முகப்பு /செய்தி /ஆன்மிகம் / O மற்றும் P-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

O மற்றும் P-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | O மற்றும் P-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்.! இவர்களின் குணநலன்கள் என்ன.?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

O என்ற ஆங்கில எழுத்து:

பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், இந்த நபர்கள் தங்களின் சுயத்தை முக்கியத்துவமாகக் கொண்டவர்கள். ஆனால் மிகவும் தைரியமானவர்கள். இவர்களுடைய வாழ்க்கையில் நிறைய ஏற்ற தாழ்வுகளைக் காண்பதுண்டு. எப்படி இருந்தாலும், இறுதிவரை நம்பிக்கையை கைவிட மாட்டார்கள். இந்த ஆளுமைப் பண்பு இவர்களை மிக மோசமான தாழ்வான நிலையிலிருந்து மீண்டு வரச் செய்கிறது. இந்த நபர்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந்து அதிக எண்ணிக்கையிலான நண்பர்களை மட்டுமல்லாமல் எதிரிகளையும் உருவாக்குகிறார்கள். அதே போல, வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளால் அவர்கள் பெரும்பாலும் ஏமாற்றம் அடைகிறார்கள். அதில் இருந்து வெளிவர நீண்ட நேரம் எடுத்தாலும், இது இவர்களுக்கு நல்ல பாடமாக, சிறந்த அனுபவமாக மாறுகிறது. அதுவே அவர்களை புத்திசாலித்தனமான நபர்களாகவும் மாற்றுகிறது. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடைமுறை என்ற அணுகுமுறையே அவர்களின் வாழ்க்கையின் மிகப்பெரிய பலம். இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்களின் லட்சியங்கள் அவர்களுக்கு நல்ல முன்னேற்றம், வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்று, வாழ்வை செல்வச் செழிப்பாக மாற்றும்.

அதிர்ஷ்ட நிறங்கள் – வான் வெள்ளை

எப்போதும் ஒரு கைக்குட்டையை வைத்திருக்க வேண்டும்

P என்ற ஆங்கில எழுத்து:

உங்கள் பெயரின் முதல் எழுத்து P என்று தொடங்கினால், இந்த எழுத்துக்களில் பெயர்கள் தொடங்கும் நபர்கள் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், எதைப் பற்றியும் பதற்றம் கொள்ளாமல் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். இவர்கள் உன்னதமானவர்கள் மற்றும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனம் படைத்தவர்கள். திறமைசாலிகள், யாரிடமும் தெரிந்தே தவறான எண்ணத்துடன் பழக மாட்டார்கள். இந்த எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் தூய எண்ணங்கள் மற்றும் செயல்களைக் கொண்டுள்ளனர். இவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் சோகமாக இருக்க மாட்டார்கள். தனிப்பட்ட விதமாக ஏதேனும் பெரிதாக இழந்தால் கூட நண்பர்களுக்கு உதவி செய்வார்கள். பெரும்பாலும் அமைதியான சூழலில் இருக்க விரும்புகிறார்கள்.

P என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு, கடவுள் நம்பிக்கை அதிகம். இவர்கள் அனைத்து சடங்குகளையும் பின்பற்றுவார்கள். மேலும், வளமான வாழ்வு, திருப்தியான குடும்பம், அதிர்ஷ்டம், வளர்ச்சி மற்றும் செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களின் நேர்மறை ஆற்றல் மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். எளிதில் ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டவர்கள் மற்றும் கவர்ச்சியானவர்கள். இந்த எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்ட பெண்கள் வாழ்க்கைத் துனைய்க்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பொதுவாக அதிர்ஷ்டம் அதிகரிக்கிறது. அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் சாதனை செய்வார்கள். வெற்றியைப் பெறுவதற்கு P என்ற எழுத்தில் தொடங்கும் வணிகத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

அதிர்ஷ்ட எண்கள் – மஞ்சள் மற்றும் பிங்க்

சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்

செயற்கை நகைகளுக்கு பதிலாக, வெள்ளி, தங்கம் மற்றும் வைர நகை அணியலாம்

கலசத்தில் தண்ணீர் வைத்து, வட கிழக்கு பகுதியில் வைக்கலாம்

கால்நடைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்

First published:

Tags: Numerology, Tamil News