ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

C மற்றும் D-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

C மற்றும் D-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | இங்கே ஆங்கில எழுத்தான C மற்றும் D-யை பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களின் குணநலன்கள் மற்றும் எப்படி இருப்பார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக வைக்கும் பழக்கம் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

  அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த நம்பர் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் வாழ்வில் நடப்பது அனைத்தும் அதிர்ஷ்டமாக இருக்கும். இங்கே ஆங்கில எழுத்தான C மற்றும் D-யை பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களின் குணநலன்கள் மற்றும் எப்படி இருப்பார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

  தனிப்பட்ட ஆல்ஃபாபெட் எழுத்துக்களின் முக்கியத்துவம் மற்றும் பொருள்...

  C-யை பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்கள் இபப்டி தான் இருப்பார்கள்:

  பெயரின் முதலெழுத்தில் C-யை கொண்டவர்கள் மிகவும் மாறக்கூடிய தன்மையை கொண்டவர்கள். இவர்கள் மிக நெகிழ்வானவர்களாகவும் இருப்பார்கள். பிடிவாத குணத்திற்கும் இவர்களுக்கும் வெகு தொலைவு. தாராள மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் கொள்கைகளில் பிடிப்பு கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள எந்த உச்சநிலைக்கும் செல்வார்கள். இவர்களது அபார மூளைத்திறன் காரணமாக தங்களுக்கான எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள முனைவார்கள். C என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் எப்போதும் வழக்கமான செயல்முறையை விட ஆக்கப்பூர்வமான முறையில் முக்கிய விஷயங்களை அணுகுவார்கள்.

  இவர்கள் எப்போதும் மனதளவில் விழிப்புடன் இருப்பார்கள். வாக்குவாதங்களில் இவர்களை வெல்வது மிகவும் கடினம். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அதற்கேற்ப செயல்பட்டு சவால்களை வென்று தங்களுக்கு சாதகமாக விஷயங்களை மாற்றிக் கொள்வார்கள். அமைதியையும், செழிப்பையும் தரும் வரை வெற்றி என்பது திருப்திகரமாக இருக்காது என்ற உண்மையை இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

  பரிகாரம்: காலையில் குளித்து முடித்தவுடன் கடவுளை வணங்கி நெற்றியில் சந்தனம் அணிவது அதிர்ஷ்டத்தை தரும்

  அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் ஊதா

  D-யை பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்கள் இபப்டி தான் இருப்பார்கள்:

  பெயரின் முதலெழுத்தில் D-யை கொண்டவர்கள் எப்போதும் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் கட்டுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த குணம் அவர்களை மகத்தான வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறது. D என்பது எந்த உயரத்திற்கும் ஒருவரை அழைத்து செல்ல கூடிய அதிர்ஷ்ட எழுத்து ஆகும். இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் தங்கள் கருத்துக்களை உண்மையானதாக மாற்றும் திறன் கொண்டவர்கள். மேலும் இவர்கள் பொருள் சார்ந்தவர்கள் மற்றும் வாழ்க்கை முழுவதும் செழிப்பை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

  பல நேரங்களில் இவர்கள் வார்த்தைகளை அளந்து அளந்து பேசினாலும் சிறந்த தலைவர்களாக மற்றும் சேல்ஸ்மேனாக இருக்கும் D-யை முதல் எழுத்தாக கொண்ட நபர்கள் நிறைய விஷயங்களை வெளிப்படுத்துவார்கள். பெரும்பாலும் உண்மையை உணர்ந்து அதன் பக்கம் நிற்கும் இவர்கள், தங்களுடன் இருக்கும் மற்றவர்களையும் உண்மையின் பாதையில் இருக்க தூண்டுவார்கள். பிறருக்கு சரியான மரியாதை கொடுக்கும் இவர்கள் தங்களுக்கும் உரிய மரியாதையை கிடைக்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பார்கள். இவர்களின் நகைச்சுவை உணர்வு பிறரை ஈர்க்கும் ஆளுமை கொண்டவர்களாக வைக்கிறது. சமூகத்தில் மிக உயர்ந்த இடம் மற்றும் பணியிடத்தில் கண்ணியமான இடத்தையும் பெறுவார்கள்.

  பரிகாரம்: உங்கள் சுற்றுப்புறத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முக்கியத்துவம் கொடுங்கள்

  அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம் மற்றும் கிரே

  First published:

  Tags: Numerology, Tamil News