ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (09 டிசம்பர் 2022) கோவிலில் சந்தனம் வழங்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (09 டிசம்பர் 2022) கோவிலில் சந்தனம் வழங்கவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 9-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  நம்பிக்கை, நேர்மை, தொழில்முறை நேர்த்தி, கனிவான பேச்சு போன்றவை வெற்றிக்கான கதவுகளை திறக்கும். போட்டிகளில் ஒரு போராளியை போல வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் வகையில் புத்தாக்க சிந்தனையுடன் பேசுவீர்கள். தம்பதியர்களுக்கு இடையே மகிழ்ச்சியான சூழல் நிலவும். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், இசை அமைப்பாளர்கள் போன்றோருக்கு புகழ் பெருகும்.

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் பிரவுண்

  அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3

  தானம் - பிச்சைக்காரருக்கு பப்பாளி பழம் வழங்கவும்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பெற்றோர்களின் வாயிலாக பல வழிகளில் உங்களுக்கு பலன் கிடைக்கும். பிறருடைய உணர்ச்சி மிகுந்த கதைகளை கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அவற்றை புறந்தள்ளுங்கள். ஆலோசனை தொடர்புடைய நிறுவனங்கள் புதிய சாதனைகளை எட்டுவீர்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய, ஏற்றுமதி தொழில் செய்ய உகந்த தருணம் ஆகும். காதல் உறவுகளில் ரொமான்ஸ் அதிகரிக்க இருக்கிறது.

  அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 2

  தானம் - பிச்சைக்காரர்களுக்கு தயிர் தானமாக கொடுக்கவும்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வழிகாட்டி மற்றும் பெற்றோரின் துணையுடன் கலைஞர்கள் பெயரும், புகழும் அடையலாம். டிசைனர்களுக்கு பெரிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பணத்தை அறுவடை செய்யும் நேரம் இது. அரசியல் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஈர்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். இன்று ஆடைகள் மற்றும் அலங்கார பொருட்களை வாங்கலாம். ஹோட்டல் அதிபர்கள், செய்தி வாசிப்பாளர்கள் சாதனைகளை செய்வீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

  அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

  தானம் - கோவிலில் சந்தனம் வழங்கவும்.

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பணம் மற்றும் அரசு தொடர்புகளை பயன்படுத்தி வணிக நடவடிக்கைகளை வேகப்படுத்தவும். நிதி தொடர்புடைய பெரும் முடிவுகள் லாபம் தருவதாக அமையும். நாடக கலைஞர்கள், நடிகர்கள், தொகுப்பாளர்கள் போன்றோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உலோகம் மற்றும் ஆடைகளை உற்பத்தி செய்பவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை தக்க வைக்க கீரைகள் சாப்பிடவும்.

  அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் - விலங்குகளுக்கு உப்பு சேர்க்கப்பட்ட உணவு வைக்கவும்.

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும். நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை வெளிப்படுத்தும் அன்பு மற்றும் மரியாதையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் சிவப்பு

  அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 5

  தானம் - வளர்ப்பு பிராணிகளுக்கு குளிர்பானம் கொடுக்கவும்.

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய தினம் வீட்டில் இருந்து பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வீட்டு அலங்காரப் பொருட்கள், உணவு, நகை, ஆடை போன்ற தொழில்களை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை துணை உடனான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அவர்களுடன் ஷாப்பிங் செல்லவும் உகந்த நேரமாகும். காதல் உறவுகளால் வீட்டில் மகிழ்ச்சி திரும்பும்.

  அதிர்ஷ்ட நிறம் - வயலெட்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - பெண்களுக்கு வெள்ளை நிற கைக்குட்டை வழங்கவும்.

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் காதல் துணையிடம் உணர்ச்சிகரமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய நாள் இதுவாகும். உங்கள் தாயார் முன்வைக்கும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். தொழில் பார்ட்னர்கள் மற்றும் சக ஊழியர்கள் மீது நம்பிக்கை வைக்கலாம். வணிகம் சார்ந்த அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளவும். இன்று பெரியதாக தென்படும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 7

  தானம் - ஆசிரமங்களில் மஞ்சள் தானம் செய்யவும்.

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  மாணவர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கை கூடி வரும் நாளாகும். அரசு அதிகாரிகள், விற்பனை பிரதிநிதிகள், கட்டுமான தொழில் ஊழியர்கள், மீடியா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இன்று பதவிஉயர்வு தொடர்பான பலன் கிடைக்கும். சொத்து தொடர்பான முடிவுகள் இன்றைய தினம் சாதகமானதாக அமையும். சட்டப் பிரச்சினைகளுக்கு இப்போது தீர்வு கிடைக்காது. சிறிது காலம் ஆகும்.

  அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - தேவை உள்ளவர்களுக்கு குடை வழங்கவும்.

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களுக்கான புகழ், அதிர்ஷ்டம், பண வரவு போன்றவை இன்று உங்களுக்கு கிடைக்க இருக்கிறது. காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை எழுத்துப்பூர்வமாக இன்று வெளிப்படுத்தலாம். வணிகத்தில் புதிய உயரங்களை தொடுவீர்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் இன்றைய சாதகமான சூழலை பயன்படுத்தி வெற்றி அடைய வேண்டும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்களின் புகழ் அதிகரிக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் - ஏழைகளுக்கு மாதுளம்பழம் தானம் செய்யவும்.

  டிசம்பர் 09 அன்று பிறந்த பிரபலங்கள் : தியா மிர்ஸா, சத்ருஹன் சின்ஹா, தினோ மோரியா, பூனம் மகாஜன், சோனியா காந்தி, பராஹ்

  First published:

  Tags: Numerology, Tamil News