ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (21 டிசம்பர் 2022) ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (21 டிசம்பர் 2022) ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 21-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களது நீண்ட நாள் குடும்பப் பிரச்சனை அல்லது சொத்து தகராறுகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். இன்று ஒரு சொத்தை வாங்குவதை விட ஒரு சொத்தை விற்க ஏதுவான நாள். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு உண்டு. பள்ளி, கல்வித்துறை, கலை கட்டுமானப் பொருட்கள், மின்னணுவியல், விவசாயம், புத்தகங்கள், மருந்துகள் மற்றும் நிதி சார்ந்த வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: பீஜ்

  அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

  அதிர்ஷ்ட எண்: 1

  நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் பொறுமை மற்றும் உதவி மனப்பான்மை மற்றவர்களின் நல்வாழ்த்துக்களை மற்றும் ஆசீர்வாதங்களை உங்களுக்கு பெற்று தரும். உங்களது அப்பாவித்தனமான இயல்பை மாற்றவில்லை என்றால் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடலாம். இன்று உங்கள் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் செயலில் யாராவது ஈடுபடலாம். எனவே கவனமாக இருங்கள். ஏற்றுமதி இறக்குமதி வணிகம், ட்ராவல்ஸ், விமான நிறுவனங்கள், விளையாட்டு, சில்லறை வணிகம், மருத்துவம் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது வளர்ச்சியை இன்று மீட்டெடுப்பார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2

  நன்கொடைகள்: கோவிலில் பால் அல்லது எண்ணெய் தானம் செய்யவும்

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் தலைமை பொறுப்புகளை ஏற்று கொள்ள சிறந்த நாள். சுற்றியுள்ளவர்கள் உங்கள் திறமையைக் கண்டு பொறாமைப்படுவார்கள். எனவே மாலையில் தண்ணீரில் சிறிதளவு பால் சேர்த்து குளிப்பது சிறந்த தீர்வு. பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் சாதகமான பலன்களை தரும். அரசு ஊழியர்கள் இன்று நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

  நன்கொடைகள்: பெண்களுக்கு துளசி செடியை தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களின் மன உறுதி மற்றும் செயல்திறன் இன்று அதிகரிக்கும். நாள் பிசியாக செல்லும் ஓய்வெடுக்க நேரமிருக்காது. விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் செய்ய சிறந்த நாள். ஊடகம், உலோகம், மருத்துவம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்ட நாள்: சனி

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு ஆடை தானம் செய்யவும்

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  நீரில் பாலில் கலந்து குளிப்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்கினால் எல்லாம் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். வங்கியாளர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று சிறப்பு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம். குறிப்பாக சேல்ஸில் இருப்பவர்கள் மற்றும் விளையாட்டுகளில் உள்ளவர்களின் வேகமான இயக்கம் சாதகமாக முடியும். பயணத் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

  அதிர்ஷ்ட நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  நன்கொடைகள்: ஏழ்மையில் உள்ளவர்களுக்கு பச்சை இலை காய்கறிகளை தானம் செய்ய வேண்டும்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று எதிரிகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளும் சூழல் ஏற்படலாம். குடும்ப விழாக்களில் பங்கேற்க, நிச்சயதார்த்தம் செய்து கொள்ள, காதல் உணர்வுகளை பரிமாற, திறமைகளை பிரதிநிதித்துவப்படுத்த, வெகுஜன ஊடகங்களை எதிர்கொள்ள, வெற்றியைக் கொண்டாட சிறந்த நாள். குடும்பத்தினருடன் நேரம் செலவிட சிறந்த நாள். நடிகர்கள் மற்றும் ஊடக துறையில் இருப்பவர்கள் இன்று வெற்றி பெறுவார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: டீல்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு வெள்ளை இனிப்புகளை தானம் செய்யுங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் பொறுமை மற்றும் விவேகம் வெற்றியை தக்க வைக்க உதவும். இன்று வியாபாரத்தில் துணிந்து ரிஸ்க் எடுக்கலாம். விளையாட்டு மற்றும் கல்வியில் வெற்றி சாத்தியமாகும்.எதிர் பாலினத்தவர்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை விரைவுபடுத்துவார்கள். அரசியல்வாதிகளுக்கு இன்று சிறந்த நாள். பேச்சில் மென்மையை கடைபிடிக்க வேண்டும். பெற்றோரின் ஆசீர்வாதங்களை பெற வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 7

  நன்கொடைகள்: ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யுங்கள்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று கடின உழைப்பு தேவைப்படும் இடங்களில் பிராக்டிக்கல் அப்ரோச்சை கருத்தில் கொள்ள வேண்டும். பணவரவு சீராக இருக்கும் என்றாலும் அதை கவனமாக கையாள வேண்டும். அறிவாற்றலை வளர்த்து கொள்வதில் நேரம் செலவிடுவீர்கள். மருத்துவர்கள் இன்று பாராட்டுகளை பெறுவார்கள். பொது நபர்கள் மாலைக்குள் பண பலன்களை அடைவார்கள். நேரமில்லாமல் போகும் என்பதால் குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க கமிட்மென்ட் கொடுக்காதீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களுக்கான இந்த நாள் கைதட்டல் மற்றும் வளர்ச்சி நிறைந்தது. உங்களது வாழ்வில் இன்று திடீர் வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது. அரசு உத்தரவுகளை அணுக இன்று சிறந்த நாள். விளையாட்டு வீரர்களும் மாணவர்களும் இன்றைய நாளை அற்புதமாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். சமையல் கலைஞர்கள்,நடிகைகள், பாடகர்கள்,ஆடிட்டர்கள் ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்று பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம்.

  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

  நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு சிவப்பு மசூர் தானம் செய்யுங்கள்

  டிசம்பர் 21-ஆம் தேதி பிரபலங்கள்: ஜெகன் மோகன் ரெட்டி, கோவிந்தா, கரிஷ்மா தன்னா, தமன்னா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பிரம்மானந்த சரஸ்வதி

  First published:

  Tags: Numerology, Tamil News