ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (30 நவம்பர் 2022) ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஆடைகள் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (30 நவம்பர் 2022) ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஆடைகள் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 30-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பரபரப்பான நாளாக இருந்தாலும், உங்களுக்குரிய விருதுகள் மற்றும் மரியாதை கிடைக்கும். இன்று நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கான பலம், உங்கள் ஆளுமையை பிரதிபலிக்க வேண்டும். வீடு மற்றும் அலுவலகம் என இரண்டிலுமே உங்களுக்கு மதிப்பு கூடும். விற்பனை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் தங்கள் அறிவால் மற்றவர்களை ஈர்ப்பார்கள். இசை கச்சேரிகள், நிகழ்சிகளை ஏற்பாடு செய்தல், நேர்காணல்கள் ஆகியவற்றுக்கு சிறந்த நாள். சொத்து வாங்குவது மற்றும் விற்பது இரண்டையும் இன்று தவிர்க்க வேண்டும். பள்ளி வணிகம், உணவகங்கள், ஆலோசனை புத்தகங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், உலோகங்கள் சார்ந்த தொழில் செய்வோர் அதிக லாபம் ஈட்ட கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடைகள்: பெண்களுக்கு ஆரஞ்சு பழத்தை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உண்மையான, அன்பான ஒரு வாழ்க்கைத்துணையை கண்டுபிடிப்பதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும். கூட்டு வணிகத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உங்களுடைய மென்மையான அணுகுமுறை உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதிகமாக வளைந்து கொடுக்க வேண்டாம். நீங்கள் ஒரு பொறுப்புள்ள நபராக இருந்தாலும் உங்கள் மீது பாரம் சுமத்தப்பட்டது போல சில தொந்தரவுகள் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு, உங்கள் துணை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்றும், உங்களை கட்டுப்படுத்துவதை போன்றும் தோன்றுவீர்கள். மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இன்று அவர்களது சீனியர்களின் விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோர் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உச்சத்தை காணலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

நன்கொடைகள்: ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஆடைகள் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் அற்புதமான கற்பனைத் திறன், எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்கள் செயல் மற்றும் பேச்சால் மக்களைக் கவருவீர்கள். முதலீடுகளில் அதிக லாபம் உடனடியாக கிடைக்காது. இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கு சாதகமாக மாறும். காதலிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணருவார்கள். புதியவர்களிடத்தில் அரசு அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நாளை குரு மந்திரம் உச்சரித்துத் தொடங்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: பெண் பணியாளருக்கு குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உடல் நலம் மீது கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தம் குறைக்க தியானம் செய்ய வேண்டும். உங்களது முழு அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மூலம் இன்று நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள், இருப்பினும் செலவுகளும் காத்திருக்கிறது. பயணம் செய்வது பொழுதுபோக்கு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். கட்டுமானம் மற்றும் மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட தியானம் செய்யலாம். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் எவ்வளவு பயணம் செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் டார்கெட்டை முடிக்க முடியும். முடிந்தவரை இன்று அசைவம் சாப்பிடுவதையும் மது அருந்துவதையும் தவிர்த்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: பிச்சைக்காரருக்கு பச்சை அல்லது சிவப்பு ஆடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காலையில் விநாயகரை வழிபடுங்கள். மற்றவர்களுடன் பழகும் போது, செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். தனிமை உணர்வு குறைந்து, இன்று அதிகமாக மற்றவர்களுடன் பழகத் தொடங்குவீர்கள். வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய நண்பருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் லாபம் ஈட்டுவீர்கள். கடன் வாங்குவது அல்லது கொடுப்பது இன்று தவிருங்கள். பிற்பகலுக்கு மேல் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் எந்த வேலையாக இருந்தாலும் சீக்கிரம் முடிக்க முயற்சி செய்யுங்கள். காதலிப்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது. எனவே உங்கள் துணைக்கு நேர்மையாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: கோவிலுக்கு தேங்காய் தானம் செய்ய வேண்டும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீண்ட நேரம் வேலை செய்வது போல இருக்கும், எனவே ஓய்வு எடுக்க முடியாது. உங்கள் சீனியர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் வேலை செய்யும் போது கவனமாக இருக்கவும். மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட சிறந்த நாளாகும். தனிப்பட்ட உறவுகளில் அசௌகரியமாக உணரக்கூடும். மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் அமையும் புதிய வாய்ப்பு சாதகமான பலனை தரும். புதிய தொழிற்சாலை அமைக்க நிலம் தேடுபவர்களுக்கு நல்ல இடம் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு வெள்ளை நிற இனிப்புகளை வழங்குங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டின் கிழக்கில் ஒரு விண்ட் சைமைப் பொருத்துங்கள். பிரபலங்கள், அரசியல்வாதிகள், மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், ஜோதிடர்கள், ஒப்பனை கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று சிறப்பான நாள். காதல் உறவில் இருந்தால் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பொது கூட்டங்களில் கலந்து கொள்ள மற்றும் கட்சி சீனியர்களை கவரவும் இன்று நல்ல நாள். கடன் வழங்குபவர்கள் மற்றும் வங்கியில் பணியாற்றுபவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: வெண்கலம் அல்லது செம்பு உலோக துண்டை தானம் செய்யுங்கள்.

#எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்தை மேம்படுத்த சிட்ரஸ் பழங்களை சாப்பிடுங்கள். நன்கொடை வழங்குவது தான் வாழ்க்கை முன்னேற உதவும். குறித்த நேரத்தில் நீங்கள் காரியத்தை முடித்தால் பணவரவு அதிகம் இருக்கும். பணம், புகழ், ஞானம், மரியாதை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாசம் கொடுத்த கடவுளுக்கு உங்கள் நன்றி சொல்ல கோவிலுக்குச் செல்லுங்கள். மருத்துவர்கள் மற்றும் நிதியாளர்கள் வெற்றிகரமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுகளை பெறுவார்கள். உங்கள் காதல் உணர்வுகளை யதார்த்தமாக மாற்ற இன்று ஒரு அழகான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: பிச்சைக்காரருக்கு தர்பூசணியை தானம் செய்யுங்கள்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காலையில் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஒரு படி முன்னேறுவார்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், இன்று மொத்தமாக பங்குகளை வாங்கலாம். இன்று சிவப்பு மற்றும் ஊதா கலவை ஆடை அல்லது அணிகலன்களை அணிவது உங்களுக்கான அதிர்ஷ்ட வாய்ப்பை அதிகரிக்கிறது. உங்கள் கண்களை கவனித்து கொள்ளுங்கள். பயணம் செல்வதைத் தவிர்த்து, வீட்டிலிருந்தே வேலை பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் கிழமை

அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடைகள்: விலங்குகளுக்கு வாழைபழம் செய்யுங்கள்

30 நவம்பர் அன்று பிறந்த பிரபலங்கள்: சுபாஷ் சந்திரா, ராஜீவ் தீக்ஷித், ராஷி கன்னா, நிவேதிதா பெத்துராஜ், விஜய் ராஸ்

First published:

Tags: Numerology, Tamil News