எண்களுக்கு இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் கணித பலன்களை பார்க்கலாம்.
எண் 3:
இதற்குரிய முக்கிய கிரகம் : வியாழன்
எண் 3 என்பது எண் 1 மற்றும் எண் 2 ஆகியவற்றுடன் தொடர்பில் வரும்போது எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
எண் 1: எண் 1 மற்றும் எண் 3 ஆகியவை மிக சக்திவாய்ந்த, பயனுள்ள இணைப்பை கொண்டுள்ளது. அந்த வகையில் ஒரு நபரின் அறிவுத்திறன் வெளிப்படுகிறது. எண் 1 என்பது சூரியனுக்கு உகந்த எண் ஆகும். ஆனால், எண் 3 என்பது அனைத்து சூரியன் உள்பட கிரகங்களுக்கும் குருவாக கருதப்படுகின்ற வியாழனுக்கு உரிய எண் ஆகும்.
ஆக, ஒரு நபரின் பிறப்பு அட்டவணையில் எண் 1 மற்றும் 3 கொண்டிருப்பாராயின், அவருக்கான திறன்கள், அறிவு, திறமை, புத்திகூர்மை ஆகியவை மிக உயர்ந்ததாக இருக்கும். எண் 3 கொண்டிருக்கையில் வியாழனுக்கு உரிய சிறப்பான பலத்துடனும், எண் 1க்கு உண்டான பிரகாசத்துடனும் அவர் விளங்குவார். பொதுவாக அரசியல் தலைவர்கள் அல்லது பெரும் நிறுவன தலைவர்கள் இந்த எண் கணிதத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
பெரும் தொழிலதிபர்கள், கணக்கு தணிக்கையாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள், நிதி அதிபதிகள், ஆசிரியர்கள், பொது மேடை பேச்சாளர்கள், தடகள வீரர்கள், தலைவர்கள் போன்ற சக்தி வாய்ந்த நபர்களை இந்த 1 மற்றும் 3 ஆகிய எண்களின் தொடர்பு உருவாக்குகிறது.
இந்த எண்களின் தொடர்பு கொண்ட மாணவர்கள் உயர்ந்த லட்சியத்துடன் இருப்பார்கள் மற்றும் சிறப்பான கல்லூரிகளில் படிப்பார்கள். அறிவியல் சார்ந்த துறையில் உயர் கல்வி படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
எண் 2: எண் 2 மற்றும் எண் 3 ஆகிய இரண்டுக்கும் இடையே சமரச சூழல் காணப்படுகிறது. எந்த சமயத்தில் இந்த இரண்டு எண்களும் சேர்ந்து உழைக்கும், அதன் காரணமாக சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை கணித்து கூறுவது கடினமாகும். ஆனால், நிச்சயமாக இந்த எண்களுக்கு இடையே பரஸ்பர சமரசம் உண்டு.
இந்த எண்களை கொண்ட பார்ட்னர்கள் ஆதிக்கத்தை தவிர்த்து, பொதுப்பலன்களுக்கு உரிய நோக்கத்துடன் செயல்பட வேண்டும். எண் 2இன் பலன்களை பெற வேண்டும் என்றால் ஆழ்மன முடிவுகளின்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல, சமூக தொடர்புகளை விரிவாக்கம் செய்ய எண் 3ஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தம்பதியர்கள் முழு ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுவதுடன், உணர்வு ரீதியாக இணைந்திருக்க வேண்டும். மருத்துவ உபகரண விற்பனை, கல்வி, உள் அரங்கு டிசைன், இசை, உணவு, தடகள போட்டி போன்ற துறைகளில் இந்த 2 மற்றும் 3 கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News