ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 நவம்பர் 2022) ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 நவம்பர் 2022) ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 14-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பிரபலமானவர்கள் தங்கள் ஃபாலோயர்சிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். சோலார் வியாபாரம் செய்பவர்கள், நகை வியாபாரிகள், பொறியாளர்கள், எலெக்ட்ரானிக்ஸ், உலோகம், தானியங்கள், அழகுசாதனப் பொருட்கள், துணி வியாபாரம் செய்பவர்கள் இன்று அதிக லாபம் பெறுவார்கள். அன்புக்குரியவர்களின் ஆதரவு இன்று உங்களுக்கு துணையாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 5

தானம் - கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காக இன்று முதலீடு செய்ய வேண்டியிருக்கலாம். காதல் உறவுகளில் இன்று அதிர்ஷ்டம் கை கொடுக்காது. யாரிடமாவது காதலை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தால் ஒத்தி வையுங்கள். உங்களது பழைய நண்பர்களுடன் இன்று நேரத்தை செலவிடுவீர்கள். வழக்கறிஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு இன்று சிறப்பான நாள். நேர்முகத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கிரியேட்டிவ் துறையில் உள்ள நபர்களுக்கு இன்று சிறந்த லாபம் கிடைக்கும். கல்வியாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இன்று மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும். உங்கள் மனதில் உள்ள காதல் அல்லது அன்பை வெளிப்படுத்த தயங்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் சரியான முறையில் உங்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தினால் உறவு மலர்ந்து விடும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - ஆசிரமத்திற்கு சென்று மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் சற்று குழப்பம் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாக துவங்கினாலும் மாலைக்குள் முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்தபடி சாதகமாக இருக்கும். உங்கள் உடமைகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்கள் புதிய திட்டங்களை முன்னெடுப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் இன்று அமையும். உங்களை நம்பும் நட்பை அல்லது உறவுகளைத் தவறாக பயன்படுத்த நினைக்காதீர்கள். இன்று அசைவம் & மதுவை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் திடீர் அதிர்ஷ்டம் மற்றும் உங்களது வாழ்வில் மேம்பட்ட வளர்ச்சி என இரண்டையும் ஒருசேர அனுபவிக்கலாம். உறவுகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க, ஷாப்பிங் செய்யவும், ரிஸ்க் எடுக்க, ஷேர்ஸ்பகளை வாங்க, போட்டிகளில் பங்கேற்க இன்று சிறந்த நாள். சொத்துக்களில் முதலீடு செய்யவும் இன்று ஏற்ற நாள். உங்களது வாழ்வில் இன்று மறக்க முடியாத வகையில் சில ஸ்பெஷல் நபர்களை சந்திப்பீர்கள். விரும்பிய பொருட்களை தயக்கமின்றி இன்று வாங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்குங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தோள் மீது அதிகம் பொறுப்புகள் ஏற்றப்படலாம். ஆனாலும் அவை அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். இலக்குகளை நோக்கி முன்னேறி செல்வீர்கள். ஊழியர்களுக்கு இன்று பணி உயர்வு கிடைக்க கூடும். திருமண முயற்சிகள் கை கூடும். சொத்து மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் தங்கள் வெற்றியை தக்க வைக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 2

தானம் - குழந்தைகளுக்கு பென்சில் அல்லது பேனாக்களை வழங்குங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று எதிலும் நேரம் தவறாமையை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். இன்று சிறிய நிறுவனங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதால் சிறுதொழில் செய்கிறீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். உங்களைச் சுற்றியுள்ள அன்பும் பாசமும் உங்கள் கனவுகள் அனைத்தையும் இன்று நிறைவேற்றும். இன்றைய நாளை தொடங்கும் முன் பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். இன்று நீங்கள் எடுக்கும் எந்த முடிவையும் என்ன நடந்தாலும் தொடர்ந்து பின்பற்றுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஆசிரமத்தில் கோதுமையை தானம் செயுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின முயற்சிகள் மற்றும் உழைப்பு இன்று எந்த சிரமத்திலிருந்தும் நீங்கள் வெளிவர உதவியாக இருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய மெஷின்கள் வாங்க, சொத்துகளில் முதலீடு செய்ய இன்று சிறந்த நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு மாதுளை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஷேர்களை தவிர வணிக முதலீடுகளைச் செய்ய இன்று சிறந்த நாள். ஈவன்ட்களில் கலந்து கொள்ள, பார்ட்டி நடத்த, நகைகளை வாங்க, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இன்று ஒரு சராசரி நாள் தான். இளைஞர்கள் தங்கள் பார்ட்னர்களை கவர இன்று அற்புதமான நாள். எதிர் பாலினத்தவரின் நம்பிக்கையை இன்று நீங்கள் எளிதாக பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - வீட்டு பராமரிப்பு பொருட்களை ஆசிரமங்களுக்கு தானம் செய்யுங்கள்

நவம்பர் 14ம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஆதித்ய விக்ரம் பிர்லா, ஜவஹர் லால் நேரு, சபா கரீம், மனோஜ் திவாரி, ஹிருஷிகேஷ் கனிட்கர், விகாஸ் கன்னா

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News