முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 03, 2023) அனாதை இல்லத்திற்கு ஆடைகளைத் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (பிப்ரவரி 03, 2023) அனாதை இல்லத்திற்கு ஆடைகளைத் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | பிப்ரவரி 03-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைக்கு பரபரப்பான மற்றும் வெகுமதிகள் நிறைந்த நாளாக அமையும். வேலையில் இருப்பவர்கள் மற்றும் உறவுகளில் அதிக மரியாதை ஏற்படும். உங்களது ஆளுமை உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும். இசைக் கச்சேரிகளில் கலந்துக் கொள்வது, முக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அல்லது நேர்காணலுக்கு விண்ணப்பிப்பது அனைத்தும் சிறப்பாக அமையும். சொத்து வாங்குவது மற்றும் சொத்துக்களை விற்பதைத் தவிர்க்கலாம். பள்ளி, உணவகங்கள், ஆலோசனைப் புத்தகங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் விளையாட்டுக் கல்விக்கூடங்கள் போன்றவற்றில் அதிக லாபம் ஈட்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3

  பரிகாரம்: பிச்சைக்காரர்களுக்கு பழங்களைத் தானம் செய்யவும்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வாழ்க்கையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உங்களின் மென்மையான குணம் தான் உங்களை பல நேரங்களில் காயப்படுத்தும். சட்டப்பூர்வ கடமைகள் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும். விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் மற்றும் காதல் உறவுகளில் இருப்பர்கள் மூத்தவர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகக்கூடும். எதையும் பெரிதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் மற்றும் ஆவணங்களை தவிர்க்க அரசியல்வாதிகள். வெளிநாட்டு வணிகம், IT தொழில்முறை உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், தரகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் செயல்திறனில் அதிக மதிப்பீடுகளைக் காண்பதற்குக் காத்திருக்க வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2

  பரிகாரம்: அனாதை இல்லத்திற்கு ஆடைகளைத் தானம் செய்யவும்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைக்கு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பிரகாசமான எதிர்காலத்தை அடைவார்கள்.. உங்கள் அற்புதமான படைப்பாற்றல் மற்றும் கற்பனை பாணி எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு ஒரு அழகான நாளை உருவாக்குகிறது. பங்கு தொடர்பான முதலீடுகள் லாபத்தில் சற்று தாமதமாக இருக்கும். 1 காதல் உறவில் இருப்பவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. பரிசுகள் மூலம் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகள் பணியில் கவனமாக இருக்கவும். உங்கள் நாளை தொடங்கும் முன் உங்கள் குருவின் பெயரை உச்சரிக்க மறந்துவிடாதீர்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

  பரிகாரம்: பெண் உதவியாளருக்கு குங்குமம் தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு தியானம் மேற்கொள்ளவும். உடல் நலனில் அக்கறையுடன் இருக்கவும். பண வரவு இருக்கும் நாளாக இருந்தாலும் எந்த வேலையையும் பொறுப்புடன் மேற்கொள்ளவும். அரசியல் மற்றும் நடிப்புத்துறையில் இருப்பவர்களுக்கு பயணம் செய்வதற்கு ஏற்ற நாள் இன்று. கட்டுமானத்தொழில் மற்றும் மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். மாணவர்கள் தியானம் மேற்கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் அதிக அலைச்சல் ஏற்படும். வெற்றி அதிகமாக நாள் உங்களுக்கு. இன்று அசைவம் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

  அதிர்ஷ்ட எண்: 9

  பரிகாரம்: ஒரு பிச்சைக்காரருக்கு பச்சை அல்லது சிவப்பு ஆடைகளை தானம் செய்வது அவசியம்

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  தினமும் காலையில் விநாயகப் பெருமான் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தவும். தனிமையை விரும்புவீர்கள். வாழ்க்கைத்துணை அல்லது நெருங்கிய நண்பருடன் உள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் நாளாக அமையும். பணியிடத்தில் லாபம் ஈட்டுவதற்கு நீங்கள் ஏற்கனவே புத்திசாலியாக இருக்கிறீர்கள். எந்த மக்களையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் .நாளின் இரண்டாம் பாதியில் அதிர்ஷ்டம் அதன் பங்கை வகிக்கும். எனவே அதற்குள் வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள். காதலில் இருப்பவர்கள் திசை திருப்பப்படுவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கும். எனவே முதலில் எப்போதும் வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடியுங்கள்

  அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

  அதிர்ஷ்ட நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  பரிகாரம்: கோவிலில் தேங்காய் தானம் செய்ய வேண்டும்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீண்ட நேரம் உழைக்க வேண்டும். எனவே நிதானத்தை மறந்து செயலில் ஈடுபட வேண்டும். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட சிறந்த நாளாக அமையும். மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக புதிய வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பது சாதகமாக மாறும். தனிப்பட்ட உறவுகளில் நீங்கள் பாதுகாப்பற்றதாகவும் அமைதியற்றதாகவும் உணருவீர்கள். புதிய தொழிற்சாலை அமைக்க இடத்தைத் தேடுபவர்களுக்கு நல்லதே நடக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண்: 6

  பரிகாரம்: ஆசிரமங்களுக்கு வெள்ளை இனிப்புகள் வழங்கவும்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பொது நபர்கள், அரசியல்வாதிகள், மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், ஜோதிடர்கள், ஒப்பனை கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஹீரோவைப் போல போரில் வெற்றி பெறுவதற்கான புதிய வாய்ப்பை வழங்கும் நாளாக அமையும். தயவு செய்து காதல் உறவுகளுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும் . வாதங்கள் இல்லாமல் உறவுகளை வலுப்படுத்த முயலவும். கல்வியில் மேன்மையடைய எப்போதும் குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு வெகுமதியும், அங்கீகாரமும் கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொள்ளவும்.

  அதிர்ஷ்ட நிறம்: பச்சை

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 7

  பரிகாரம்: கோவிலில் பச்சை மஞ்சளைத் தானம் செய்யுங்கள்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  எதிர்கால வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்கும் சரியான நாள் இன்று. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகள் சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடவும். வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு தானம் செய்வது நல்லது. உங்களுக்குப் பணம், புகழ், ஞானம், மரியாதை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாசம் பிரச்சனையில்லாமல் செல்ல வேண்டும் என்றால் கோவிலுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவும். ஆடம்பரமானப் பயணம் என்றாலும், இலக்குகளை அடைவதற்கு உங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுங்கள். இன்றைக்கு உங்களது வாழ்க்கை பரபரப்பாகவும், சிக்கலானதாகவும் இருக்கும். மருத்துவர்கள் மற்றும் நிதியாளர்கள் வெற்றிகரமான செயல்பாடுகளினால் பாராட்டுகளைப் பெறுவார்கள். உங்களது காதல் உணர்வுகளை யதார்த்தமாக மாற்றக்கூடிய அழகான நாள் இன்று.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண்: 6

  பரிகாரம்: ஒரு பிச்சைக்காரருக்கு பழங்களைத் தானம் செய்யவும்.

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  நடிப்பு, ஊடகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் இருப்பவர்களுக்கு புகழ் தரும் நாளாக அமையும். எந்த வேலையை நீங்கள் மேற்கொண்டாலும் காலையில் நெற்றியில் சந்தனம் இடுவதால் வெற்றி உண்டாகும். விளையாட்டு வீரர், தொழிலதிபர், ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைச் சந்திக்கும் நாளாக அமையும். நீங்கள் பங்குச் சந்தையில் ஈடுபட்டிருந்தால், மொத்தமாக பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். சிவப்பு மற்றும் ஊதா நிற ஆடைகளை அணிந்துச் செல்லுங்கள். நிச்சயம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும். உங்களது கண்களைக் கவனமாகக் கவனித்துக் கொள்ளுங்கள். இதனால் தேவையற்ற பிரச்சனைகளைக் குறைக்கலாம். தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்கவும். முடிந்தவரை ஆன்லைனில் வேலை செய்ய முயற்சிக்கவும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஊதா

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 3

  பரிகாரம்: விலங்குகளுக்கு வாழைப்பழத்தைத் தானம் செய்யுங்கள்.

  பிப்ரவரி 3 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: தடகள வீராங்கனை துத்தி சந்த், பொருளியல் வல்லுநர் ரகுராம் ராஜன், சிலம்பரசன், தீப்தி நேவல், குர்பீத் சிங் சந்து, தர்மேந்திர யாதவ்

  First published:

  Tags: Numerology, Tamil News