முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண்கணித பரிந்துரைகள் : எண் 1 மற்றும் 3 வுடன் எண் 2 எவ்வளவு இணக்கமானது தெரியுமா.? இதோ முழு விபரம் இங்கே.!

எண்கணித பரிந்துரைகள் : எண் 1 மற்றும் 3 வுடன் எண் 2 எவ்வளவு இணக்கமானது தெரியுமா.? இதோ முழு விபரம் இங்கே.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நம்பர் 2 க்கு நம்பர்கள் 1 மற்றும் 3 எவ்வளவு இணக்கமானவை? எந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..

 • News18 Tamil
 • 1-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைக்கு நியூமராலஜி எனப்படும் எண் கணித முறைப்படி தான் பல புதிய வேலைகளை பெரும்பாலான மக்கள் தொடங்குகின்றனர். பல மக்களுக்குப் பதவி உயர்வு முதல் தொழிலில் வெற்றி, பிரச்சனையில்லாத வாழ்க்கை, இனிமையான காதல்,நட்பு என பல வகையான நன்மைகளையும் இது வழங்குகின்றது. இதனால் தான் ராசி பலன் எந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகியுள்ளதோ? அந்த அளவிற்கு எண் கணிதமும் பிரபலமாகியுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட 1- 9 நம்பர்களை அடிப்படையாக கொண்டிருந்த நிலையில், ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு விதமாக குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் நம்பர் 2 க்கு நம்பர்கள் 1 மற்றும் 3 எவ்வளவு இணக்கமானவை? எந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..

  நம்பர் 2 ன் அதிர்ஷ்ட கிரகம் – சந்திரன்

  எண் 1: எண் 1 மற்றும் எண் 2 க்கு இடையேயான உறவு எப்போதும் வியக்கத்தக்க வகையில் இணக்கமாகவும் ஆதரவாகவும் இருக்கும். எண் 1 சூரியன் மற்றும் எண் 2 சந்திரன் அவர்களுக்கு இடையே சிறந்தப் புரிதலை அனுபவிக்கிறது. எனவே இந்த எண்களைக் கொண்டுள்ளவர்கள் சேர்ந்தால், வணிக அல்லது தனிப்பட்ட உறவுகளை நீண்ட காலமாக வலுவுடன் வைத்துக்கொள்கிறார்கள்.

  மேலும் எண் 1 என்பது தலைசிறந்ததாக இருக்கலாம் எனவும், அங்கு எண் 2 மிகவும் நெகிழ்வானதாக இருப்பதில் நிபுணத்துவமும் பெற்றுள்ளது. எனவே தான் இந்த எண்கள் இரண்டும் அல்லது இந்த இரண்டு எண்களைக் கொண்ட நபர்கள் சேர்ந்து இருக்கும் போது வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக விளங்குகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக நம்பகத்தன்மையை அடைய கைகோர்த்து செயல்படுவார்கள்.

  ஃபிரான்சைஸ் கட்டமைப்பில் அல்லது விநியோகஸ்தர்கள் வடிவில் ஒப்பந்தம் செய்யும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிறந்த முடிவுகளுக்காகத் தங்கள் பெயரை மொத்தமாக 2 ஆக அமைத்தால் கூடுதல் சிறப்பாக அமையும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டும என்றால், பெண்கள் சூரிய பகவானுக்கு நீராடி, சந்திர மந்திரத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும்.

  எண் 3: அதிக நெகிழ்வுத் தன்மையுடன் வாழ்க்கையை நகர்த்திச் சென்றாலும், எண் 3 மற்றும் 2 ஆகிய இரண்டும் அந்தந்த வாழ்க்கையில் நடுநிலை விளைவை ஏற்படுத்துவதாக அமைவதோடு தகவல் தொடர்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மற்றும் எண் 3 படைப்பாற்றலை ஒத்திருந்தாலும், அவை ஒன்றாக சராசரி வெளிப்பாட்டை உருவாக்குகின்றன. எண் 2 மற்றும் 3 ல் தொடர்பில் உள்ள மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜோதிடர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவு ஆதாரமாக அமைகிறது.

  இருப்பினும் 2 இன் உரிமையாளர்கள், பெயரளவிலான விளைவைத் தருவதால் மொத்தம் 3 என்ற பெயரைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இந்த இருவரும் பொழுதுபோக்குத் துறையில் சிறந்த நண்பர்களாக இருக்க முடியும். எண் 2 மற்றும் எண் 3 நம்பகமானதாகவும், கல்லூரி வாழ்க்கையில் நல்ல உறவைக் கொண்டிருப்பார்கள். மேலும் அக்கறையுள்ள மனப்பான்மையுடனும், போட்டித்தன்மையுடனும் விளங்குவார்கள்.

  First published:

  Tags: Numerology, Tamil News