இன்றைக்கு ஜோதிடத்தை எந்தளவிற்கு மக்கள் நம்புகிறார்களோ? அந்த அளவிற்கு எண் கணிதத்தையும் அதாவது நியூமராலஜியையும் மக்கள் நம்புகின்றனர். வாழ்க்கையில் புதிதாக எந்த விஷயத்தையும் ஆரம்பிப்பது முதல் என்ன துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்பது வரை நியூமராலஜி பார்த்துத் தான் முடிவு எடுக்கிறார்கள். இன்றைக்கு 1, 4, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்ன பலன்களை அடையப் போகிறார்கள் என அறிந்துக் கொள்வோம்..
எண் 1 ல் பிறந்த பலன்: இன்றைய தேதியில் பிறந்தவர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான யோசனைகள் அதிகரிக்கும் நாளாக அமையும். உயர் படிப்புகளுக்கு அவசியமான மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைத் தேர்வு செய்வது நல்லது. எழுத்து மற்றும் வாய் மொழியாக நீங்கள் கொடுக்கும் உத்தரவாதங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
எண் 4 ல் பிறந்த பலன்: நீங்கள் தனித்துவமானத் தன்மையோடு, எல்லாவற்றையும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் திறனைப் பெற்றிருப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் அதிகரிக்கும். அனைத்து வேலைகளையும் பாசிடிவ்வாக செய்யும் மனநிலை ஏற்படும். கடினமாக உழைக்கும் அறிவைப் பெறுவீர்கள்.
இதேப்போன்று எண் 8 என்பது அறிவு மற்றும் கல்விக்கான எண்ணாக உள்ளது. இந்த எண்ணில் பிறந்தவர்களுக்க வாழ்க்கையை ஒழுங்கமைக்கும் திறன் உள்ளது. மேலும் எண் 9 தேதியில் பிறந்தவர்கள் அறிவார்ந்த திறன்கள், மன விழிப்புணர்வு மற்றும் கூர்மையான கற்றல் திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள். குழு விவாதங்களில் கவனம் செலுத்தவும்.
இதேப்போன்று எண்களின் கூட்டுத்தொகையானது இந்த எண்களாக இருக்கும் போது, வெளிநாட்டில் படிக்க அல்லது உயர் படிப்பு மற்றும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வியில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
உங்களின் மொபைல் எண்களில் ஏதாவது ஒன்று அல்லது கூட்டுத்தொகையானது 1, 4, 8 மற்றும் 9 என்ற எண்களாக இருந்தால் வாழ்க்கையில் எந்தவித கஷ்டமும் ஏற்படாது. நினைத்தக் காரியமும் நிறைவேறும். கிரகங்களின் அபரிமிதமான சக்தியையும் ஆற்றலையும் நீங்கள் பெறுவீர்கள்.
நன்கொடைகள் மற்றும் பரிகாரங்கள்:
* பிச்சைக்காரர்களுக்கு அரிசியைத் தானம் செய்யுங்கள்
* குரு மந்திரத்தை உச்சரித்து குரு அல்லது துளசி செடிக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
* சூரிய பகவானை வணங்கவும்.
* தூங்கும் முன்னதாக ஒரு நோட்டில் உங்களது விருப்பங்களை எழுதவும்.
* ஒவ்வொரு புதன்கிழமையும் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலைப் போட்டு வழிபடவும்
* அசைவம், மதுபானம், புகையிலை பிடிக்கும் பழக்கத்தை இன்றிலிருந்து கைவிடவும்.
இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்து வந்தாலே எவ்வித பிரச்சனையும் உங்களது வாழ்க்கையில் இனி ஏற்பட வாய்ப்பில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News