#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
நீங்கள் பணியாற்றும் இடத்தின் வடக்குப் பகுதியில் மஞ்சள் நிற பூக்களை வைக்கவும். உங்கள் ஆளுமையை பயன்படுத்தும் நாள் இது. கமர்ஷியல் சொத்தில் முதலீடு செய்வதற்கு நல்ல நாளாகும். இயந்திரங்கள், பயண ஏஜன்சி, புத்தகம், பொழுதுபோக்கு, துணி மற்றும் விவசாயம் சார்ந்த வணிகங்களுக்கு நல்ல லாபம் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் – நீலம் மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் – ஞாயிறு
அதிர்ஷ்ட எண் – 7
தானம் – யாசகர்களுக்கு குங்குமப்பூ தானம் செய்யவும்
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் உணர்வுகளை நிதானமாக யோசித்து, அதிலிருந்து வெளிவர வேண்டும். உங்கள் குறிக்கோள் மற்றும் லட்சியங்களை யாரேனும் கேலி செய்யலாம், அதை கடந்து செல்லுங்கள். உங்களை அவமதிக்கும் ஒருவரை சந்திக்க நேரிடும். ஆகவே கவனமுடன் இருக்கவும். பெண் ஊழியர்கள் மூத்தவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோவிலில் வெள்ளை இனிப்புகளை தானம் செய்யவும்.
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
தனிப்பட்ட உறவுகள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இன்று உங்களுக்கு தெளிவு கிடைக்கும். உங்கள் அறிவுத்திறன் மற்றும் பேச்சு ஆகியவற்றைப் பார்த்து மக்கள் ஈர்க்கப்படுவார்கள் காதலர்கள் வெளிப்படையாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அரசாங்க அதிகாரிகள் தங்கள் சுற்றுப்புறத்தில் நடப்பவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு சந்தனம் வைத்து கொண்டு, குரு மந்திரம் சொல்லிவிட்டு கிளம்புங்கள்.
அதிர்ஷ்ட நிறம் – நீலம் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் – பெண் ஊழியர்களுக்கு துசளி செடியை வழங்கவும்.
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்கள் ஆற்றல் அதிகமாக இருக்கும், எனவே உங்களால் சிறப்பாக செயல்பட முடியும். உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சொத்து வாங்கும் முடிவை கொஞ்சம் கொஞ்சம் தள்ளிவைக்க வேண்டும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு இன்று பயணம் செய்ய ஏற்ற நாள். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் – நீலம்
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - வீட்டுப் பணியாளருக்கு துடைப்பம் வழங்கவும்
#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் லட்சியம் மற்றும் நீங்கள் எந்த அளவுக்கு கடினமாக உழைப்பவர் என்பதை உங்கள் உணர்வுகளும் செயல்களும் வெளிப்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் கனவுகளை எளிதில் அடைய முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை காதல் மற்றும் கமிட்மென்ட் நிறைந்திருக்கும். உங்கள் உதவியை தேடி உங்கள் பழைய நண்பர் அல்லது உறவினர் யாரேனும் வரக் கூடும். மார்கெட்டிங் மற்றும் விளையாட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான நாள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் – கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் – ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களை சுற்றியிருப்பவர்களால் நீங்கள் தவறாக பயன்படுத்திக் கொள்ளப்படலாம்; எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் தானாக முன்வந்து யார் எதை கொடுத்தாலும், உதவி செய்ய முன்வந்தாலும் அதை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகளுடன் இன்று நேரம் செலவிடுவதற்கு சிறந்த நாள் ஆகும். வெளிநாட்டுப் பயணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம். புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் – பெண்களுக்கு அழகு சாதன பொருட்களை வாங்கித் தரலாம்.
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இளம் அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள், வக்கீல்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள் ஆகியவர்களுக்கு அவர்களுடைய தொழிளில் மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது. கல்வி மற்றும் விளையாட்டு துறையில் இருப்பவர்கள் வெற்றி பெறுவதற்கு பெரியவர்களின் ஆசீர்வாதம் முக்கியம். எதிர்பாலினத்தவர் மீது கொண்ட ஈர்ப்பு, காதலாக மாறும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. எல்லாவற்றையும் மென்மையாக அணுகி கோபப்படாமல் பேசுவது பெரிய வெற்றியை பெற்றுத்தரும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் பசுமஞ்சளை தானமாக கொடுக்கவும்.
#எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
அவசரமாக முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும் அவ்வாறு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய கடந்த கால கர்மா உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும். உங்களுடைய சோசியல் நெட்வொர்க் வெற்றியை பெற்றுத்தரும். அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் நீங்கள் நிறைய நேரம் செலவு செய்வீர்கள். மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிவப்பு நிற பழங்களை வழங்கவும்.
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களுடைய வித்தியாசமான ஆளுமை பெரிய கூட்டத்தினருக்கு மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தும். பங்குச்சந்தை தரகர்கள், நகை வியாபாரிகள், கல்வியாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், ரியல் எஸ்டேட் டீலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். திடீர் பண வரவு கிடைக்கும். காதலில் இருப்பவர்கள் எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசிக் கொள்ள வேண்டும். இடையில் யாரையும் அனுமதிக்க கூடாது.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் – ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யவும்
பிப்ரவரி 04 அன்று பிறந்த பிரபலங்கள் : உருசுலா மடோட்ன்கர், பிரிஜூ மகராஜ், வருண் ஷர்மா, சந்தீப் ஆச்சார்யா, பீம்சென் ஜோஷி, வித்யா சாகர் ராவ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News