ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

A மற்றும் B-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

A மற்றும் B-ஐ பெயரின் முதலெழுத்தாக கொண்டவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | இன்றைக்கு உங்களது எழுத்துக்கள் A, B எழுத்துக்களில் ஆரம்பித்தால் என்னென்ன குணாதிசயங்கள்? இருக்கும் என நாம் அறிந்துக் கொள்வோம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைக்கு ஜோதிடம் என்பது மக்களின் வாழ்க்கையில் ஒன்றாகப் பிணைந்துவிட்டது. வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் முதல், என்ன வேலையைத் தொடங்கினாலும் ஜோதிடம் பார்த்துத் தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. இதுப்போன்று ஜோதிடம் பார்க்கும் பழக்கம் ஒருபுறம் அதிகரித்துவரும் அதே வேளையில் நியூமராலஜி எனப்படும் எண் கணித முறையும் மக்களிடம் அதிகரித்து வருகிறது.

  குறிப்பாக பெரும்பாலான இந்தியர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதற்கு என்ன எழுத்துக்களில் ஆரம்பிக்கலாம்? என்பது முதல் எதனை எழுத்துக்களில் பெயரைத் தொடங்க வேண்டும்? என்பது வரை கேட்டறிகின்றனர். இவ்வாறு நியூமராலஜி படி குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போது அவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும் என்று நம்புகின்றனர். இன்றைக்கு உங்களது எழுத்துக்கள் A, B எழுத்துக்களில் ஆரம்பித்தால் என்னென்ன குணாதிசயங்கள்? இருக்கும் என நாம் அறிந்துக் கொள்வோம்.

  எழுத்து A :

  உங்களது பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் சிறந்த குணங்கள் மற்றும் எண்ணங்கள் கொண்ட நபர்களாக இருப்பீர்கள் என அர்த்தம். இதோடு வாழ்க்கையில் அதிக உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இதோடு தனித்துவமான முறையில் செயல்படும் திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள். தங்கள் வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய அணுகுமுறையை நீங்கள் கொண்டிருக்கும் மனநிலை இருக்கும். வாழ்க்கையில் தன்னம்பிக்கை, எதையும் கண்டுபிடிக்கும் திறன், பகுத்தறிவு சிந்தனைகள் போன்ற குணங்கள் எப்போதும் உங்களுக்கு இருக்கும். இதுப்போன்ற நல்ல குணங்கள் இருந்தாலும் சில நேரங்களில் தேவையில்லாத கோபமும் ஏற்படும். இருந்தப்போதும் நிதானமாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவீர்கள்.

  பரிகாரம்: சூரிய பகவானுக்கு தினமும் நீரால் அபிஷேகம் செய்யவும்.

  அதிர்ஷ்டமான நிறங்கள் : மஞ்சள் மற்றும் நீலம்

  எழுத்து B :

  உங்களது பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் அற்புதமான எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள் என அர்த்தம். செயல்களை விரைந்து செயல்படுத்தும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். எதையும் தைரியத்தோடு எதிர்க்கும் சிந்தனை உங்களுக்கு ஏற்படும். சிறந்த கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும், பிறருக்கு உதவும் குணாதிசயம் உங்களுக்கு ஏற்படும். பகுத்தறிவு சிந்தனையுடன் எந்த பிரச்சனைகளையும் எதிர்க்கொள்ளும் திறன் உள்ளவர்களாக இருப்பீர்கள். தனது சுய அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். தன்னம்பிக்கை இல்லாத மனநிலையோடு வாழ்க்கையை சில நேரங்களில் வாழக்கூடிய மனநிலை ஏற்படும். உங்களைப் பிரச்சனைகள் மட்டும் சூழ்ந்திருந்தால், அனைத்தையும் தைரியத்துடன் எதிர்க்கொள்ளக்கூடிய மனநிலையை உங்களுக்கு ஏற்படும்.

  பரிகாரம்: சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, சிவ மந்திரத்தை உச்சரிக்கவும்.

  அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம் மற்றும் வெள்ளை.

  First published:

  Tags: Numerology, Tamil News