ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (08 டிசம்பர் 2022) ஏழைகளுக்கு குடை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (08 டிசம்பர் 2022) ஏழைகளுக்கு குடை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 8-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் மிகுந்த சவால் கொண்டதாக இருக்கும். இடைவிடாத பணிகளால் நீங்கள் குழப்பம் அடைவீர்கள். அரசியல் தலைவர்கள் மற்றும் குழு தலைவர்கள் சிக்கலான பொறுப்புகளை ஏற்க வேண்டாம். பணப் பலன்கள் மிதமான அளவில் இருக்கும். உங்கள் மனநலனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நள்ளிரவு வரை வேலை செய்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆசிரமங்களில் வாழைப்பழம் வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவுகளில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டாம். உங்கள் விசுவாசம் மற்றும் நேர்மை ஆகியவை தான் வெற்றிக்கான அடிப்படை ஆகும். உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்பதால் சாதுர்யமாக செயல்படவும். உங்கள் பார்ட்னர் அல்லது சக ஊழியர்களால் உங்கள் மனம் புண்படக் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் க்ரீம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் திட்டமிடல்களை மேற்கொள்வதில் பிஸியாக இருப்பீர்கள். மிகுந்த ஆற்றல் மற்றும் திறன் ஆகியவை உங்களுக்கு பணி சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்தும். புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வசியமான பேச்சு ஆகியவை அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரிகளை ஈர்க்கும். அனைத்து சூழல்களையும் அனுசரித்து வேலை செய்யக் கூடிய உங்களுக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெய் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், பழைய ப்ராஜக்டுகளை நிறைவு செய்யவும் சரியான தருணம் ஆகும். உயர் நிலைகளில் இருக்கக் கூடிய மக்களுக்கு மென்மேலும் வளர்ச்சி காத்திருக்கிறது. பணம் சார்ந்த விஷயங்களில் யாருடனும் உங்கள் திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அரசு வேலைகள் சாதகமாக இருப்பின் மாணவர்கள் அதற்கு விண்ணப்பம் செய்யலாம். குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உணர்வுகளை பார்ட்னரிடம் வெளிப்படுத்துவதற்கு சிறப்பான நாளாகும். இயந்திரங்கள் வாங்குவதற்கு, சொத்துக்களை விற்பதற்கு, அலுவல் ரீதியிலான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு இன்று சிறப்பு மிகுந்த நாளாகும். செய்தி வாசிப்பாளர்கள், நடிகர்கள், கைவினை கலைஞர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு கிடைக்க இருக்கிறது. எதிரிகளின் வலைகளில் வீழ்ந்துவிட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு பச்சை நிற பழங்கள் தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சமூகத்துடன் இணைந்து பழகவும், நண்பர்களை ஈர்க்கவும் சிறப்பான நாளாகும். இலக்கை நோக்கி வேலை செய்தீர்கள் என்றால் சிறப்பான வெற்றிகளை நீங்கள் அடைய முடியும். உங்கள் நடவடிக்கைகளுக்கு ஒத்து வருகின்ற நேரம் கை கூடி வருவதால் கனவுகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இன்றைய தினம் குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஆதரவு கிடைப்பதால் மகிழ்ச்சி பெருகும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு வெள்ளை சாதம் தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று மாலையில் துளசிச் செடி அருகே தீபவிளக்கு ஏற்றவும். உங்களுக்கு தேவையான நபர்களை சாதுரியமாக தேர்வு செய்து கொள்ள வேண்டும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். உறவுகளை கொண்டாடவும், திறன்களை வெளிப்படுத்தவும், வாழ்க்கையில் வளர்ச்சி அடையவும் நேரம் நெருங்கி வருகிறது. விளையாட்டு வீரர்கள் பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் பருப்பு தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எப்போதும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடவும். இன்றைய தினம் நிறைய செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்கள் விசுவாசிகளாக இருப்பதால் தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் மீது கவனம் செலுத்தவும். இன்றைய தினம் பசுமையான தோட்டத்தில் நேரத்தை செலவிடவும். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு குடை தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாஸ்து நிபுணர்கள், ஹோட்டல் அதிபர்கள், மருந்து விற்பனையாளர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு பாராட்டு மற்றும் அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது. இன்றைய தினம் ஆற்றல் மற்றும் ஊக்கம் நிறைந்ததாக இருக்கும். இவற்றை ஒருங்கிணைத்து, இலக்கை நோக்கி கொண்டு செல்லவும். நிதி லாபங்கள் மற்றும் சொத்துப் பதிவுகள் போன்றவை இன்று நடைபெற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற பருப்பு தானம் செய்யவும்.

டிசம்பர் 08 அன்று பிறந்த பிரபலங்கள் : ஷர்மிளா தாகூர், தர்மேந்திரா, பிரகாஷ் சிங் பாதல், அரிந்தாம் சௌத்ரி, கீதா கோபிநாத், பாலாஜி பாஜி ராவ்

First published:

Tags: Numerology, Tamil News