முகப்பு /செய்தி /ஆன்மிகம் / நியூமராலஜி: உங்களது பெயர் S-ல் ஆரம்பிக்கிறதா.? உங்களின் குணங்கள் இப்படி தான் இருக்கும்.!

நியூமராலஜி: உங்களது பெயர் S-ல் ஆரம்பிக்கிறதா.? உங்களின் குணங்கள் இப்படி தான் இருக்கும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | S-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்.! இவர்களின் குணநலன்கள் என்ன.?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தற்போது ஜோதிடம் பார்க்கும் பழக்கம் மக்களிடம் எந்தளவிற்கு அதிகமாக உள்ளதோ, அதே அளவிற்கு நியூமராலஜி எனப்படும் எண் கணித முறை மீது பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். பிறந்த நேரம், பெயர் ஆகியவற்றைக் கொண்டு எந்த எண்கள் மற்றும் எந்த எழுத்துக்களில் உங்களது பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது நியூமராலஜி. இதன் மூலம் எதிர்கால வளர்ச்சி, குணாதிசயங்கள் போன்றவற்றை அறிந்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் அதிகம் உள்ளது.

    நியூமராலஜி பார்த்து பெயர் வைக்கும் பழக்கத்தை பலரும் கடைபிடித்து வருகின்றனர். இதன்படி குறிப்பிட்ட எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் தொடங்குவதற்கு ஏற்ப சில பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ஆங்கில எழுத்தான S-ல் ஒருவரது பெயர் தொடங்கினால் அவரது குணாதிசயங்கள் மற்றும் பண்புகள் எப்படி இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    S என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் மிக எளிதாக நண்பர்களை உருவாக்கி கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் நிறைந்தவர்கள். சில நேரங்களில் இவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக பிறரை பயன்படுத்தி கொள்பவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் வெகுஜனங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உண்மையிலேயே விசுவாசமானவர்கள் ஆனால் உறுதியற்ற தன்மை இவர்களது வளர்ச்சியை குறைக்கிறது.

    இவர்களின் நட்பு வட்டம் பெரிதாக இருக்கும் மற்றும் அனைவருடனும் எளிதாக நெருங்கி பழகும் நட்பு மனப்பான்மை காரணமாக இவர்கள் ஒரு டீமில் இருந்தால் அதன் தலைவராக எளிதாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இவர்கள் எந்த சூழ்நிலையையும் சரிசெய்யும் அளவுக்கு நெகிழ்வானவர்கள். இவர்கள் தங்களுக்குள் இருக்கும் சுயநலத்தை முற்றிலும் ஒதுக்கி வைத்தால் மிகவும் வெற்றிகரமானவர்களாக வலம் வருவார்கள். S லெட்டரை தங்கள் பெயரின் முதலெழுத்தாக கொண்ட பலர் வெற்றிகரமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களாக உள்ளனர். இந்த எழுத்தை கொண்ட மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம். இவர்கள் எப்போதும் உயர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    S என்பதை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்கள் முக்கியமான கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, நீலம் போன்ற பிரகாசமான வண்ணங்களை அணிவது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும். இவர்கள் அழகான பெற்றோர்களாக இருப்பார்கள், சிறந்த குழந்தைகளையும் பெறுவார்கள். இவர்கள் சொந்த ஊரில் அல்லது வெளிநாட்டில் நல்ல அதிர்ஷ்டத்துடன் கூடிய வேலைகளை பெறுவார்கள். இவர்களின் வாழ்க்கை துணை செழிப்பை அடைய இவர்கள் வாழ்வில் சமமாக பங்களிப்பார்கள்.

    பரிகாரங்கள்:

    - ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யவும்

    - சூரிய பகவானுக்கு நீர் வைத்து அவர் நாமத்தை சொல்லவும்

    - பணியிடத்தில் வடக்கு நோக்கிய சுவரில் செயற்கை சூரியகாந்தியை வைக்கவும்

    - வாரத்திற்கு ஒரு முறையாவது குளிக்கும் நீரில் மஞ்சள் பொடியை கலந்து குளிக்கவும்

    - லெதர் அல்லாத பேக் அல்லது வாலட்-ஐ எப்போதும் வைத்திருங்கள்

    - அசைவம், மது, புகையிலை, விலங்குகளின் தோல், லெதரை தவிர்க்கவும்

    First published:

    Tags: Numerology, Tamil News