முகப்பு /செய்தி /ஆன்மிகம் / நியூமராலஜி: உங்களது பெயர் W என்ற எழுத்தில் துவங்குகிறதா.? உங்களின் குணங்கள் இப்படி தான் இருக்கும்.!

நியூமராலஜி: உங்களது பெயர் W என்ற எழுத்தில் துவங்குகிறதா.? உங்களின் குணங்கள் இப்படி தான் இருக்கும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | W-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்.! இவர்களின் குணநலன்கள் என்ன.?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆங்கில எழுத்துக்களில் W என்ற எழுத்தில் பெயர் வைப்பது மிகவும் அரிதானது. இந்த எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களின் பொதுவான குணாதிசயங்கள். பண்புகள் மற்றும் எவ்வளவு அதிர்ஷ்டமான எழுத்து என்பதை பற்றி என் கணித பழங்களின் அடிப்படையில் இங்கே பார்க்கலாம்.

W என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறார்கள். குறிப்பாக, ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று கூறும் அளவுக்கு இவர்கள் ஸ்கூபா டைவிங், பாரா ஜம்பிங், மோட்டார் பந்தயம், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போன்ற ஆபத்தான விளையாட்டுக்களை தீவிரமாக விரும்புகிறார்கள்.

பொதுவாக, இவர்கள் அடக்கமானவர்களாக, அமைதியாகவே இருந்தாலும் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். இவர்கள் மிகவும் கடினமான வேலைகளைச் செய்யத் தயங்குவதில்லை. இரவும் பகலும் இடைவிடாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியும். லட்சியம் அல்லது குறிக்கோள்களை நோக்கிய இவர்களின் அர்ப்பணிப்பு, மேலும் மேலும் உயரம் அடையவும், இலக்குகளை எட்டவும் உதவும். மேலும், இவர்களின் கனவுகளை முழுமையாக நிரப்பவும் வழிவகுக்கிறது.

W என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களின் வாழ்க்கையில் பொதுவாக, முதுமை காலத்தில் கவலைகளும் துக்கங்களும் கணிக்கப்படுகின்றன. முதிய காலம் வரை இவர்கள் பரபரப்பான வேலைகளும், வாக்குறுதிகளும் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால், குடும்பத்தினருக்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று குடும்பத்தினரிடமிருந்து புகார்களைப் பெறுகிறார்கள். ஆனால், தான் நேசிப்பவர்களுக்கு நேரம் ஒதுக்கவும் போராடுகிறார்கள். இந்த நபர்களின் பிஸியான வழக்கத்தின் காரணமாக, லட்சியம் அல்லது ஆர்வத்தை விட செழிப்பான வசதியான வாழ்க்கை முக்கியமானது என்ற உண்மையை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த எழுத்தில் பெயர் கொண்ட நபர்கள் இயற்கையாகவே தாராளமானவர்கள் மற்றும் உண்மையான தேசபக்தர்கள். சமூக சேவை செய்பவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள், தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்பவர்கள். எனவே அவர்களை சுயமாக கற்பவர்களாக மாறுகிறார்கள்.

சொத்துக்கள் அல்லது பங்குகளில் முதலீடு செய்வதில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் மற்றவர்களை அதிகம் நம்புகிறார்கள், இது வலையில் விழ வழிவகுக்கும், ஏமாந்து போவார்கள்.

இந்த எழுத்தில் பெயரைக் கொண்ட ஆண்கள், உற்பத்தி, பொறியியல், சந்தைப்படுத்தல், தரகு மற்றும் விளையாட்டு போன்ற தொழில்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை கவர்ச்சி அல்லது ஊடக துறையில் பயன்படுத்தலாம்

W என்றார் எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை

* அதிர்ஷ்ட நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை

* அதிர்ஷ்டமான நாள் புதன்

* அதிர்ஷ்ட எண் 5

* கால்நடைகள் அல்லது ஆசிரமங்களில் பால் தானம் செய்யுங்கள்

* புதன் கிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்யுங்கள்

* வாழை மரத்திற்கு சர்க்கரை கலந்த நீர் வழங்கவும்

*லெதர் பெல்ட், வாட்ச் அணிவதை, லெதர் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

* பஞ்ச முகி ருத்ராக்ஷ் மாலை அணியுங்கள்

* அசைவம், மதுபானம், புகையிலை மற்றும் தோல் பொருட்களை ஆகியவற்றைத் தவிர்க்கவும்

W என்ற எழுத்துக்களைக் கொண்ட பிரபலங்கள்: வசீம் அக்ரம், வஹீதா ரஹ்மான்

First published:

Tags: Numerology, Tamil News