ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (22 டிசம்பர் 2022) அநாதை இல்லங்களுக்கு வாழைபழம் தானமளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (22 டிசம்பர் 2022) அநாதை இல்லங்களுக்கு வாழைபழம் தானமளிக்க வேண்டும்.!

எண்கணித பலன்

எண்கணித பலன்

Numerology | டிசம்பர் 22-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முக்கிய வேலைக்காக வெளியே செல்லும் போது உங்களுடன் சிறிதளவு கடுகு விதைகளை எடுத்து செல்வது அதிர்ஷ்டம் கொடுக்கும். நாளில் சில சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய சூழல் வரலாம். உங்கள் திறனின் மீது நம்பிக்கை வைத்து தைரியமாக செயல்படுவதன் மூலம் சவால்களை முறியடித்து வெற்றிகளை குவிப்பீர்கள். ஆரம்பத்தில் சிக்கலாக ஆரம்பிக்கும் ஒரு விஷயம் பின்னர் உங்களுக்கு நன்மை தரக்கூடிய விதத்தில் முடியும். சொத்துக்களை விற்க முடிவு செய்திருந்தால் இன்று மிகவும் நல்ல நாள். இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், புத்தகம், மருத்துவம் மற்றும் அழகு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு மிக நல்ல நாளாக அமையும். அரசியல்வாதிகள் மற்றும் விமானிகளுக்கு தலைமை பதவி கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளுக்கு தங்களுடைய ஆசிரியர்களிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 1

தானம்: ஆசிரமங்களுக்கு கோதுமை தானமளிப்பது நன்மை கொடுக்கும்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்கள் உங்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம். அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். சில நேரங்களில் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம் அல்லது மற்றவர்களின் கருத்துகளில் ஏதேனும் முரண்பாடு ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்காமல் உலகத்தோடு ஒத்து வாழ்வது நல்லது. உங்கள் மரியாதையை கெடுக்க கூடிய ஒரு நபரை நீங்கள் சந்திக்கலாம். எனவே மற்றவர்களுடன் பழகுவதில் அதிகம் கவனம் தேவை. பெண்கள் தங்கள் பார்ட்னரின் உன்னிப்பாக கவனிக்கும் இயல்பை பற்றி அதிக கவலை கொள்ள தேவையில்லை. உங்கள் பழைய தொடர்புகளை பயன்படுத்தி அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்கு இன்று ஏற்ற நாள். போக்குவரத்து மற்றும் டிராவல் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் என்று கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் – ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண் – 6

தானம்: கோவில்களுக்கு வெள்ளை இனிப்புகள் தானம் அளிக்க வேண்டும்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தின் வலது பக்க சுவற்றிற்கு அருகில் செயற்கை நீருற்றை வைப்பதின் மூலம் பண வரவை அதிகரிக்க முடியும். அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்கள் கிடைக்கும். உயரதிகாரிகளுடன் உள்ள உறவு பலப்படும். பெரியவர்கள் மற்றும் ஆசான்களிடமிருந்து ஆசிகள் பெறுவதன் மூலம் அதிக நன்மையை பெறலாம். உள்ளுணர்வை நம்பி அதன் வழி நடப்பது நல்லது. நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர்கள் தங்கள் பேச்சின் மூலம் அதிக மக்களை கவர முடியும். நடிப்பு துறையில் உள்ளவர்கள் தங்கள் நடிப்ப்பு திறனை வெளிகொனர் வேண்டிய நாள் இன்று. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அதிக தாமதம் செய்ய வேண்டாம். முக்கியமாக எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், அரசியல்வாதிகள், உற்பத்தியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். காதலில் இருக்கும் நபர்களுக்கு தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொள்ளவும் எதிர்காலத்தை பற்றி திட்டமிடமும் ஏற்ற நாள். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களை சுற்றி உள்ளவரிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும் போது நெற்றியில் சந்தன திலகமிட்டு செல்வது நல்லது. குருவின் நாமத்தை உச்சரிக்க மறக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்- ஊதாஅ

திர்ஷ்ட நாள்: வியாழன்

அதிஷ்ட எண்: 3 மற்றும் 1

தானம்: கோவில்களுக்கு சந்தனம் தானமளிக்க வேண்டும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய திட்டங்களை தீட்டி அதன் வழி செயல்படுவதின் மூலம் அதிக பணம் ஈட்ட முடியும். சோம்பலை மறந்து தீவிரமாக வேலை செய்வதன் மூலம் அதிகளவு வெற்றிகளை ஈட்ட முடியும். உங்கள் செயல் திறனும் திட்டங்களை செயல்படுத்தும் திறமையின் மூலம் பல வெற்றிகளை குவிக்கலாம். உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சொத்துக்களை வாங்க நினைத்திருந்தால் சற்று தள்ளிப் போடுவது நல்லது. ஊடகம், சந்தை, மருத்துவர்கள், அரசியல்வாதிகள், மென்பொருள், கைவினை கலைஞர்கள், ஆகியோர்களுக்கு பயணங்கள் செய்வதின் மூலம் சில நன்மைகள் கிடைக்கக்கூடும். மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை இன்று தவிர்ப்பது நல்லது. மாமிசம் உண்பதை தவிர்க்க வேண்டும். தியானம் செய்வதின் மூலம் அதிக நன்மைகளை பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: சனி

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

தானம்: சிட்ரஸ் பழ வகைகளை பிச்சைகாரர்களுக்கு தானம் அளிக்கவேண்டும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சோம்பலை தவிர்த்து நேர்மையாக செயல்படுவதன் மூலம் உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். தனிப்பட்ட வாழ்வில் காதல் அதிகரித்து மிகவும் உற்சாகமான நாளாக அமையும். உங்களுக்கு ஏற்ற அங்கீகாரம் இன்று கிடைக்கும். தேவையற்ற கவன சிதறல் ஏற்படாமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக நன்மைகளை பெற முடியும். இடை தரகர்கள், சுற்றுலா தரகர்கள், ரியல் எஸ்டேட் செய்பவர்கள் வங்கியில் பணிபுரிபவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியவர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். விளையாட்டு மற்றும் விற்பனை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு பயணங்கள் செய்வதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். படிப்பில் மாணவர்களின் மதிப்பெண் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

தானம்: அநாதை இல்லங்களுக்கு வாழைபழம் தானமளிக்க வேண்டும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

லக்ஷ்மி நாராயணரை வழிபடுவது மிகவும் நன்மையளிக்க கூடியதாக இருக்கும். புதிய வாய்ப்புகளில் கவனத்தை சிதறவிடாமல் ஏற்கனவே இருக்கும் வேலையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். உங்கள் திறனை மேம்படுத்தி கொள்ள புதிய முயற்சிகளை செய்ய வேண்டும். அலுவலகத்தில் பணி உயர்வுக்காக காத்திருக்கும் நபர்களுக்கு எந்த வித மாற்றமும் இருக்காது. அலுவலகத்தில் உங்களை யாரெண்டும் தவறாக பயன்படுத்தி கொள்ள வாய்ப்புகள் உண்டு. எனவே கவனம் தேவை. புதிய வீடு மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை தேடி அலையும் நபர்களுக்கு, இன்று அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில வாய்ப்புகள் அமையலாம்.நடிகர்கள் மற்றும் ஊடக துறையில் இருப்பவர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாள்..

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: ஏழைகளுக்கு சர்க்கரை தானம் அளிக்க வேண்டும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மென்பொருள் பொறியாளர்கள், இளம் அரசியல்வாதிகள், ராணுவம், வழக்கறிஞர்கள், விவசாயிகள்,போன்றோருக்கு வேளையில் நல்ல முன்னேற்ற இருக்கும். கேதுவின் ஆசியினால் விளையாட்டுகள் மற்றும் படிப்பில் அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் வேலை மற்றும் எதிர்காலத்திற்கு நன்மை தரக்கூடிய புதிய படிப்புகளை மேற்கொள்வதற்கு நல்ல நாள். அலுவலகத்தில் குரு மந்திரத்தை உச்சரித்து நேர்மையாக செயல்படுவது புதிய வெற்றிகளை ஈட்டி தரும். அரசியல்வாதிகளுக்கு பொதுமக்களிடமிருந்தும் கட்சி தலைவர்களிடமிருந்தும் அதிக பாராட்டுக்கள் கிடைக்கும். பங்குச்சந்தையில் இருக்கும் பெண்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

தானம்: கோவிலுக்கு குங்குமம் தானமளிக்க வேண்டும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விற்பனை துறையில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை சரிவர பயன்படுத்தி இன்று நல்ல நிலையை அடையலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உள்ளுணர்வை கேட்டு அதன்படி நடப்பது நன்மை கொடுக்கும். சமூகத்தில் உங்களுக்குள்ள தொடர்புகள் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் புதிய நன்மைகள் வந்து சேரும். அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள என்று அதிக நேரத்தை செலவிடுவீர்கள். மருத்துவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நட்சத்திர அந்தஸ்தில் உடையவர்களுக்கு அதிக புகழ் கிடைக்கும் நாள் நாள்

அதிர்ஷ்ட நிறம்:கடல் நீளம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்டஎண்: 6

தானம்: பிச்சைக்காரர்களுக்கு ஆரஞ்சு பழங்களை தானம் அளிக்க வேண்டும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நகை விற்பனையாளர்கள், கல்வித்துறையில் இருப்பவர்கள், நடிகர்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள், ஓவிய கலைஞர்கள், எழுத்தாளர்கள் ரியல், எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர்களுக்கு மிக கடினமான சோதனைகளுக்குப் பிறகு சிறப்பு பாராட்டுக்கள் கிடைக்கும். காதலில் இருக்கும் நபர்கள் தங்கள் வார்த்தைகளின் மீதும் நடத்தையிலும் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று நாள் முழுவதும் பல்வேறு வேலைகள் வந்த வண்ணமும் பண பரிமாற்றம் நிகழ்ந்த வண்ணமும் இருக்கும். எதிர்பாராத வகையில் புதிய பண வரவு உண்டாகும். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய நாள்.ஆசிரியர்கள், விளையாட்டு துறையில் இருப்பவர், ஆகியவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

தானம்: நண்பர்களுக்கு துளசி செடியை தானமளிக்க வேண்டும்.

இன்றைய நாளில் பிறந்த பிரபலங்கள்: ஸ்ரீனிவாச ரானுஜர், குரு கோவிந்த் சிங், இஷா தல்வார், வி, தக்ஷிணா மூர்த்தி, சரடா தேவி, சச்சிதானந்த சரஸ்வதி,

First published:

Tags: Numerology, Tamil News