முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண்கணித பரிந்துரைகள் : எண்கள் 8 & 9 உடன் எண் 1 எவ்வளவு இணக்கமானது.!

எண்கணித பரிந்துரைகள் : எண்கள் 8 & 9 உடன் எண் 1 எவ்வளவு இணக்கமானது.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | 1ஆம் எண் சூரிய கிரகத்திற்கும், 8ஆம் எண் சனி கிரகத்திற்கும், 9ஆம் எண் செவ்வாய் கிரகத்திற்கும் உரிய எண்களாக உள்ளன. இவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகள் அடிப்படையில் உங்களுக்கான பலன்களை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் கணித பலன்களில் நம்பிக்கை கொண்டவரா நீங்கள்? உங்களின் பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் சார்ந்த பலன்களை நீங்கள் அதிகம் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், உங்கள் கிரகங்களோடு தொடர்புடைய எண்களுக்கு இடையே தொடர்புகள் உண்டு. உங்களுக்கான எண்கள் தொடர்புடைய கிரகங்கள், மற்ற கிரகங்களுடன் இணைவதைப் பொறுத்து உங்களுக்கான பலன்கள் நிர்ணயிக்கப்படும். உதாரணத்திற்கு 1ஆம் எண் சூரிய கிரகத்திற்கும், 8ஆம் எண் சனி கிரகத்திற்கும், 9ஆம் எண் செவ்வாய் கிரகத்திற்கும் உரிய எண்களாக உள்ளன. இவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகள் அடிப்படையில் உங்களுக்கான பலன்களை பார்க்கலாம்.

எண் 1:

உரிய கிரகம் : சூரியன்

எண் 1 என்பது 8 மற்றும் 9 ஆகிய எண்களுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகும்?

எண் 8: ஜாதகம் மற்றும் எண் கணித பலன் தொடர்பான புத்தகங்களில் மிக அதிகமாக குறிக்கப்படுகின்ற, இணைப்பு கொண்ட எண்கள் இதுவாகும். எண் கணித பலன் என்பது பேசுவதற்கு எளிமையான விஷயமாக தோன்றலாம். ஆனால், கையாளுவதற்கு மிக கடினமான விஷயமாகும். ஆம் சூரிய கிரகத்திற்கு உரிய எண் 1 குறித்தும், சனி கிரகத்திற்கு உரிய எண் 8 குறித்தும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். சனி கிரகத்தின் தந்தையாக சூரிய கிரகம் பார்க்கப்படுகிறது. ஆனால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே நீண்டகால அடிப்படையில் ஒத்துவராது என்று கூறுவார்கள்.

பிறந்த தேதி 1 மற்றும் அம்ச தேதி 8 ஆகியவற்றை கொண்டுள்ள நபர்கள் மிக கடினமான சூழலை எதிர்கொள்வார்கள். இவர்கள் எப்போதுமே தங்கள் வாழ்க்கை பாதையில் சிரமங்களை கடந்து வருவர்கள். தவறான தகவல் தொடர்பு, உடல்நலக் கோளாறுகள், ஆதிக்கம், நிதி சார்ந்த சவால்கள் போன்றவற்றை இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த எண்களுடன் வணிக தொடர்புகள் இருக்கிறது என்றால், அவர்கள் சிவன், சனிபகவான், சூரிய பகவான் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை செய்ய வேண்டும். மனை கணக்கு மொத்தம் 8 என்று வருகின்ற வீடுகளை இவர்கள் தவிர்க்க வேண்டும்.

எண் 9: எண் 1 மற்றும் எண் 9 இடையிலான தொடர்பு பிரமாதமாக இருக்கிறது. இங்கு சூரியன் மற்றும் செவ்வாய் இடையிலான உறவு சிறப்பாக இருக்கிறது. சிறப்பான புரிந்துணர்வு, விசுவாசம், நிதி லாபம், சமூக அந்தஸ்து போன்ற அனைத்துமே இந்த நபர்களுக்கு கிடைக்கும்.

எண் 1 மற்றும் 9 ஆகிய இரண்டுமே புத்தாக்க சிந்தனை, புத்திகூர்மை, திறமை போன்றவற்றுக்கு சொந்தமானதாகும். வாழ்க்கை துணைக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பார்கள். புத்தாக்கம் தொடர்புடைய வணிகங்களில் சிறப்பான பலன் கிடைக்கும். உங்களுக்கு வளம் மற்றும் சொகுசு கிடைக்க வலது வகையில் சிவப்பு கயிறு கட்ட வேண்டும்.

First published:

Tags: Numerology, Tamil News