ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (15 டிசம்பர் 2022) ஆசிரமங்களுக்கு ஆடைகளைத் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (15 டிசம்பர் 2022) ஆசிரமங்களுக்கு ஆடைகளைத் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 15-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பெண்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. தொழில் வளர்ச்சிப் பெறக்கூடும். சட்டப்பூர்வ அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய ஒரு சமூக ஆதரவை நீங்கள் பெறக்கூடும். பண உதவி எதுவும் தேவைப்பட்டால் யோசித்து வாங்குங்கள். பேக்கர்ஸ்கள், உற்பத்தியாளர்கள், வடிவமைப்பாளர்கள், விளையாட்டு நடிகர்கள், பில்டிங் கான்ட்ராக்டர்ஸ் மற்றும் அரசியல்வாதிகள் தங்களின் பணத்தின் சக்தியைப் பயன்படுத்தி புதிய திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் சூழல் அமையும். நல்ல சூழல் அமைவதற்கு சூரிய பகவான் மற்றும் அவருடைய மந்திரத்தை உச்சரித்து அவருடைய ஆசீர்வாதத்தை எப்போதும் பெற்றுக்கொள்ளுங்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

  அதிர்ஷ்டமான நாள்: ஞாயிறு

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு ஆடைகளைத் தானம் செய்யுங்கள்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைக்கு செல்வம் பெருகும் நாளாக அமையும். சொத்து மற்றும் ஆடம்பரம் நிறைந்தப் பொருள்களை வாங்கும் சூழல் ஏற்படும். இல்லத்தரசிகள் பொறுப்புடன் இருக்க வேண்டும். கூட்டாண்மை நிறுவனங்களில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், வெற்றி கிடைக்கும். ஆஃப்லைனை விட வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் ஏற்படும். தொழில் சம்பந்தமானக் காரியங்கள் சில தாமதங்களுடன் நிறைவேறக்கூடும். தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்கவும். விநியோகஸ்தகர்கள், அரசியல் வாதிகள், வழக்கறிஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நகை வியாபாரிகள் எந்த கையெழுத்திட்டாலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

  நன்கொடைகள்: கோவிலில் அல்லது தேவைப்படுபவர்களுக்குத் தயிர் தானம் செய்யுங்கள்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைக்கு வெற்றியைப் பெறும் நாளாக அமையும். உங்களின் படைப்பாற்றல், நெகிழ்வுத்தன்மை, கல்வியறிவு, உடல் தோற்றம் மற்றும் உங்களது வார்த்தைகள் மற்றவர்கள் மீது நிரந்த ஈர்ப்பை ஏற்படுத்தும். உங்களது ஆளுமை மிகவும் கவர்ச்சிக்கரமானதாகவும், வசீகரமானதாகவும் இருக்கும். எப்போதும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். யோகா பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையாளர்கள், இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், அரசியல் வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் வியாபாரிகள் மற்றும் எழுத்தாளர்கள் இன்று தொழிலில் சிறப்பான லாபம் பெறுவார்கள்.

  அதிர்ஷ்ட நிறம் : பீச் மற்றும் நீலம்

  அதிர்ஷ்டமான நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3

  நன்கொடைகள்: கோவிலில் மஞ்சள் அரிசியைத் தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களின் சிறந்த நிர்வாகத் திறன்கள் உங்களை உயர் நிலைக்கு அழைத்துச் செல்லும் நேரம் இது. துளசி செடிக்கு எப்பொழுதும் தண்ணீர் ஊற்ற வேண்டும். பணியை சிறப்பாக நீங்கள் செய்தால், சிறந்த அதிகாரியாக உருவாகக்கூடும். அரசு மற்றும் உயர் நிறுவனங்களில் பணிபுரியும் போது உங்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய ஆதாரங்கள் மற்றும் புதிய யோசனைகள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பண மேலாண்மை உங்களது வாழ்க்கையை சிறப்பாக்கும். குழந்தைகளின் வளர்ச்சியால் தந்தை என்ற பெருமையின் அழகான அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சாம்பல்

  அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: கோவிலில் இரண்டு தேங்காய் தானம் செய்யுங்கள்

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைக்கு நல்ல நாளாக உங்களுக்கு அமையக்கூடும். உங்களது சொந்த விருப்பத்துடன் சொத்து முதலீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சோசியல் மீடியாவின் வாயிலாக இன்று புகழ் மற்றும் தொழில் வளர்ச்சியைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் சிறந்த வரவுக்காக விளையாட்டு வீரர்களும், பயணிகளும் காத்திருக்க வேண்டும். எந்த இக்கட்டான சூழலிலும் நன்மையுடன் செயல்பட்டால் திறமை உயரக்கூடும்.

  அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை

  அதிர்ஷ்டமான நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  நன்கொடைகள்: தயவு செய்து துளசி செடியை கோயிலிலோ அல்லது நண்பருக்கோ தானம் செய்யுங்கள்.

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நாளாக அமையும். வீட்டிலிருந்து வேலை செய்வது அல்லது ஆன்லைனில் வேலை செய்வது இன்று பரிந்துரைக்கப்படுகிறது. வாழ்க்கையில் உயர் வளர்ச்சி மற்றும் சாதனைகளைக் கொண்டு வரும் நாளாக அமையும். ஒரு குழுத் தலைவராக, சமூகத் தலைவராக, அனைவரிடமிருந்தும் அக்கறை மற்றும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். விளையாட்டு வீரர் பாதுகாப்பு அதிகாரிகள், மென்பொருள் பொறியாளர்கள், இல்லத்தரசிகள், ஆசிரியர்கள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜோக்கிகள் மற்றும் மருத்துவர்கள் தங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் என்பதால் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த செல்லுங்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் செயல்திறனுடன் பெருமைப்படுவார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்

  அதிர்ஷ்டமான நாள் வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு எஃகு பாத்திரத்தை நன்கொடையாக கொடுங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  தனித்துவமான செயல்திறனுடன் முதலாளிகளிடம் நல்ல வரவேற்பைப் பெறுவீர்கள். தம்பதிகளிடையே நம்பிக்கையுடன் நடந்துக்கொண்டால் உறவு மேன்மை பெறும். தாமதம் மற்றும் தணிக்கை இல்லாமல் எவ்வித ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டாம். அமானுஷ்ய அறிவியல், ஆன்மீகப் பள்ளிகள், விவசாயம், தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாள். பேச்சில் மென்மையைக் கடைபிடிக்கும் வரை வியாபார உறவுகள் ஆரோக்கியமானதாக இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

  அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 7

  நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்களை நன்கொடையாக வழங்குங்கள்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைக்கு வளர்ச்சிகள் ஏற்பட்டாலும் எதிலும் கவனமுடன் இருக்கவும். புதிய வாய்ப்பு மற்றும் புதிய உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். லட்சியம் மற்றும் உங்களது கனவுகளை நிறைவேற்றவும். எப்போதும் மூத்தவர்களின் வழிகாட்டுதலைப் பெற முயற்சி செய்யவும். உங்களது வாழ்க்கையில் எவ்வித ஒப்பந்தங்கள் மற்றும் நேர்காணல் இருந்தால் தாமதிமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். குடும்ப நிகழ்வுகள் அல்லது நண்பர்கள் விருந்தில் கலந்துக் கொள்ள நேரம் செலவிடும் வாய்ப்பு ஒள்ளது. அசைவ மற்றும் மதுபானங்களைத் தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: கால்நடைகளுக்குக் குடிநீர் தானம் செய்யுங்கள்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  செவ்வாய் கிரகத்தின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால், சிவப்பு நூலை அணிந்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகள் முடிவுக்கு வரும் சூழல் ஏற்படும் என்பதால் எப்போதும் நிம்மதியாகவும் வளமாகவும் இருப்பீர்கள். ஆசிரியர்கள், சட்டம், ஆலோசனை மற்றும் நிதித்துறையில் இருப்பவர்கள் புதிய உயரத்தை அடைவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக அமையும். வணிகம் அல்லது வேலையில் அதிகாரம் பெற பழைய நண்பர்களை அணுக ஒரு அழகான நாளாக அமையும். உங்களது திருமணத் திட்டத்தைக் குடும்பத்தினருடன் பகிர்ந்துக் கொள்ளவும். இது எதிர்காலத்தை பிரச்சனையின்றி வாழ வழிவகுக்கும். செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

  அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

  நன்கொடைகள்: ஏழைகளுக்குத் தானம் செய்யுங்கள்

  டிசம்பர் 15ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: பைச்சுங் பூட்டியா கீதா போகத், ஜீவ் மில்கா சிங், மௌலி கங்குலி, பாபுல் சுப்ரியோ, நெக் சந்த்

  First published:

  Tags: Numerology, Tamil News