ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

M மற்றும் N-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

M மற்றும் N-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | M மற்றும் N-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்.! இவர்களின் குணநலன்கள் என்ன.?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூமராலஜி பார்த்து பெயர் வைப்பது பலருடைய வழக்கமாக இருக்கிறது. இதன்படி குறிப்பிட்ட எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் தொடங்குவதற்கு ஏற்ப சில பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.

உங்கள் பெயரில் M இருந்தால்:

இந்த எழுத்துக்களில் தொடங்கும் நபர்கள செல்வாக்கு நிறைந்தவராகவும், கனிவான இதயம் கொண்டவராகவும், தாராளமான மனம் உள்ளவராகவும் மற்றும் ஒழுக்கமானவராகவும் இருப்பார்கள். இவர்கள் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் அவர்களின் நட்பு வட்டம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் தங்கள் சொந்த விருப்பத்தால் ஏற்படலாம். மேலும் வணிகத்தில் ஈடுபடுவதால் உங்களுக்கான பலன்கள் உங்களை தேடி வரும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிறப்பம்சங்கள்:

M என்கின்ற எழுத்து கொண்டவர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சரியான முடிவை எடுக்கும் அபார திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும், இவர்கள் புத்திசாலிகளாகவும், அழகானவர்களாகவும், அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த எழுத்தை கொண்டவர்கள் செய்ய வேண்டியவை:

1. வீட்டில் துளசி செடியை வையுங்கள்

2. விலங்குகளுக்கு எப்போதும் உணவளிக்கலாம்.

3. தோல் பெல்ட் வாட்சுக்கு பதிலாக மெட்டாலிக் வாட்ச் அணியுங்கள்

4. அனாதை இல்லத்தில் வீட்டு பராமரிப்பு பொருட்களை தானம் செய்யுங்கள்.

5. அசைவம், மதுபானம், புகையிலை ஆகியவற்றைத் தவிர்க்கவும்

உங்கள் பெயரில் N இருந்தால்

இந்த எழுத்து கொண்டவர்கள் தடைகள், கஷ்டங்கள், இழப்புகள் மற்றும் போராட்டங்களை தங்களது வாழ்வில் அதிகம் கொண்டிருப்பார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களின் வலுவான ஆளுமை திறன் மற்றும் உறுதிப்பாடு இந்த சிரமங்களைச் சமாளிப்பதற்கு மிகவும் உதவுகிறது. மேலும், அவர்களை களத்தின் நாயகர்களாக மாற்றுகிறது. இவர்களை அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பிடிக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பச்சாதாபத்தை வெளிப்படுத்துவதற்கும் இந்த தனித்துவமான திறனைக் கொண்டுள்ளனர். எனவே சமூகத்தில் சிறந்த நண்பர்கள் குழுவை பெறுவார்கள். இவர்கள் முற்றிலும் வீட்டுக்கு அடங்கிய நபர்களாகவும், எளிமையானவர்களாகவும், படைப்பாற்றல் கொண்டவராகவும் மற்றும் மரியாதைக்குரியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் விளையாட்டு, டிசைனிங், ஃபேஷன், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

அதிர்ஷ்டம் தருபவை

இந்த எழுத்து கொண்டவர்கள் புதனின் ஆற்றலை அதிகரிக்க உங்கள் பையில் ஒரு ருத்ராட்சத்தை வைத்துக் கொள்வது நல்லது. மேலும், வேலை செய்யும் மேஜையில் சிறிய மூங்கில் செடியை வைத்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட தரும் நிறங்கள்: பச்சை மற்றும் வெள்ளை

அதிர்ஷ்டமான நாள்: புதன்

அதிர்ஷ்ட தரும் எண்: 5

First published:

Tags: Numerology, Tamil News