#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
தம்பதியர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கிடைக்கும் மற்றும் காதல் உறவை கொண்டாடலாம். கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடன கலைஞர்கள், இசை அமைப்பாளர்கள், அரசு அதிகாரிகள், நகை விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு இன்று மாபெரும் அளவில் புகழ் கிடைக்கும். இன்றைய நாளில் வாழை மரத்தை வணங்கவும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 1
தானம் - கோவிலுக்கு கடுகு வழங்கவும்
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களுக்கான பிரச்சினைகள் முடிவுக்கு வர இருக்கின்றன. ஆகவே, பொறுமையை கடைப்பிடிக்கவும். நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவர் என்றாலும் மற்றவர்களின் பேச்சுக்கு ஆளாவீர்கள். நீங்கள் தலையிட்டு எதையும் மாற்றி அமைக்க முடியாது. எனவே அமைதியாக இருக்கவும். குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய இன்று சிறப்பான நாளாகும்.
அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - வீட்டுப் பணியாளர்களுக்கு பிங்க் நிற ஆடைகளை வழங்கவும்
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைய தினம் ஒரு சிட்டிகை அளவு மஞ்சளை உணவில் சேர்த்து கொள்ளவும். புத்தாக்க சிந்தனைகள் இருந்தால் உங்களுக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த பலனை அறுவடை செய்து, பணம் ஈட்டுவதற்கான நேரம் இது. ரியல் எஸ்டேட் துறையினருக்கு உங்கள் முதலீட்டுத் திட்டங்கள் பிடித்துப் போகும். ஆகவே, அவர்களை அணுகலாம்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - கோவிலில் சந்தனம் வழங்கவும்.
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்களுக்கான நல்ல நேரம் மற்றும் பண மேலாண்மை திறன் போன்றவற்றின் மூலமாக சொத்துக்களில் மாபெரும் முதலீடுகளை செய்வீர்கள். காதலில் இருப்பவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். வணிக ஒப்பந்தங்கள் அல்லது அரசு ஆணைகள் போன்றவை தாமதமின்றி கிடைக்கும். நிதி சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பர்பிள் மற்றும் கிரே
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - குழந்தைகளுக்கு ஆடைகளை தானமாக கொடுக்கவும்.
#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
மாணவர்கள் இன்றைய தினம் விநாயகர் கோவிலுக்கு சென்று மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பங்குச் சந்தை, சொத்து, இறக்குமதி, ஏற்றுமதி போன்ற தொழில்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். நிதி சார்ந்த லாபங்கள் அதிகம் உண்டு. அரசு வேலை கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - விலங்குகளுக்கு பசுந்தீவனம் கொடுக்கவும்.
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைய தினம் லெட்சுமி நாராயணருக்கு பூஜைகளை செய்து விளக்கு ஏற்றவும். இன்று உங்கள் அன்புக்குரிய நபர்களிடம் காதலை பகிர்ந்து கொள்ளலாம். வணிகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய நேரம் இது. இல்லத்தரசிகள், விளையாட்டு வீரர்கள், டிசைனர்கள் போன்றவர்களுக்கு வளர்ச்சி காத்திருக்கிறது.
அதிர்ஷ்ட நிறம் - வயலெட்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோவிலில் வெள்ளி நாணயம் வழங்கவும்.
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைய தினம் குளிக்கும் முன்பாக தண்ணீரில் உப்பு சேர்க்கவும். இன்று பயணங்களுக்கு திட்டமிடலாம். உங்கள் புத்திகூர்மைக்கு அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பதால் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தாயார் மற்றும் சீனியர்களின் பரிந்துரைகளை கவனமாக கேட்டு கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9
தானம் - ஏழைகளுக்கு உணவு தானம் செய்யவும்.
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைய தினம் குழப்பங்களை தவிர்த்து, நேர்மறையான அணுகுமுறையை கடைப்பிடிக்கவும். நீண்ட கால இலக்குகள் குறித்து திட்டமிட்டு, அவற்றை செயல்படுத்தவும். பெரும் நிறுவனங்களுடன் நீங்கள் கொண்டுள்ள தொடர்புகளுக்கு பெரும் லாபம் கிடைக்கும். எனினும், இன்றைய தினம் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவை உள்ளவர்களுக்கு உதவிகளை செய்யுங்கள்
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைய தினம் உங்களுக்கான நல்ல நேரம் கை கூடி வர வேண்டும் என்றால் நெற்றியில் குங்குமம் வைக்கவும். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சிறப்பான தருணம் இது. வணிகம் சார்ந்த நடவடிக்கைகளில் புதிய உச்சம் தொடுவீர்கள். மீடியா துறையில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - வீட்டுப் பணியாளருக்கு குங்குமம் வழங்கவும்.
பிப்ரவரி 27 அன்று பிறந்த பிரபலங்கள் : சந்தீப் சிங், பி.எஸ்.எடியூரப்பா, லாரன்ஸ் தூரல், நீரவ் மோடி, பிரகாஷ் ஜா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News