முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (30 ஜனவரி 2023) ஆசிரமங்களில் புத்தகங்களை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (30 ஜனவரி 2023) ஆசிரமங்களில் புத்தகங்களை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜனவரி 30-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்ப விழாக்கள், இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் அல்லது நேர்காணலுக்கு விண்ணப்பித்தல் என அனைத்தும் சிறப்பாக இருக்கும் நாள். உங்கள் அறிவு நேர்காணல் செய்பவரை ஈர்க்கும். இன்று விற்பனை மற்றும் அரசியல் துறைகளில் இருப்போருக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. இது உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் நாள். உடன் வேலை செய்பவர்கள் மற்றும் தங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் உங்கள் மீது அதிக மரியாதை வைத்திருப்பார்கள். சொத்து வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எழுதுபொருள், பள்ளி, உணவகங்கள், ஆலோசனை புத்தகங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், உலோகங்கள், படைப்பாற்றல் வகுப்புகள் மற்றும் விளையாட்டு கல்விக்கூடங்கள் போன்றவற்றின் வணிகம் நல்ல லாபத்தால் உயர்வடையும்.. குழந்தைகளுக்கு படிப்பு சுமை அதிகமாக இருக்கும்.

உகந்த நிறம் : மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடைகள் : கோவிலுக்கு சந்தனம் தானமாக கொடுப்பது

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் போல் அனைவரிடமும் மிகவும் நெகிழ்வாகவும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பதை தவிர்க்கவும் ஏனெனில் உங்கள் மென்மையான குணம் உங்களை காயப்படுத்தும். அதுபோன்ற மனதை காயப்படுத்தும் விமர்சனங்களை புறக்கணிக்கவும். பெண்கள் இன்று வெள்ளை உணவை சமைக்க வேண்டும். பணத்தைப் பயன்படுத்திப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டிய நாள் இது. மாணவர்கள், உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், தரகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் செயல்திறனில் அதிக மதிப்பீடுகளைக் காணும் நாள். காதல் உறவுகளில் மற்றவர்களின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாட்டை உணர்வீர்கள்.

உகந்த நிறம்: வெளிர் நீலம் (அக்வா)

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

நன்கொடைகள் : அனாதை இல்லத்தில் பால் தானம் செய்வது

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்களுக்கு உங்கள் படைப்பாற்றல் மற்றும் கற்பனை திறன் மூலம் ஒரு அழகான நாளாக அமையப்போகிறது.

உங்கள் பேச்சால் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் எதிர்காலத்திற்கு சாதகமாக மாறும், ஆனால் நிதி திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள். காதலில் இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், தங்கள் உணர்வுகளை வார்த்தைகள் மூலம் பரிமாறிக்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் புதியவர்களிடம் கவனமாக இருக்கவும். உங்கள் நாளைத் தொடங்கும் முன் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரிக்க மறக்காதீர்கள்.

ஊகந்த நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3, 1

நன்கொடைகள்: ஆசிரமங்களில் புத்தகங்களை தானம் செய்வது

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபட நீங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். தியானம் செய்வது நல்லது. பணம் வரும் ஆனால் பல வழிகளில் செலவாகும். கட்டுமான வணிகம் மற்றும் மருத்துவத் துறை விரைவான இயக்கத்தை எதிர்கொள்ளும். பங்கு முதலீடு மெதுவான நேர்மறையான மாற்றங்களைக் காணும். மாணவர்கள் தியானத்தைப் பின்பற்றுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்பவர்கள், எவ்வளவு அதிகமாகப் பயணம் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக வெற்றி கிடைக்கும். மேலும் உங்களின் மாத இறுதி இலக்கை அடைய அதிக வாய்ப்புள்ளது. தயவு செய்து இன்று அசைவம் சாப்பிடுவதையும் மதுபானத்தையும் தவிர்க்கவும்

உகந்த நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: தெருவிலங்குகளுக்கு உப்பு உணவு தானம் செய்வது

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மனைவி அல்லது நெருங்கிய நண்பருடன் உள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு நாள். கடன்கள் போன்ற பொறுப்புகளின் வலையில் விழ வேண்டாம். நாளின் இரண்டாம் பாதியில் அதிர்ஷ்டம் அதன் பங்கை வகிக்கும், அதற்குள் வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள். வேகமான இயக்கம் விற்பனையில் இருப்பவர்களுக்கும் குறிப்பாக விளையாட்டுகளில் உள்ளவர்களுக்கும் சாதகமானது. மாணவர்கள் இன்று தங்கள் கல்வியில் சாதனைகளை புரிவார்கள். காதலில் இருப்பவர்கள் திசைதிருப்பப்படுவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கும், எனவே முதலில் நேர்மையைக் கடைப்பிடியுங்கள்.

உகந்த நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: பச்சை பழங்கள் காய்கறிகளை தானம் செய்வது

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக புதிய வாய்ப்பை தேர்வு செய்ய சாதகமாக மாறும் நாள். தனிப்பட்ட உறவுகளில் நீங்கள் பாதுகாப்பற்றதாகவும் அமைதியற்றதாகவும் உணர்வீர்கள். புதிய தொழிற்சாலை அமைக்க இடம் தேடுபவர்கள் நல்ல விருப்பத்தை தேர்வு செய்ய முடியும். விளையாட வெளியே செல்லுங்கள், ஏனெனில் நீங்கள் கடந்த கால எண்ண ஓட்டங்களில் இருந்து விடுபட வேண்டும்.ஊக்

உகந்த நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு வெள்ளை நிற இனிப்புகள் வழங்கலாம்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த நாள் உங்களுக்கு புதிய பணிகளில் ஞானத்தையும் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளக் கூடிய நாள். அரசியல்வாதிகள், மென்பொருள் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், ஜோதிடர்கள், ஒப்பனை கலைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிகரமான நாள். தங்கள் காதல் துணையுடன் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும். வாதங்கள் இல்லாமல் உறவு நிரப்பப்படும். ஞானம் உயர்வாக இருக்க குரு மந்திரத்தை ஓத வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு வெகுமதியும் அங்கீகாரமும் கிடைக்கும்.கடன் கொடுப்பவர்கள் மற்றும் வங்கியாளர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

உகந்த நிறம்: பைந்நீல நிறம் (டீல்)

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: வெண்கலம் அல்லது செப்பு உலோகத் துண்டுகளை தானம் செய்வது

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சுற்றி இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும், அவர்கள் உங்களை ஏமாற்றி தவறாக நடக்க வாய்ப்பு உள்ளது. குறித்த நேரத்தில் காரியத்தை முடிப்பதால் பலன்கள் அதிகமாகும். உங்களுக்கு பணம், புகழ், ஞானம், மரியாதை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாசத்தை அளித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோவிலுக்கு செல்வது நல்ல பலனை தரும். ஆடம்பரத்துடன் பயணம் செய்வதும் சாத்தியமாகும், உங்கள் வாழ்க்கை பரபரப்பாகவும் சிக்கலாகவும் இயங்குவதை நீங்கள் காண்பீர்கள், ஆனால் இது தற்காலிகம்தான். மருத்துவர்கள் மற்றும் நிதியாளர்கள் வெற்றிகரமான செயல்பாடுகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். உங்கள் காதல் எண்ணங்களை யதார்த்தமாக மாற்ற ஒரு அழகான நாள்.

உகந்த நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள் :யாசகம் பெறுபவருக்கு தர்பூசணியை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நடிப்பு, ஊடகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அழகான நாள். விளையாட்டு வீரர், தொழிலதிபர், ஆசிரியர்கள், வங்கியாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் மற்றும் மாணவர்கள் ஆவணப்படுத்தலில் ஒரு படி முன்னேற வேண்டும். நீங்கள் பங்குச் சந்தையில் இருந்தால், மொத்தமாக பங்குகளை வாங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. சிவப்பு மற்றும் ஊதா கலவையை அணிவது அதிர்ஷ்டத்தையும் நிலைத்தன்மையையும் அதிகரிக்கிறது. தயவு செய்து இன்று உங்கள் கண்களை கவனித்துக் கொள்ளுங்கள். பயணத்தைத் தவிர்த்து, இன்றைக்கு ஆன்லைனில் வேலை செய்ய முயற்சிக்கவும்.

உகந்த நிறம்: ஊதா

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடைகள் : வீட்டு உதவியாளருக்கு சிவப்பு மசூர் பருப்பு தானம் செய்யுங்கள்

ஜனவரி 30ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: பிரகாஷ் ஜவடேகர், பிரியதர்ஷன், அனூப் சோனி, தியா குமாரி, பைசல் கான், எஸ்.என்.கோயங்கா

First published:

Tags: Numerology, Tamil News