முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண்கணித பரிந்துரைகள் : எண் 6 மற்றும் 7 வுடன் எண் 2 க்கு இவ்வளவு இணக்கம் உள்ளதா.? இதோ முழு விபரம்.!

எண்கணித பரிந்துரைகள் : எண் 6 மற்றும் 7 வுடன் எண் 2 க்கு இவ்வளவு இணக்கம் உள்ளதா.? இதோ முழு விபரம்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | இன்றைக்கு எண் 2 க்கும் எண்கள் 6 மற்றும் 7 வுடன் எவ்வளவு இணக்கமானவை? என்னென்ன குணாதிசயங்களைக் கொண்டுள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தற்காலத்தில் நியூமராலஜி எனப்படும் எண் கணித முறைப்படி தான் பல புதிய வேலைகளைப் பெரும்பாலான மக்கள் தொடங்குகின்றனர். பல மக்களுக்குப் பதவி உயர்வு முதல் தொழிலில் வெற்றி, பிரச்சனையில்லாத வாழ்க்கை, இனிமையான காதல், நட்பு என பல வகையான நன்மைகளை நியூமராலஜி வழங்குகிறது.

    இதன் காரணமாக தான் ராசி பலன் எந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகியுள்ளதோ அந்த அளவிற்கு எண் கணிதமும் பிரபலமாகியுள்ளது. எனவே தான் பெயர்களை வைப்பதற்கு கூட எத்தனை எண்களில் பெயர்களை வைக்கலாம்..? எத்தனை எண்கள் இருந்தால் வாழ்வு சிறப்பாக இருக்கும் என தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு குழந்தைகளுக்கு பலர் பெயர்களை வைக்கிறார்கள்.

    எண்கள் 1 முதல் 9 வரை உள்ள ஒவ்வொரு எண்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன. அந்த வகையில் இன்றைக்கு நம்பர் 2-ஆனது நம்பர் 6 & 7-க்கு எவ்வளவு இணக்கம் மற்றும் என்னென்ன குணாதிசயங்களை கொண்டுள்ளன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

    நம்பர் 2-ன் அதிர்ஷ்ட கிரகம் – சந்திரன்

    நம்பர் 6 என்பது நம்பர் 2-உடன் எவ்வளவு இணக்கமானது..?

    நம்பர் 2 மற்றும் நம்பர் 6-க்கு இடையில் ஒரு வெற்றி உறவு இருக்கிறது. இரண்டுமே கமிட்மென்ட்டை நிறைவேற்ற உறுதியாக செயல்படும் எண்கள் ஆகும். எனவே திருமணம் மற்றும் வணிக கூட்டாண்மைக்கு இந்த நம்பர்கள் சிறந்த காம்பினேஷன்கள் ஆகும். நம்பர் 6 என்பது குடும்ப உறவுகள் மற்றும் நட்பு வட்டாரங்களில் சிறப்பான பலன்களை தரும் அதே நேரம் நம்பர் 2 உறவுகளை வலுவாக்க மற்றும் உணர்ச்சிகர பிணைப்புகள் ஏற்பட ஊக்குவிக்கிறது.

    நம்பர் 6-ஐ நியூமராலஜியாக கொண்டவர்களுடன் நம்பர் 2-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் உணர்ச்சி சமநிலையை அடைய கற்று கொள்ள வேண்டும். இந்த 2 நம்பர்களும் கம்யூனிட்டி, சமூக காரணங்கள், நலன், அரசு மற்றும் நாடு உள்ளிட்டவற்றில் இருப்போருக்கு பெரிதும் நன்மைகளை செய்கின்றன. நம்பர் 6-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் தனி அல்லது பார்ட்னர்ஷிப்பாக இருந்தாலும், அவர்களின் பிசினஸ் மொபைல் நம்பரின் டோட்டலை 2 வரும்படி பார்த்து கொள்வது சிறந்த நன்மைகளை அளிக்கும். அதே போல அழகு சாதனப் பொருட்கள், அலங்காரம், பாதுகாப்பு சேவைகள், உடைகள், மருந்துகள், நகைகள், தண்ணீர், சட்டம் மற்றும் உணவு ஆகியவற்றில் பணிபுரியும் 2-ஆம் நம்பர் நியூமராலஜி கொண்டவர்கள் தங்கள் மொபைல் நம்பரில் டோட்டல் 6-ஆக இருக்குமாறு பார்த்து கொள்வது சிறந்தது.

    நம்பர் 7 என்பது நம்பர் 2-உடன் எவ்வளவு இணக்கமானது..?

    பொதுவாக நம்பர் 2 என்பது நம்பர் 7-ஐ அடிக்கடி சந்திக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் இவற்றுக்கிடையே எப்போதும் எண்ணங்களின் மோதல்கள் இருந்து கொண்டே இருக்கும். நம்பர் 7-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் மிகவும் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் நம்பர் 2-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் எப்போதும் தங்கள் இதயத்தை கேட்டு செயல்படுகிறார்கள். இது இவர்கள் இருவருக்குள்ளுமான உறவுகளில் அதிருப்தி ஏற்பட வழிவகுக்கிறது.

    ஆனால் அதே நேரம் நம்பர் 7 மற்றும் 2 உள்ளிட்டவை வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் அன்பாகவும் இருப்பதை அவ்வப்போது நிரூபிக்கின்றன. இத்தகைய கிரகங்களின் தொகுப்பைக் கொண்ட பிசினஸ் பார்ட்னர்கள் லாபம் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் சிறப்பாக செயல்படுகிறார்கள். எனினும் நம்பர் 2-ஐ பிறந்த நாள் நிமராலஜியாக கொண்டவர்கள் தங்களின் பெயரின் டோட்டல் 7-ஆக இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். 2-ல் சந்திரன் மற்றும் 7-ல் கேது உள்ள இருவரும் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது சிவனின் ஆசீர்வாதங்களை அவர்களுக்கு அளிக்கும்.

    First published:

    Tags: Numerology, Tamil News