முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பரிந்துரைகள் : எண்கள் 4 & 5 உடன் எண் 1 எவ்வளவு இணக்கமானது.!

எண் கணித பரிந்துரைகள் : எண்கள் 4 & 5 உடன் எண் 1 எவ்வளவு இணக்கமானது.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட 1- 9 நம்பர்களை அடிப்படையாக கொண்டது எண் கணிதம். வெவ்வேறு எண்களை கொண்ட இரு நபர்களுக்கு இடையிலான உறவில் பொருந்த கூடிய தன்மையை கணக்கிடவும் எண் கணிதம் உதவுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறிவியலில் பெயர்கள் மற்றும் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களின் நியூமரிக்கல் வேல்யூ பற்றிய ஆய்வும் அடங்கும். நியூமராலஜி என்பது ஒரு பாரம்பரிய அறிவியலாகும். நியூமராலஜி அதாவது எண் கணிதம் என்பது ஒரு எண்ணுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அல்லது உறவின் நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

நியூமராலஜியானது பல மக்களுக்கு பதவி உயர்வு, தொழிலில் வெற்றி, இனிமையான காதல் வாழ்க்கை என பல நன்மைகளை வழங்கியுள்ளது. வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட 1- 9 நம்பர்களை அடிப்படையாக கொண்டது எண் கணிதம். வெவ்வேறு எண்களை கொண்ட இரு நபர்களுக்கு இடையிலான உறவில் பொருந்த கூடிய தன்மையை கணக்கிடவும் எண் கணிதம் உதவுகிறது. எண்களின் அடிப்படையில் காதல் அல்லது உறவு இணக்கத்தன்மை கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில் நம்பர் 1-க்கு நம்பர்கள் 4 மற்றும் 5 எவ்வளவு இணக்கமானவை என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

நம்பர் 1-ன் அதிர்ஷ்ட கிரகம்: சூரியன்

நம்பர் 4 என்பது நம்பர் 1-உடன் எவ்வளவு இணக்கமானது..?

நம்பர் 4: பொதுவாக 1 மற்றும் 4 ஆகிய இரண்டு நம்பர்களும் ஒன்றுக்கொன்று தீவிர மூலைகளில் நிற்பது பொதுவாக கவனிக்கப்படுகிறது. இது இந்த 2 நம்பர்களையும் ஒன்றுக்கொன்று நட்பற்றதாக ஆக்குகிறது. 1 மற்றும் 4 நியூமராலஜியை கொண்ட இரு நபர்கள் இருவரும் இணைந்து ஒரே குழுவில் பணியாற்றும் போது அவர்களுக்குள் ஒத்துப்போகாத அளவிற்கு அவரவர் வலுவான ஆளுமை பண்புகளை கொண்டுள்ளனர். இந்த 2 எண்களும் காந்தங்களின் ஒரே துருவங்களை போல இருப்பதால் எதிர்ப்பு தன்மை வெளிப்படுகிறது.

நம்பர் 1 வலுவான மற்றும் சுதந்திரமாக செய்யப்பட விரும்பும் நபராக இருக்கும் அதே நேரம் நம்பர் 4-ஐ கொண்டவர்கள் ராகுவின் நெறிமுறைகளை அர்ப்பணிப்புடன் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இருவருமே ஒரு திறமையான தலைவராக திகழ கூடிய அளவிற்கு பண்பை கொண்டிருப்பவர்களாக இருந்தாலும், அதே நேரம் மிகவும் அகங்காரத்துடன் இருக்கிறார்கள். எனவே இந்த இரு நம்பர்களை நியூமராலஜியாக கொண்டவர்கள் ஒன்றாக வேலை செய்யும் போது அல்லது ஒன்றாக வாழ நேரிடும் போது தங்களுக்குள் ஒரு எல்லையை வகுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பெயரின் டோட்டல் அல்லது மொபைல் நம்பரின் டோட்டல் 4 என வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

நம்பர் 5 என்பது நம்பர் 1-உடன் எவ்வளவு இணக்கமானது..?

நம்பர் 5: நம்பர்1 மற்றும் நம்பர் 5 இடையிலான உறவு எப்போதும் நடுநிலையானது. 1 மற்றும் 5 ஆகிய இரு நம்பர்களை நியூமராலஜி எண்ணாக கொண்ட இரு நபர்கள் நட்புடன் இருப்பார்கள் என்றாலும் இருவருமே சிறந்த தலைவருக்கான குணங்களை கொண்டவர்கள் என்பதால் 1-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் 5-ஆம் நம்பருடன் நெருக்கமாக பழகுவது கடினம்.

ஆனால் இதற்கு நேர்மாறாக 5 உடன் பிறந்தவர்கள் வலுவான மற்றும் நீடித்த நட்பை எளிதாக உருவாக்குகிறார்கள். 5 என்பது புதன் கிரகத்திற்குரியது. சூரியனுக்கு அருகாமையில் இந்த கிரகம் இருக்கிறது என்பதால் அதன் பிரகாசமான அழகையும், பலன்களையும் சூரியனிடமிருந்து பெறுகிறது. 5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் நம்பர் 5-ஐ நியூமராலஜியாக கொண்டவர்கள் அவர்களின் வணிகப் பெயரின் டோட்டலை நம்பர் 1-ஆக ஏற்று கொள்ளலாம்.

First published:

Tags: Numerology, Tamil News