நியூமராலஜி பார்த்து பெயர் வைப்பது பலருடைய வழக்கமாக இருக்கிறது. இதன்படி குறிப்பிட்ட எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் தொடங்குவதற்கு ஏற்ப சில பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.
பெயரில் K இருந்தால்:
இந்த எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் வாழ்வில் பல தடைகளை கடக்க வேண்டியிருக்கும். தங்களுக்கான நல்ல நேரம் குறித்து பல மாற்றங்களை இவர்கள் அனுபவித்திருப்பார்கள். அதாவது, ஒரு தருணம் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும், அதற்கு அடுத்த கணமே துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எப்போதுமே ஒரு நெகட்டிவ் சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், இது எதிர்காலத்தில் தோல்வியை தரக் கூடும் என்பதால் இதை தவிர்த்து விட்டு, ஆக்கப்பூர்வமான சிந்தனையை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் மற்றொரு பக்கம் இருக்கின்ற இருளின் சக்தியை உணரக் கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு என்பதாலேயே இவர்கள் எப்போதும் மிக அதிகமாக நெகடிவ் சிந்தனை கொண்டிருப்பார்கள்.
எதிலும் மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனம் உடையவர்களாக இருப்பார்கள். இதேபோல சகிப்புத்தன்மை இவர்களிடம் மிகுதியாக இருக்கும். தங்களுடைய ஆறாம் அறிவை இவர்கள் தட்டி எழுப்ப வேண்டும். இது வாழ்வில் புதிய உச்சம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைத்தாலும் அதை உணரக் கூடிய பக்குவம் இவர்களுக்கு இருக்காது. ஆனால், வீட்டில் உள்ள மற்றவர்களின் நடவடிக்கையை கண்காணித்து பாராட்டிக் கொண்டிருப்பார்கள்.
* வீட்டின் வடக்குப்புற சுவரில் நீருற்று வைக்க வேண்டும்.
* இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும்.
* எப்போதும் பையில் சில்வர் நாணயம் வைத்துக் கொள்வது பலன் தரும்.
* எப்போதும் வெள்ளை மற்றும் லேசான நிறம் கொண்ட ஆடைகளை அணியலாம்.
* கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு பால் தானம் செய்யவும்.
* அசைவம், மது, புகையிலை மற்றும் தோல் உற்பத்தி பொருட்களை தவிர்க்க வேண்டும்.
பெயரில் L இருந்தால்:
பெயரின் தொடக்கத்தில் L கொண்டிருக்கும் நபர்கள் உணர்வு மிகுந்தவராகவும், தத்துவவாதிகளாகவும் இருப்பார்கள். தனக்கென்று ஒரு தத்துவத்தை பின்பற்றுவார்கள். அந்த கொள்கையின் அடிப்படையில் தான் வாழ்க்கையை வாழுவார்கள். இவர்களுக்கென்று உயரிய சிந்தனைகளும், பெரிய நோக்கங்களும் இருக்கும். இவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களது எண்ணங்கள் தெளிவானதாக இருக்கும் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விலகி, சுய சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள்.
இவர்களுக்கு குருவின் பலன் மிகுதியாக கிடைக்கும். ஆகவே, காலைப் பொழுதில் குரு மந்திரம் உச்சரிக்க வேண்டும். நெற்றியில் குங்குமம் வைப்பது நற்பலனை தரும். கல்வியாளர், பயிற்சியாளர், பயிற்றுநர், தத்துவ போதனையாளர், எழுத்தாளர், இயக்குநர் போன்ற பணி செய்பவர்களாக இருப்பார்கள். அதேபோல நிறுவனங்கள், பள்ளி, பயிற்சி பள்ளிகள், ஜாதக கணிப்பு, வாஸ்து, விளையாட்டு பயிற்சியாளர், பயிற்சி நிலையம் போன்ற தொழில்களையும் நடத்தலாம்.
ஆசிரமங்களில் மஞ்சள் நிற பருப்பு தானம் செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் மஞ்சள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News