப்பது அதிர்ஷ்டம் தரும். வெற்றியை ஈட்டுவதற்கு ராஜதந்திரங்களை மேற்கொள்வீர்கள். பேச்சில் அதிக கவனம் தேவை. அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவதற்கு ஏற்ற நாள். சந்திர பகவானிற்கான மந்திரத்தை உச்சரிப்பது அதிர்ஷ்டம் தரும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்ட நாள் - திங்கள்

அதிஷ்ட எண் - 2 மற்றும் 6

எண் 3: (3, 12, 22, 30 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

உற்சாகமான புத்துணர்சியுடைய மனப்பான்மையால் சுற்றியுள்ள அனைவரையும் கவர்வீர்கள். எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள், வங்கி பணியில் இருப்பவர்கள், ஆசிரியர்கள் தங்களது பேச்சின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். புதிய உறவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணர்வுகளை கட்டுப்படுத்துவது நல்லது. எழுத்தாளர்கள், ஹோட்டல் துறையில் இருப்பவர்கள், நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நாள் அதிர்ஷ்ட நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட எண் - 3

அதிர்ஷ்ட தினம்- வியாழன்

தானம் கோவில்களுக்கு மஞ்சள் கடுகு எண்ணெயை தானம் அளிக்க வேண்டும்.

எண் 4: (4,13,22,32 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

திட்டமிட்டு செயல்களை நிறைவேற்ற உகந்த நாள். புதிய உத்திகளுக்கும், திட்டங்களுக்கும் ஏற்றவாறு உங்களை தயார் படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. பாரம்பரிய பழக்கங்களை உடைத்து, நவீன பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றி கொள்ள வேண்டும். பச்சை இலை தாவரங்களை மாடுகளுக்கு தீவனம் அளிப்பது நன்மையை கொடுக்கும். சாப்ட்வேர், மரவேலை, கட்டிடக்கலை. உலோகம் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட தினம் - வியாழன்

அதிஷ்ட எண் - 9.

தானம் - ஆசிரமத்திற்கு உடைகளை தானம் அளிக்க வேண்டும்.

எண் 5: ( 5, 14, 23 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

சில நேரங்களில் உங்களது அதிக புத்திசாலித்தனம் மற்றவர்களை காயப்படுத்தும் விதத்தில் அமையலாம். இன்றைய நாள் முழுவதும் உணர்வுகளை கட்டுப்படுத்தி இருக்க கற்றுக் கொள்வது நல்லது. உங்கள் வேலைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற நாள். விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பட இயக்குனர்கள், நடன இயக்குனர்கள் ஆகியோர்களுக்கு இன்று அதிர்ஷ்ட நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்ட நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

எண் 6: (6, 15, 24 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக கவலை கொள்வீர்கள். எதிர்காலத்தை நினைப்பதை விட்டு நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது நன்மையை கொடுக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை. சரியாக நடக்கும் பட்சத்தில் பல பிரச்சினைகள் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புதிய பொறுப்புக்கள் உங்கள் தோளில் சுமத்தப்படலாம். நகை கடைக்காரர்கள், நடிகர்கள், விமான ஓட்டிகள், மருத்துவர்கள் ஆகியோர் தங்கள் திறமையை பயன்படுத்தி நல்ல பலனையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு ஏற்ற நாள். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் பங்கு பெற வேண்டிய சூழல் உண்டாக்கலாம். உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் கடல் பச்சை

அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

எண் 7: (7,16,25 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

நீங்கள் மனமுதிர்ச்சியை பயன்படுத்தி எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நன்மையை கொடுக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகள் உண்டாகலாம். நஷ்டங்களுக்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக அவற்றை நீக்க வேண்டிய சமயம் வந்துவிட்டது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடமும் முதலாளிடமும் வாக்குவாதங்களில் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள், ஹீலர்கள், ஆன்மீக பேச்சாளர்கள், ஆன்மீக குருக்கள் ஆகியவர்களோடு நல்ல உறவு ஏற்படும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட தினம் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - துப்புரவு பணியாளர்களுக்கு மஞ்சள் நிற உடைகளை தானம் செய்ய வேண்டும்.

எண் 8: (8,17,26 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

பதவி உயர்வுக்கும், புதிய வேலை வாய்ப்புகளுக்கும், திருமணம் வாய்ப்புகளுக்கும் காத்திருப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம். உங்களது உயர் அதிகாரி ஒருவரின் உதவியோடு நல்ல நிலையை அடைய வாய்ப்புகள் உண்டு. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. பண பரிமாற்றம் சம்பந்தப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக இருக்கும். ஒப்பந்தங்கள் மற்றும் நேர்காணல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புகழ் உண்டாகும். காதல் வாழ்க்கையும் ஆன்மீக வாழ்க்கையும் நல்ல அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும்.

உங்கள அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

அதிஷ்ட எண் - 6

தானம் - பச்சை தானியங்களை மாடுகளுக்கு உணவளிக்க வேண்டும்.

எண் 9: (9, 18, 27 பிறந்தவர்களுக்கான பலன்கள்)

கலைத்துறையில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பைனான்ஸ் துறையில் இருப்பவர்களுக்கு இன்று அதிர்ஷ்ட நாளாக அமையும். சொத்துக்கள் வாங்கும் விற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கும் கலைஞர்களுக்கும் இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தொழிலில் வெற்றியை ஈட்டுவதற்கு இன்று ஏற்ற நாள். சிவப்பு நிற உடை அணிவது அதிர்ஷ்டம் தரும். திருமண வயதில் உள்ளவர்கள் திருமணப் பேச்சு எடுப்பதற்கு இன்று ஏற்ற நாள். கோபத்தை கட்டுப்படுத்தி பேச்சுக்களில் கவனம் செலுத்த வேண்டும். உணவில் சிட்ரஸ் பழ வகைகளை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட நாள் - 9 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு தர்பூசணி பழத்தை தானம் அளிக்க வேண்டும்.

ஜனவரி 3ம் தேதி பிறந்த நட்சத்திரங்கள்: சேட்டன் ஆனந்த், யஷ்வந்த் சின்ஹா, புஷ்பவல்லி, குல் பனாக், சாவித்திரிபாய் பூலே, சஞ்சாய் கான்.

First published:

Tags: Numerology, Tamil News