அறிவியலில் பெயர்கள் மற்றும் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களின் நியூமரிக்கல் வேல்யூ பற்றிய ஆய்வும் அடங்கும். நியூமராலஜி என்பது ஒரு பாரம்பரிய அறிவியலாகும். நியூமராலஜி அதாவது எண்கணிதம் என்பது ஒரு எண்ணுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அல்லது உறவின் நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
நியூமராலஜியானது பல மக்களுக்கு பதவி உயர்வு, தொழிலில் வெற்றி, இனிமையான காதல் வாழ்க்கை என பல நன்மைகளை வழங்கியுள்ளது. வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட 1- 9 நம்பர்களை அடிப்படையாக கொண்டது எண்கணிதம். வெவ்வேறு எண்களை கொண்ட இரு நபர்களுக்கு இடையிலான உறவில் பொருந்த கூடிய தன்மையை கணக்கிடவும் எண்கணிதம் உதவுகிறது. எண்களின் அடிப்படையில் காதல் அல்லது உறவு இணக்கத்தன்மை கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் நம்பர் 1-க்கு நம்பர்கள் 6 மற்றும் 7 எவ்வளவு இணக்கமானவை என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
நம்பர் 1-ன் அதிர்ஷ்ட கிரகம்: சூரியன்
நம்பர் 6 என்பது நம்பர் 1-உடன் எவ்வளவு இணக்கமானது..?
நம்பர் 6: உண்மையான மற்றும் வலுவான உறவு அல்லது நட்பைப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் எண் 1 மற்றும் எண் 6-க்கு இடையில் முற்றிலும் இல்லை. எண் 6 வீனஸ் அதாவது வெள்ளி கிரகத்தை குறிக்கிறது. இந்த கிரகத்திற்கு அதன் சொந்த ஒளி மற்றும் பிரகாசம் இல்லை. இது பிரகாசிக்க சூரியனையோ அல்லது பிறவற்றை சார்ந்துள்ளது. மறுபுறம் நம்பர் 1-க்கு அதிர்ஷ்ட கிரகமான சூரியனோ அதன் சொந்த ஒளியால் நிரம்பியுள்ளது, தன்னை மையமாக கொண்டு சூரிய குடும்பத்தை கொண்டுள்ளது மற்றும் தீப்பிழம்பால் நிரம்பியது. எனவே நம்பர் 1 மற்றும் நம்பர் 6-ஐ நியூமராலஜியாக கொண்டவர்களுக்கு இடையில் நட்புறவு இல்லாததோடு ஆளுமை மோதல்கள் இருக்கும்.
இந்த நம்பர்களுக்கு இடையேயான திருமண உறவு ஈகோ பிரச்சனைகளால் நிரம்பி இருக்கும் மற்றும் முடிவில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இத்தகைய நபர்களுக்கு இடையிலான வணிக ஒப்பந்தங்கள் சவாலானதாக இருக்கும். எனவே சூரியனின் கீழ் இயக்கப்படும் நம்பர் 1-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் தங்கள் மொபைலின் டோட்டல் எண்ணிக்கையை 6-ஆக வைத்திருப்பதை தவிர்க்க எண் கணிதம் பரிந்துரைக்கிறது.
நம்பர்7 என்பது நம்பர் 1-உடன் எவ்வளவு இணக்கமானது..?
நம்பர் 7: கேது கிரகத்திற்கான நமபர் 7, சூரியனின் நம்பரான 1-உடன் சிறந்த அல்லது மோசமான நிலையில் இருப்பதை குறிப்பிடுகிறது நியூமராலஜி. நம்பர் 1 மற்றும் நம்பர் 7-க்கு இடையிலான உறவை புரிந்து கொள்வது சற்று கடினமான விஷயமாகும். இந்த 2 நம்பர்களையும் நியுமராலஜியாக கொண்டவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் நோக்கமுடன் செயல்படுபவர்கள். இந்த இரு எண் நபர்களும் அனைத்து ஒப்பந்தங்களிலும் ரிசர்வ்டாகவும், எச்சரிக்கையுடனும் இருப்பதாக தெரிகிறது. ஆனால் இவர்கள் இருவரும் பகுப்பாய்வு திறன்கள், ஆராய்ச்சி திறன்கள், தலைமைத்துவம், தொழில்நுட்ப நட்பு மற்றும் போன்ற சில சிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறார்கள். இந்த அனைத்து குணங்களும் சேர்ந்து ஒரு வலுவான வணிக அல்லது அரசியல் வாழ்க்கையை குறிப்பிட்ட நபர்களுக்கு உருவாக்கி தரும்.
எனவே நம்பர் 1-ல் பிறந்தவர்கள் 7-ஆம் எண்ணுடன் கூட்டு சேரலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் சேர்ந்தால் இருவரும் உறவுகளில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கத் தவறிவிடுவார்கள், இதனால் சிக்கல் ஏற்படலாம். எனவே நம்பர் 1 & 7-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் திருமணம் செய்திருந்தால் பரஸ்பர புரிதல் மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்காக கூடுதல் முயற்சி செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News