ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 நவம்பர் 2022) ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 நவம்பர் 2022) ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 17-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இதுநாள் வரை நீங்கள் சந்தித்து வந்த பல பிரச்சனைகள் இன்றோடு முடியும். புதிய பதவி, புதிய வியாபார முதலீடு, புதிய வேலை, புதிய வீடு என எந்த புதிய விஷயங்களை திட்டமிட்டாலும் இன்று தாமதமாகும். இன்று நிதி பலன்கள் மிதமாக இருக்கும் . விவசாயம் மற்றும் கல்வித் தொழிலில் உள்ளவர்களுக்கு இன்று எதிர்பாராத லாபம் கிடைக்கும். வெற்றிகாக நீங்கள் துவக்கத்தில் பிறரை சார்ந்திருக்க வேண்டும் என்பதால், பிறர் கேட்கும் உதவிகளை மறுக்காமல் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமத்தில் உணவு தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஒரு ஓபன் புக் போல நடந்து கொள்ளாதீர்கள் இல்லை என்றால் உங்கள் அப்பாவித்தனம், உதவி செய்யும் மனப்பான்மையை மக்கள் பயன்படுத்தி கொள்வார்கள். உங்களால் முடிந்த தேவையான உதவிகளை செய்யலாம். ஆனால் உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பிறர் கேட்கும் போது இல்லை என்று சொல்ல கற்று கொள்ளுங்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்போர், மருத்துவர்கள், பொறியாளர்கள், தரகர்கள், டிராவல் ஏஜென்சி வைத்திருப்பவர்கள் இன்று வெற்றியை அனுபவிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - ஆசிரமங்களுக்கு சென்று இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சக ஊழியர்களால் உங்களுக்கு வேலையில் இடையூறுகள் ஏற்பட கூடும் என்பதால் பணியிடத்தில் கவனமாக இருங்கள். எனினும் உங்கள் பேச்சு மற்றும் செயல்திறன் மூலம் உங்கள் உயரதிகாரியை ஈர்ப்பீர்கள். எல்லா சூழலையும் சகித்து கொண்டு நெகிழ்வாக வேலை செய்யும் மனநிலையில் இருப்பீர்கள், இதனால் வெற்றி வெகு தொலைவில் இல்லை. பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் முதலீடு செய்ய இன்று ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெயை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அழுத்தம் நிறைந்த நாளாக இருந்தாலும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். உங்களது புதிய வியாபார திட்டம் இன்று நல்ல பலன்களை தரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசு பணியில் இருப்போர் இன்று கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். நிதி விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு இன்று நிதி ஆதாயம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - வசதி இல்லாதவர்களுக்கு காலணிகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் எடுக்கும் ரிஸ்க் எதிர்காலத்தில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உதவும். புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அரசியல்வாதிகள் இன்று கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் பார்ட்னரிடம் சொல்ல நினைப்பதை தயங்காமல் சொல்லி விடுங்கள். இயந்திரங்கள் வாங்க, சொத்துக்களை விற்க, ஆவணங்களில் கையொப்பமிட, பயணங்களை திட்டமிட சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆசிரமங்களில் உப்பு தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் அனைத்து வகையான நன்மைகளையும் அனுபவித்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் பாசம், ஆதரவு உங்களுக்கு செழிப்பை தரும். டிசைனர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். கூடுமானவரை இன்று வீட்டில் இருந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். சொத்து மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வசம் இருக்கும் பழைய சொத்துக்களால் இன்று பொருளாதார ரீதியாக வளர வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. சச்சரவுகளை தவிர்க்க, அதிர்ஷ்டத்தை அதிகரிக்க எதிர் பாலினத்தவர்கள் உதவுவார்கள். அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் உங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று ஆடைகளை வழங்குங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்றைக்கு வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். அதிகம் சிந்திப்பதை தவிர்த்து விட்டு மனதை நிதானமாக வைத்து கொள்ளுங்கள். இன்று உங்கள் உடமைகளை கவனித்துக் கொள்வதில் அக்கதை காட்டுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்த நாள் உங்களுக்கு வேடிக்கை, மற்றும் உற்சாகம் நிறைந்த நாளாக அமையும். உங்கள் இலக்கை நோக்கி செல்ல இன்று கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். நிதி திட்டமிடல் மற்றும் சொத்து பதிவுகளுக்கு ஏற்ற நாள். விருந்து, சமூக பணி செய்தல், பங்கு வர்த்தகம் போன்றவற்றில் செலவிடப்படும் நேரம் சிறப்பானதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் மஞ்சளை தானம் செய்யுங்கள்

நவம்பர் 17-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஷோப்னா சமர்த், ஜெமினி கணேசன், யூசுப் பதான், ரோஜா, சந்தா கோச்சார்

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News